செவ்வாயில் பனிக்கட்டிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

செவ்வாயில் பனிக்கட்டிகள்!

Added : ஜன 25, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
செவ்வாயில் பனிக்கட்டிகள்!

செவ்வாய் ஒரு வறண்ட கிரகம் என்று தான் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், செவ்வாயின் நிலப்பகுதிக்கு அடியில் ஐஸ் கட்டிகள் உறைந்த நிலையில் இருக்கக்கூடும் என்பதை, அண்மையில், 'நாசா'வின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அனுப்பிய செவ்வாய் ஆய்வுக் கலனின் ரேடார் கருவி, செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து, தகவல்களை அனுப்பியது.
அந்தத் தகவல்களை வைத்துப் பார்க்கையில், ஆய்வு செய்த சில இடங்களில், செவ்வாயின் நிலப் பரப்புக்கு அடியில், 90 மீட்டர் அளவுக்கு தடிமனான பனிக்கட்டிப் பாறைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அந்த பனிக்கட்டிகள் மண், கல் கலக்காமல் துாய்மையான நிலையில் இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இது உறுதி செய்யப்பட்டால், பூமியிலிருந்து செவ்வாய்க்கு செல்ல இருக்கும் எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, குடிநீருக்கு பிரச்னை இருக்காது.
எங்கே தோண்டினால் பனிக்கட்டிப் பாறைகள் இருக்கும் என்பதை, பூமியிலிருக்கும் விஞ்ஞானிகளே துல்லியமாக சொல்லி அனுப்பி விடுவர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை