சில வினாடிகளில், 'சார்ஜ்' ஆகும் பஸ்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சில வினாடிகளில், 'சார்ஜ்' ஆகும் பஸ்!

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சில வினாடிகளில், 'சார்ஜ்' ஆகும் பஸ்!

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழக வளாகத்திற்குள், கடந்த சில ஆண்டுகளாக, பரிசோதனை முறையில் தானோட்டி வாகனம் ஒன்று இயங்கி வருகிறது.
மாணவர்களும், பேராசிரியர்களும் பயன்படுத்தும், 'புளூ டிராம்' என்ற இந்த வாகனத்தில், அண்மையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.
மின்சாரத்தில் இயங்கிய அந்தக் கால, 'டிராம்' வண்டிகளைப் போல இயங்கினாலும், இந்த வண்டிக்கு மேலே மின் கம்பிகள் இல்லை. மாறாக, ஒவ்வொரு நிறுத்தத்திலும் இதற்கு மின்னேற்றம் செய்யப்படுகிறது.
வெறும், 20 வினாடிகளில், 2 கி.மீ., துாரம் செல்வதற்குத் தேவையான மின்சாரம், வாகனத்தின் மின்கலன்களில் ஏறிவிடும்.
அடுத்த நிறுத்தத்தில், பயணியர் ஏறி அமர்வதற்குள் மீண்டும் மின்னேற்றம் நிகழ்ந்துவிடும்.
இந்த பரிசோதனை வெற்றி பெற்றால், நகர நாடான சிங்கப்பூர் முழுவதும், பயணியர் போக்குவரத்துக்கு புளூ டிராம் வண்டிகளை அந்நாட்டு அரசு களமிறக்கக்கூடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
30-ஜன-201811:28:18 IST Report Abuse
Gopi அற்புதம். இங்கே செய்யுங்கள் இளைஞர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X