மத்திய பட்ஜெட்; தலைவர்கள் கருத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
மத்திய பட்ஜெட்;
தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட்டை வரவேற்றும், விமர்சித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

மத்திய பட்ஜெட்; தலைவர்கள் கருத்து


மத்திய அரசின் பட்ஜெட், புதிய இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில், விவசாயிகள், சாதாரண குடிமக்கள், தொழில் புரிவோர் என, அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கு தேவையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

-நரேந்திர மோடி, பிரதமர், பா.ஜ.,


விவசாயிகள், கிராமப்புற மக்களின் நலனை பெரிதும் ஆராய்ந்து, அதன் பின், பட்ஜெட் இறுதி வடிவம் பெற்றது. அனைத்து துறை, அனைத்து தரப்பு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பட்ஜெட்டாகவே உள்ளது.

-அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,

சிறகுகள் விரியும்!மத்திய அரசின் பட்ஜெட், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு புதிய சிறகுகளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் இலக்கை வேகமாக அடைய முடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

--அமித் ஷா தேசிய தலைவர், பா.ஜ.,

வளர்ச்சி பாதிக்கும்!பட்ஜெட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த அம்சமும் இல்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறவே மறந்துவிட்டது. கூடுதல் வரி விதிப்பின் மூலம், இறக்குமதி கடுமையாக பாதிக்கும். டாவோஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய அம்சங்கள், குறுகிய காலத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.- சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர், காங்.,மக்கள் நலன் சார்ந்தது!மத்திய பட்ஜெட்டில், விவசாயம் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய்க்கான, இலவச மருத்துவ காப்பீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாகவே இதை பார்க்கிறேன்.


நிதிஷ் குமார் பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

ஏமாற்று வேலை!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசு, நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. 2014 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையே, இந்த அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. மத்திய பட்ஜெட்டில், ஏழைகளுக்கு எதிரான அம்சங்களே அதிகம் உள்ளன. மோடி கூறிய நல்ல நாள் எப்போது வரும் என தெரியவில்லை. மொத்தத்தில் இது ஒரு ஏமாற்று பட்ஜெட். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்

தேர்தல் ஆதாயம்!விவசாயிகளின் வருமானத்தை, இரு மடங்கு உயர்த்துவதாக கூறிய மோடி அரசு, அதற்கான சிறு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வெற்று வாக்குறுதிகளை தந்து, நாட்டு மக்களை ஏமாற்றி வரும், பா.ஜ., அரசு, மீண்டும் ஒரு பொய்யை கட்டவிழ்த்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, வாய் ஜாலங்களால் மக்களை ஏமாற்றும் வகையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டி.ராஜா மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட்

எதுவும் புதிதில்லை!மத்திய பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அல்லது செயல்படுத்தப்பட்ட பழைய திட்டங்களே, புதிய பெயரில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. பழங்கஞ்சியையே, புதிய பானையில் கொடுத்து, மக்களை ஏமாற்ற நினைப்பது வியப்பளிக்கிறது.
சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்.,

தக்க பாடம் புகட்டுவர்!சாமானியரின் எதிர்பார்ப்பை சிறிதும் பூர்த்தி செய்யாத இந்த பட்ஜெட்டால், நாட்டு மக்கள் மேலும் பாதிக்கப்படுவது உறுதி. பெண்கள், ஏழைகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இது மிகப் பெரிய ஏமாற்றத்தை

Advertisementஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., அரசின் இந்த துரோகத்திற்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

அகிலேஷ் யாதவ் தலைவர்,சமாஜ்வாதி
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்: அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு. தமிழகத்திற்கு அறிவித்த, எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை வரவில்லை. பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் பயணிக்க வைக்கும் திட்டங்கள் இல்லை. தமிழகத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.


தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர்: வரும், 2019ல், நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்: நாட்டின், வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற, ஆரோக்கிய பட்ஜெட். விவசாயிகளுக்கு, கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு, கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளது.


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: வேளாண் துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, மக்களுக்கு மகிழ்ச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி பட்ஜெட், இந்திய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது.


ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ: ரயில்வே துறையில், தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் காட்டுகிறது. மத்திய அரசின், மூன்றரை ஆண்டுகால தோல்வியை, பட்ஜெட் எதிரொலிக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன்: படுதோல்விகளை மூடி மறைக்கும் வேலையில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி ஈடுபட்டிருப்பதை, பட்ஜெட் அம்பலப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். புதுச்சேரிக்கு அதிக நிதிக்கிடைக்கும் என நம்புகிறேன்.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: மத்திய பட்ஜெட்டில், யூனியன் பிரதேசங்களான, டில்லி மற்றும் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ., கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-பிப்-201817:52:59 IST Report Abuse

PrakashPrakashin the budget how much sum should a minister and others should loot .Because public are very much disappointed due the results from the judiciary and the time they have taken and the expenses. meanwhile if our finance minister describe the sum prescribe the ratio all will be satisfied and there wont be any arguments.ok

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-பிப்-201816:18:46 IST Report Abuse

Endrum Indianஇங்கு வரவேண்டியது செய்தியாக மும்தாஜ் மம்தா, சொறிவால், பப்பு ஆகியவர்களின் (அ)நியாமான கமெண்ட், கொஞ்சம் ஜாலியாக படித்திருக்கலாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-பிப்-201815:50:36 IST Report Abuse

Endrum IndianUnion Budget 2018-2019 Synopsis GENERAL: Finance Minister says: • Indian economy is now 2.5 trillion dollar economy in the world and expected to become the fifth largest economy very soon. • We are not only focussing on 'Ease of Doing Business' but also 'Ease of Living' • Providing upto 5 lakh rupees per family per year for medical reimbursement, under National Health Protection Scheme. This will be world's largest health protection scheme. • We have managed to get children to school but quality of education still a concern • Govt. to contribute 12% of EPF contribution for new employees in all sectors. Women contribution to EPF reduced to 8% for first 3 years of employment • The Minimum Support Price of all crops shall be increased to at least 1.5 times that of the production cost • Allocation for SC welfare - Rs. 56,619 cr and Rs. 39,135 cr for ST welfare • Government to take all steps to eliminate use of crypto currencies which are being used to fund illegitimate transactions • Aadhaar goes Corporate - Govt will evolve a scheme to assign a Unique ID for companies too Revised emoluments for President - Rs. 5 lakh, Vice President - Rs. 4 lakh and Governor - Rs. 3.5 lakh • National Insurance Co, Oriental Insurance Co and United Assurance Co to be merged into one entity and subsequently listed Education: • To improve quality of teachers, Govt to launch integrated B.Ed programme. The govt aims to move from black board to digital board in schools by 2022 • Scheme for revitalizing school infrastructure, with an allocation of 1 lakh crore rupees over four years. Called RISE - Revitalizing Infrastructure in School Education • Govt will identify 1000 B-Tech students each year and provide them means to pursue PHDs in IITs and IISc • One Govt. medical college to be ensured for every 3 parliamentary constituencies by upgrading 24 district-level colleges • By 2022, every block with more than 50% ST population and at least 20,000 tribal people will have 'Ekalavya' school at par with Navodaya Vidyalas RAILWAY: No change in railway fares DIRECT TAX: Individuals: Tax Slabs remain unchanged as below: • Income up to Rs 2.5 lakh: NIL tax • Income between Rs 2.5 - 5 lakh: Tax at 5% • Income between 5 - 10 lakh: Tax at 20% • Income above Rs 10 lakh: Tax at 30% • Standard deduction of Rs 40,000 for salaried employees in lieu of transport and medical expenses • Long-term capital gains exceeding Rs. 1 lakh to be taxed at the rate of 10%. • Short term capital tax remains at 15% • For senior citizens, exemption of interest income on bank & post office deposits raised to Rs 50,000 • Senior citizens to get Rs 50,000 per annum exemption for medical insurance under Sec 80D Corporate: • 25% tax rate for companies reported turnover of upto Rs. 250 crores • 100% tax deduction for the first five years to companies registered as farmer producer companies with a turnover of Rs. 100 crore and above INDIRECT TAX: • Education and health cess to be increased from 3% to 4%

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X