நிறம் மாறும், 'பச்சோந்தி' கருவிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிறம் மாறும், 'பச்சோந்தி' கருவிகள்!

Added : பிப் 02, 2018
Advertisement
நிறம் மாறும், 'பச்சோந்தி' கருவிகள்!

ஒரு தயாரிக்கப்பட்ட பொருளால், பச்சோந்தியைப் போல நிறத்தை மாற்றிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்... முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் அச்சிடப்பட்ட ஒரு பொருளின் நிறத்தை நினைத்தபடி மாற்றும் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின், எம்.ஐ.டி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.
இந்த அசத்தல் தொழில்நுட்பத்திற்கு, 'கலர் பேப்' என, பெயரிடப்பட்டு உள்ளது. திரையில் தெரியும் உருவங்களின் துல்லியத்தை அளக்க, 'பிக்செல்' என்ற அளவு பயன்படுவதைப் போல, முப்பரிமாண பொருட்களின் துல்லியத்தை அளக்க, 'வோக்செல்' என்ற அளவை பயன்படுகிறது.
கலர் பேப் முறையில் முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிடப்படும் பொருட்களின் மேற்பரப்பில் சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களைக் கொண்ட வோக்செல்கள் இருக்கும்.
இந்தப் பொருளை புறஊதா கதிர்களில் காட்டினால், மூன்று வண்ணங்களும் முடுக்கப்பட, நம் கண்களுக்கு நன்றாகத் தெரியும். புற ஊதாக் கதிரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பிறகும், அந்த மூன்று வண்ணங்களும் கலவையாக நமக்குத் தெரிந்தபடியே இருக்கும்.
அதேபோல நம் கண்ணுக்குத் தெரியும் ஒலியின் குறிப்பிட்ட அலைவரிசையை அந்த பொருளின் மீது பாய்ச்சும் போது, அதை மட்டும் நம் கண்ணுக்குத் தெரியாதபடி அணைக்கவும் முடியும். இந்த முறையில் நமக்கு வேண்டிய வண்ணத்திற்கு ஒரு பொருளை மாற்ற முடியும்.
இப்போதைக்கு எம்.ஐ.டி.,யின் தொழில்நுட்பம் மூன்று அடிப்படை நிறங்களை மட்டுமே கையாள்கிறது.
அதன் துல்லியமும் சற்று குறைவாகவே இருக்கிறது. ஆனால், மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் வண்ணங்களின் அளவை அதிகரிக்கவும், துல்லியத்தை அதிகரிக்கவும் முடியும் என்கின்றனர், எம்.ஐ.டி., விஞ்ஞானிகள்.
தினமும் பயன்படுத்தப்படும் கருவிகள் நன்றாக இருந்தாலும், அவை பழையவை என்பதாலேயே துாக்கி எறியும் கலாசாரம் உலகெங்கும் பரவி இருக்கிறது.
இந்த வண்ணம் மாற்றும் தொழில்நுட்பம், ஒரு பொருளின் நிறத்தை மாற்றி புதியது போல ஆக்கிவிடுவதால், அத்தகைய விரயங்களை தடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை