உடம்பை குறையுங்க!| Dinamalar

உடம்பை குறையுங்க!

Added : ஜன 28, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
  உடம்பை குறையுங்க!


உடம்பை குறையுங்க!

'பிரதமர் மோடியை அதிகம் சந்திக்காமல் இருப்பதே நல்லது' என, சில, பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களும் நினைக்கின்றனர். அதிலும், தொப்பையும், தொந்தியுமாக உள்ள அமைச்சர்களை கேட்டால், 'ஏன் தான், மத்திய அமைச்சரவைக் கூட்டம் வாரந்தோறும் நடக்கிறதோ' என, புலம்புகின்றனர்.எடை அதிகமாக உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பார்க்கும் போது, 'ஏன் உடம்பை குறைக்க மாட்டேன் என்கிறீர்கள்? வென்னீர் குடியுங்கள்; யோகா செய்யுங்கள். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்குகிறார் மோடி.சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர், உமா பாரதி பங்கேற்றார். பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, நடக்க முடியாமல், மெதுவாக தட்டுத் தடுமாறி வந்தார். இதை பார்த்த மோடி, 'இப்படி இருந்தால் எப்படி; எடையை குறையுங்கள்' என்றார்.இதோடு நிற்காமல், 'அமித் ஷாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்' என்றும் அறிவுரை வழங்கினார். அதிக எடையுடன் இருந்த, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, இப்போது எடையை சற்று குறைத்துள்ளார். 20 கிலோ குறைந்து விட்டதாக கூறுகிறார். வெந்த காய்கறிகள், யோகா, நடைபயிற்சி என, கடும் பயிற்சியில் உள்ளார் அமித் ஷா.

முதல்வர் வீட்டில் கட்கரி படம்?
சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரை சந்தித்தார், மத்திய அமைச்சர், நிதின் கட்கரி. 'விரைவில், என் புகைப்படத்தை, உங்கள் முதல்வர், பழனிசாமி வீட்டில் பார்க்கலாம்' என, சிரித்தபடியே கூறினார். 'அதெப்படி சாத்தியம்' என, அந்த பத்திரிகையாளர் கேட்க, கட்கரி, விஷயத்தை விவரித்தார்.கங்கை- - காவிரி இணைப்பு என, காலம் காலமாக பேசி வருகின்றனர். அதெல்லாம் இப்போதைக்கு முடியுமா என்பதை விடுத்து, அக்கம்பக்கம் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபடுகிறது. வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரை, அருகில் உள்ள மாநிலத்திற்கு திருப்பி விடலாம் என்பது, கட்கரியின் திட்டம்.இதன்படி, கடலில் வீணாகும் ஆந்திராவிலுள்ள கோதாவரி நதி நீரை, பென்னார் நதியில் திருப்பி விட்டு, பின், அது காவிரியில் வந்து சேரும்படி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாம். இதனால், 300 டி.எம்.சி., நீர், கோதாவரியிலிருந்து போலாவரம் திட்டம் மூலமாக, நாகார்ஜுன அணை வழியாக, கிருஷ்ணா நதியில் வந்து சேரும்.அங்கிருந்து, சோமசீலா அணை வழியாக, தமிழகத்தில் உள்ள கல்லணைக்கு, 100 டி.எம்.சி., நீர் வரும்.
இதனால், தமிழக - -கர்நாடக நதி நீர் பிரச்னை தீர்ந்து விடும். இந்த நதி நீர், கால்வாய் மூலமாக அல்லாமல், குழாய்கள் மூலமாக வருமாம்.இத்திட்டத்தை, தமிழக முதல்வர், பழனிசாமியிடம், கட்கரி, சமீபத்தில் விபரமாக கூறியதுடன், மத்திய அரசு, 90 சதவீத செலவை ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதை கேட்டு, மகிழ்ச்சி அடைந்த பழனிசாமி, 'என் வீட்டில் இரு புகைப்படங்களை மாட்டியுள்ளேன். அதில், ஒன்று, ஜெ., படம்; மற்றொன்று, திருப்பதி பெருமாளின் படம். இத்திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால், மூன்றாவதாக, உங்கள் படத்தையும் மாட்டுவேன்' என்றாராம். 'முடியாத காரியம் என எதுவுமே, மோடி அரசில் கிடையாது' என, சிரித்தபடியே, அவருக்கு பதிலளித்து உள்ளார், கட்கரி.

இப்போதைக்கு விருப்பமில்லை!
ராகுல், காங்., தலைவராகி விட்டாரே தவிர, அவருக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையாம். இதை தெரிவித்தவர், ராகுலுடன், ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த, காங்., மூத்த தலைவர். ராகுலின் பொதுக்கூட்ட பேச்சை எழுதிக் கொடுத்தவர் இவர்.
'அரசியல் என்றாலே, ஆட்சியில் அமர்வது தானே, லட்சியமாக இருக்க வேண்டும்; ராகுலுக்கு, இப்போதைக்கு அந்த ஆசை இல்லை' என்கிறார், இந்த தலைவர்.
'காங்கிரசில், வயதான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை ராகுலுக்கு பிடிக்கவில்லை; காரணம், காலத்தோடு ஒன்றி, அவர்கள் அரசியல் நடத்த தயாராக இல்லை. இவர்களை, முக்கிய பதவிகளிலிருந்து நீக்கினால் பிரச்னை வரும்; மேலும், மேடத்திற்கு இது பிடிக்காது. அதனால், இந்த வயதானவர்கள் காலம் முடியட்டும் என, காத்திருக்கிறார் ராகுல்' என்கிறார் இவர்.
அந்த தலைவர், மற்றொரு விஷயத்தையும் கூறினார். 2019 லோக்சபா தேர்தலில், ராகுலுக்கு அதிக இஷ்டமில்லை. இதற்கு அடுத்த, 2024 தேர்தலில் கவனம் செலுத்தப் போகிறாராம்.
'எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு வயதாகிவிடும்; அவர்கள் காலமும் அதற்குள் முடிந்து விடும்' என்கிறாராம். 'காலம் முடிந்துவிடும் என்றால் என்ன' எனக் கேட்டால்,
'நீங்களே புரிந்து கொள்ளுங்கள்; இதையெல்லாம் விளக்கி கூற முடியாது' என, பதில் வருகிறது, அந்த, காங்., தலைவரிடமிருந்து.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
01-பிப்-201805:06:44 IST Report Abuse
Rangiem N Annamalai நதிகள் இணைத்தால் அது சாதனை தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை