சென்னையில் பயங்கர நாசவேலைக்கு சதி? Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சென்னை,பயங்கர நாசவேலை,சதி?

சென்னையில், பயங்கர நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டும் வகையில், அசாமில் இருந்து ரயிலில், அதிநவீன துப்பாக்கிகளை கடத்தி வந்த, இருவர் சிக்கினர். அவர்களிடமிருந்து, நான்கு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும், பாக்., உளவாளிகளா என, 'கியூ' பிரிவு போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,பயங்கர நாசவேலை,சதி?


தமிழகத்தில், சென்னை உட்பட, பல இடங் களில், பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவாளிகள், சதி திட்டம் தீட்டி வருவதாக, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, 2012 செப்., 18ல், 'கியூ' பிரிவு போலீசார், பாக்., உளவாளியாகச் செயல்பட்ட தாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத் தைச் சேர்ந்த, தமின் அன்சாரியை கைது செய்தனர்.


பின், 2014ல், சென்னை, மண்ணடியில், மருந்து வியாபாரி போல பதுங்கிஇருந்த, இலங்கையைச் சேர்ந்த, பாக்., உளவாளி, ஜாகீர் உசேனை, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலை அடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல, சென்னை, சாலிகிராமத்தில் பதுங்கி இருந்த, அருண் செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.


எலும்பு முறிவுபின், சென்னையில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளிகளான, அப்துல் சலீம், சிவபாலன் உள்ளிட்டோரும் கைதாகினர். இவர்களிடமிருந்து, கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்களில், கொடுங்கையூரில் பதுங்கி இருந்த, ரபீக் என்பவர், போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின், அவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இவர்களுக்கு எல்லாம் தலைவனாக, இலங்கையில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரி, சிக்கந்தர் ஷா செயல்பட்டது தெரிய வந்தது.இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு

முன், சென்னை, பெரம்பூரில் வசித்து வரும், நெல்லையைச் சேர்ந்த, பிரதீப், 27, என்பவரை செயின் பறிப்பு வழக்கில், மாதவரம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


அப்போது, பாக்., உளவாளி, ரபீக்குடன், பிரதீப்புக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை, தங்களின் நாசவேலைக்கு பயன்படுத்த, ரபீக் மற்றும் அவரது கூட்டாளிகள் தீர்மானித்தனர்.


தங்களின் பேச்சை கேட்டால், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும்,ஆசை காட்டினர். 'பீஹார் மற்றும் அசாம் மாநிலங் களில் உள்ள, தங்கள் கூட்டாளிகள் துணை யுடன், ரயிலில் கள்ள நோட்டு மற்றும் துப்பாக்கிகளை கடத்தி வந்து, சென்னையில், தாங்கள் தெரிவிக்கும் நபர்களிடம் தர வேண்டும். 'அதற்கு, ஒவ்வொரு முறைக்கும், 50 ஆயிரம் ரூபாய் தரப்படும்' என்றும், கூறினர்.சம்மதம் தெரிவித்த பிரதீப், தனக்கு கூட்டாளியாக, சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்த, கமல், 28, என்பவரை சேர்த்துக் கொண்டார்.


உஷார்இருவரும், சிறையில் உள்ள ரபீக்கை, மனு போட்டு அடிக்கடி சந்தித்தது, தமிழக உளவு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரித்த போது, இருவரும், நான்கு நாட் களுக்கு முன், அசாம் சென்று இருப்பதை, டி.ஜி.பி., அலுவலக, ஐ.ஜி., ஒருவர் உறுதி செய் தார். உடன், ஏழு போலீசார் அசாம் சென்றனர். அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, பிரதீப் மற்றும் கமல் ஆகியோர், துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டுகளுடன், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை திரும்பு வதை உறுதி செய்தனர்.


கடந்த, 23ம் தேதி இரவு, இருவரும் ரயில் ஏறிய போது, அசாம் சென்ற போலீசாரில், நான்கு பேரும், அதே ரயிலில் பயணித்தனர். வேப்பேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், வீரக்குமாருக்கு தகவல் தெரிவிக்க, அவர் போலீசாருடன் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தயாராக இருந்தார்; அங்கு காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


நேற்று காலை,9மணிக்கு,கவுகாத்தி - திருவனந்த புரம் எக்ஸ்பிரஸ்ரயில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தை அடைந்த தும், போலீசார் உஷாராகினர். அங்கிருந்து ரயில் புறப்பட தாமதமானதால்

Advertisement

சந்தேகமடைந்த பிரதீப், போலீசார் சுற்றி வளைத்து இருப்பதை அறிந்து, திடீரென, தன் கூட்டாளி கமலுடன் தப்பி ஓடினார்.


போலீசார் இருவரையும், சினிமா பாணியில் கீழே தள்ளி, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐந்து துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், நான்கு லட்சம் ரூபாய் கள்ள நோட்டு மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ள நோட்டுகள் அனைத்தும், புதிய, ரூ.2,000 நோட்டுகள் போல இருந்தன.


கிடுக்கிப்பிடிஅசாம் மாநிலத்தில், துப்பாக்கிகள் மற்றும் கள்ள நோட்டுகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது; சென்னையில், இதற்கு முன், கள்ள நோட்டு மற்றும் துப்பாக்கிகள், யார் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விபரங் களை, போலீசாரிடம் பிரதீப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. மேலும், பிரதீப் மற்றும் கமலின் பின்னணியில், பாக்., உளவாளிகள் மற்றும் நக்சலைட்கள் உள்ளனரா எனவும், கியூ பிரிவு போலீசார், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர்.


துப்பாக்கி விலை எவ்வளவு?போலீசாரிடம், பிரதீப் அளித்துள்ள வாக்குமூலம்:ஐந்து துப்பாக்கிகளையும், அசாமில் உள்ள ரபீக்கின் கூட்டாளியிடம், 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அத்துடன், பாகிஸ்தானில் அச்சடித்து கொண்டு வரப்பட்ட, நான்கு லட்சம் ரூபாய் கள்ள நோட்டையும் வாங்கி வந்தோம். இவற்றை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என, ரபீக்கிடம் இருந்து, எங்களுக்கு கட்டளை வரும். பின், அவர்களிடம் ஒப்படைத்து, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


குவியும் பாராட்டுஹிந்து பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப் பட்டு வந்த, போலீஸ் பக்ருதீன் என்பவரை, இன்ஸ்பெக்டர், வீரக்குமார் தலைமையிலான போலீசார், பெரியமேட்டில் பிடித்தனர். தற்போது, பிரதீப் மற்றும் கமலையும், அவரது தலைமையிலான போலீசார் கைது செய்துள்ள தால், போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
27-ஜன-201822:36:24 IST Report Abuse

anbuவன்முறையையும் ,பயங்கர வாதத்தையும் ஆதரிப்பவர்கள் ,ஊக்குவிப்பவர்கள், கண்டிக்காமல் வேறுகாரணங்களை கூறி நியாயப்படுத்துபவர்கள், உதவி செய்பவர்கள் , வன்மையாக கண்டிக்காமல் திசைதிருப்பி சம்பந்தமில்லாத சப்பைக்கட்டு காரணங்களை கூறுபவர்கள் யாவரும் சந்தேகத்துக்கு உட்பட்டவர்களே. வன்மையாக கண்டிப்பவர்கள் ஆர் எஸ் எஸ் என்று சாயம் பூசி நழுவ வேண்டாம்.சரியை சரியென கூறவேண்டும்.தவறை தவறென சுட்டிக்காட்டவேண்டும்.தெரிந்து செய்யும் பயங்கர ,வன்செயல் செய்பவர்களை வன்மையாக ,காட்டமாக கண்டிக்கவேண்டும்.அதுதான் பகுத்தறிவு. அதை விட்டு விட்டு ஆர் எஸ் எஸ் ,காவி ,மோடி என்று திசை திருப்ப வேண்டாம்.

Rate this:
chails ahamad - doha,கத்தார்
27-ஜன-201819:40:50 IST Report Abuse

chails ahamadகருத்தாளர்கள் திரு. அன்பு . லண்டன் , திரு. பன்னாடை பாண்டியன் . சீனா அவர்கள் இருவரும் உண்மையை சொல்லும் போது அதை எதிர்த்து கருத்து பதிந்திட வரிந்து கட்டி கொண்டு வருகின்றார்கள் , தவறை தவறாக ஏற்று கொள்ளும் மனபக்குவம் இவர்களிருவருக்கும் தந்திட இறைவனை வேண்டும் அதே வேளையில் , ஆர் எஸ் எஸ் சிந்தாந்தம் பற்றி அறியாதது போல் பாசத்தை அந்த இயக்கத்தின் மீது பொழிந்தே தேசப்பற்று இயக்கமாக முன்னிறுத்த பாடுபடுகின்றார்கள் , இந்தியர்களின் ஒற்றுமையை குலைக்கின்ற இயக்கமாகவும் , தேசத்தந்தையாக போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்களை கொலை செய்த கோட்சேவுக்கு கோவில் கட்டி கும்பிடும் இயக்கமாக காணப்பட்ட ஆர் எஸ் எஸ் , அவர்களது பார்வையில் தேசப்பற்று இயக்கமாம் , நம்பி விட்டோம் . எனக்கு எதிர் கருத்து பதிந்த இந்த இருவரின் மீதும் எனக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை , கருத்துக்கு எதிர்கருத்து பதிவதை கண்ணியத்துடன் பதிவிட்டால் அவர்களும் எனது சகோதரர்களே என்பதில் மகிழ்வடைவேன் .

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஜன-201805:24:40 IST Report Abuse

Pannadai Pandianஇந்திய கலாச்சாரத்தை காக்கும் தருணம் இது....

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-ஜன-201819:29:26 IST Report Abuse

Krishnamurthy Venkatesanதீவிரவாதத்திற்கு துணை போகும் எவரும், எந்த மதத்தினரும், எந்த ஜாதியை சேர்ந்தவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்காக யாரும் வக்காலத்து வாங்காதீர்கள். அப்பாவி மனிதரின் உயிருடன் விளையாடும் தீவிரவாதி எவரும் தூக்கில் போட தகுதியானவர்களே. தீவிரவாதத்தை வேருடன் களைந்து இந்தியாவை அமைதி பூங்காவாக மற்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் கடமை உண்டு. .

Rate this:
Anand - chennai,இந்தியா
27-ஜன-201816:01:42 IST Report Abuse

Anandஇங்கு Raj Pu வெறிபிடித்து இங்கு அலைகிறது. உஷாராக இருக்கவும்

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஜன-201816:00:59 IST Report Abuse

ரத்தினம்நல்லவன் அவர்களே, தென் மாவட்டத்துக்காரர்கள் என்றால் ஏன் நல்ல அபிப்ராயம் இல்லை? நீங்கள் மட்டும் தான் நல்லவரா ? சிலரை தவிர எல்லோரும் நல்லவரே

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜன-201815:41:43 IST Report Abuse

Endrum Indianபுடிச்சது 2 துப்பாக்கி இதுக்கு இவ்வளவு அல்டாப்ப்பா??? அவர்கள் வசிக்கும் அந்த இடத்தில் சென்று பார்த்தால் இப்படி பலப்பல துப்பாக்கிகள், குண்டு நிறைய நிறைய கிடைக்கும். இதற்காகத்தான் சொல்வது நமது "Indian Constitution" "Indian Penal Code" குப்பையில் போட்டு விட்டு மிக எளிதான, அதாவது 1 ) கைது, தண்டனை ஒரு வாரத்திற்குள், 2 ) தேசத்துரோகம், தீவிரவாதம், கற்பழிப்பு, ஊழல் -மரண தண்டனை என்று மாற்றப்படவேண்டும். இவங்களையெல்லாம் மனம் மாறி நல்லவர்களாக மாறுவார்கள் என்று ஜெயிலில் ஹைதெராபாதி பிரியாணி போட்டு வைத்திருப்பார்களாம் வருடக்கணக்காக. ஒரு மதத்தால் மனம் கேடு கெட்ட பாதையில் சென்று விட்டால் அவன் மனம் மாறவே மாட்டான், அவனை நீண்ட நெடுங்காலம் ஜெயிலில் வைத்திருந்தால் அந்த இடம் அவன் லாட்ஜ் போல் ஆகி அங்கிருந்து வசதியாக என்ன செய்ய வேண்டுமானாலும் செய்து கொண்டு இருப்பான் வெளி உலகத்தொடர்பு இருக்கும் வரை. மரணம் ஒன்றே சரியான நடவடிக்கை இந்த மாதிரி மனம் குன்றியவர்களுக்கு.

Rate this:
Gopalsami.N - chennai,இந்தியா
27-ஜன-201815:11:33 IST Report Abuse

Gopalsami.Nஉளவாளிகளை பிடித்த பின் இத்தனை நாள் சிறையில் வைத்திருந்ததே தவறு. சுட்டுக்கொன்று இருக்கவேணும்.

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-ஜன-201815:47:27 IST Report Abuse

Sanny கோபாலசாமி ஐயா, அவசரப்பட கூடாது, சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனை புடிக்கணும். புலனாய்வுக்கு முக்கிய தகவல்கள் கிடைப்பதே இந்த சின்ன மீன்களால்தான்....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜன-201813:40:14 IST Report Abuse

Nallavan Nallavanதமிழகம் உண்மையில் அமைதி பூங்காவாகத்தான் இருந்தது ..... வெள்ளையர்களிடம் "சுதந்திரம் வேண்டாம்" என்றும் "எங்கள் மாகாணத்தை விட்டாவது வெளியேற வேண்டாம்" என்று கும்பிட்டுக் கேட்டுக்கொண்ட கும்பலின் வாரிசுகள் (பெரியார் கூறிய கண்ணீர்த் துளிகள் என்றால் புரியும்) வளர்த்து விட்ட கொடுமை இது .... இந்த சுறுசுறுப்பு கூட அதிமுக ஆளும் கட்சியாக இருப்பதால் சாத்தியமாயிற்று ....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜன-201813:24:32 IST Report Abuse

Nallavan Nallavanஆக, தேசத் துரோகத்துக்கு அஞ்சாதவர்கள் பல இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, சில ஹிந்துக்களும் தான் என்கிற உண்மை இதன்மூலம் அறியப்படுகிறது ....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27-ஜன-201821:49:27 IST Report Abuse

Agni Shivaநல்லவன் அவர்களே..அவர்கள் ஹிந்து பெயர்களில் இருக்கும் திருட்டு கிறிஸ்த்தவ குஞ்சுகள், திருமாவை போல, சீமானை போல. உண்மையான ஹிந்து பொய்க்கும், அஹிம்சைக்கும், பாவத்திற்கும் பயப்படுவான்....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜன-201813:22:40 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ சென்னை, பெரம்பூரில் வசித்து வரும், நெல்லையைச் சேர்ந்த, பிரதீப், 27, என்பவரை செயின் பறிப்பு வழக்கில், மாதவரம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அப்போது, பாக்., உளவாளி, ரபீக்குடன், பிரதீப்புக்கு பழக்கம் ஏற்பட்டது. //// தமிழகத்தின் தென் மாவட்டத்து (மதுரை மற்றும் அதன் தெற்கே) பெரும்பாலான நண்பர்கள் மீது எனக்கு என்றுமே நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை .... எனக்கும் குமரி மாவட்ட வாசக அன்பர் ஒருவருக்கும் இது குறித்து விவாதம் நடந்ததுண்டு .... இந்த மாவட்டங்கள் சாராத, குறிப்பாக சென்னை வாசகர்கள் உண்மையை அறிவார்கள் ....

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement