பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய கலெக்டர்

Updated : பிப் 02, 2018 | Added : பிப் 02, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிளஸ் 2 மாணவர்கள்,Plus 2 students, கலெக்டர் லதா ,Collector Lata, திருப்புவனம் , Tiruppuvanam,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,Government Mens Higher Secondary School, சிவகங்கை கலெக்டர், Sivagangai Collector,  பாலகிருஷ்ணன்  ,Balakrishnan, தாய்மொழி,Mother Tongue,  ஆசிரியர் , Teacher,

திருப்புவனம் : திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வின் போது ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கலெக்டர் லதா தமிழ்பாடம் நடத்தியதையடுத்து மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

சிவகங்கை கலெக்டர் லதா நேற்று திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டடங்களை ஆய்வு செய்தார். கட்டடங்களின் சேதம் குறித்து தலைமையாசிரியர் பாலகிருஷ்ணனிடம் கேட்டார். பின் ப்ளஸ் 2 வகுப்பில் நுழைந்த கலெக்டர் தமிழ் பாட வகுப்பு நடந்து கொண்டிருப்பது அறிந்து சுமார் அரை மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

அப்போதே தேர்வு வைத்து, தாள்களை திருத்தி கையெழுத்திட்டார். தாய்மொழியான தமிழில் படித்து தான் கலெக்டர் ஆனதாகவும் தாய்மொழியில் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்று கொள்ள வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு மிகவும் அவசியம், தாய் மொழியில் கல்வி கற்க தயங்க கூடாது என அறிவுறுத்தினார்.

மதிய நேரம் என்பதால் பள்ளியில் சமைக்கப்பட்ட உணவை ருசி பார்த்தார். கலெக்டரின் திடீர் ஆசிரியர் பணியால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். கலெக்டருடன் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தாசில்தார் கமலா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
02-பிப்-201821:18:14 IST Report Abuse
Gunasekaran இப்படிபட்ட ஊழலற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் 80% உயர்ந்துவிட்டால். தமிழகத்தை யாரும் அசைக்கமுடியாது. வாழ்க அவர் தொண்டு.
Rate this:
Share this comment
Cancel
02-பிப்-201817:08:47 IST Report Abuse
அப்பு கலக்டரும் கள ஆய்வில் இறங்கிட்டாரு.. சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
02-பிப்-201815:30:02 IST Report Abuse
R.SUGUMAR சிவகங்கை கலெக்டர் லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,அனைத்து அரசாங்க ஊழியர்கள் இப்படி நடந்துகொண்டால் தமிழ் நாடு கண்டிப்பாக உயர்வுக்கு வரும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X