தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு

Updated : ஜன 28, 2018 | Added : ஜன 28, 2018 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் பஸ் கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டது. மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆக இருக்கும்


அதிகரிப்பு

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜன.,20 ம் தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.


பரிசீலனை:

இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார்.


குறைப்பு:

ஓபிஎஸ் பேசிய சிறிது நேரத்திலேயே, உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நகர மற்றும் மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக இருக்கும். சென்னை மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்சமாக ரூ.22 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.58 ஆகவும், புறவழிசாலை பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.85 ஆகவும் , விரைவு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.75 ஆகவும், அதிசொகுசு இடைநில்லா பஸ்களில் 30 மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.85 ஆகவும், அதிநவீன சொகுசு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண குறைப்பு நாளை (ஜன.,29) முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜன-201819:11:57 IST Report Abuse
மலரின் மகள் ஷேர் ஆட்டோ ஷேர் கால் டாக்சி களில் கி மீ 10 ருபாய் என்றால் சந்தோசமாக பயணிக்கும் இளைஞர்கள் அதிகம். JnNURM பேருந்துகளை பிரீமியம் நேரங்களில் இயக்கலாம். அவற்றில் குறைந்தது இருப்பது ரூபாயில் ஆரம்பித்து கூடுதலான ஒவ்வொரு கி மீ கும் ஐந்து ருபாய் வீதம் நூறு ரூபாய் வரை கூட கட்டணம் நிர்ணயித்து தாராளமாக இயக்கலாம். நிச்சயம் பயணிக்க நிறைய பெரு இருப்பார்கள். பேருந்துகளில் எத்துணை பேர் ஐ போன் களையும் விலையுர்ந்த சாம்சங் போன் களையும் பயன்படுத்தி கொண்டு பாருங்கள். ஆகா அவர்களுக்கு நல்ல சேவை சற்று அதிக விலையில் கிடைத்தால் கூட தாராளமாக ஏற்பார்கள். பெங்களூரு டெல்லி ஐராபாத்தில் நம்மவர்கள் தானே பேருந்தில் தாராளமாக கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கிறார்கள். அது பெரிய சுமையாக அவர்களுக்கு இல்லையே. தனியார் எஸ்பியர்ட் கம்பனிகளில் சிறிய நிறுவனங்களிலும் வேலை செய்வரால் மட்டுமே போக்குவரத்து கட்டணம் உயர்ந்தால் ஈடு செய்வது கஷ்டமாக இருக்கும். ஆகையால் அவர்கள் பயன்படுத்தும் பேருந்துகளை கட்டணம் உயராமல் வேறுவழிகளில் லாபம் சம்பாதிக்க முயலலாம். போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பலபேர் அவர்களுக்குரிய வேலைகளை செய்யாமல் அதிகாரிகள் சொல்கின்ற வேலைக்கு அமர்த்த படுகிறார்கள் என்று செய்திகள் வந்தவண்ணம் இருண்டஹனவே. அம்மா வீட்டுக்கு தமிழக காவலர்கள் விளக்கி கொள்ளப்பட்ட பொது போக்குவரத்து டிப்போக்களில் இறந்தவர்கள் ஷிபிட் முறையில் அங்கு காவலுக்கு அமர்த்தப்பட்டதாக செய்திகள் வந்ததே. இது போன்றெல்லாம் செய்யாமல், நிர்வாகம் செம்மை படுத்த படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201803:08:49 IST Report Abuse
ManiS Arivuketta Tamil makkalukku idhu podhadhu, thirumba aduthu DMK Ku vote pannum thirumba azhum. Idhugalykku evvaluvu pattalum buththi varadhu.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29-ஜன-201802:47:58 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இங்கே டவுன் பஸில் குறைந்த பட்ச கட்டணமே 10 , ஆனா அங்கே? அது சரி ஒரு ரூபாய் குறைச்சிட்டாங்களே என்று சந்தோஷ படுங்க மக்களே,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X