தோட்டத்தை பராமரிக்கும் ரோபோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தோட்டத்தை பராமரிக்கும் ரோபோ!

Added : பிப் 02, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தோட்டத்தை பராமரிக்கும் ரோபோ!

சிறிய தோட்டத்தை நடவு முதல், அறுவடை வரை செய்து பராமரிக்க, ஒரு ரோபோ வந்திருக்கிறது. 'கார்டன் ஸ்பேஸ்' என்ற பெயர் உள்ள இந்த ரோபோவை, உரிமையாளர் தனது மொபைல் மூலம் கண்காணிக்கலாம்.
ஒரு மொபைல் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டதும், அதன் மூலம் உரிமையாளருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது கார்டன் ஸ்பேஸ் ரோபோ.
அந்த செயலியில் என்ன செடிகளை நடப்போகிறார் என்பதை உரிமையாளர் பதிவு செய்ததும், அதை எங்கே, எப்படி நட வேண்டும் என ரோபோ வழி சொல்கிறது.
சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் இந்த ரோபோவுடன் ஒரு நீர் குழாயை இணைத்துவிட்டால் தோட்டத்தை வலம் வந்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறது. பூச்சிகள் வந்து அமர்ந்தால், நீரை பீய்ச்சியடித்து விரட்டுகிறது.
செடியில் விளைச்சலை எப்போது அறுவடை செய்யலாம் என்பதையும் உரிமையாளருக்கு நினைவூட்டும் இந்த ரோபோவில், 360 கோணத்திலும் சுழலும் வீடியோ மற்றும் புகைப்பட கேமராக்கள் உள்ளன.
மாதாந்திர சந்தா அடிப்படையில் இந்த ரோபோவை மேகக் கணினி சேவையுடனும் இணைத்து, தோட்டப் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை பெற முடியும்.
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுவோரை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, இப்போதைக்கு, 100 சதுர அடி தோட்டத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் என்கிறது, கார்டன் ஸ்பேசை தயாரித்துள்ள ஆஸ்திரேலிய நிறுவனம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை