பூமியை சூடேற்றும், 'சாண்ட்விச்'!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூமியை சூடேற்றும், 'சாண்ட்விச்'!

Added : பிப் 02, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பூமியை சூடேற்றும், 'சாண்ட்விச்'!

இன்று வீட்டிலும், உணவகங்களிலும் துரித உணவாக இருக்கும் சாண்ட்விச், புவி வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிப்பதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, பிரிட்டனில் மட்டும் சாண்ட்விச் தயாரிப்பதற்காக, 86 லட்சம் கார்கள் வெளியேற்றும் அளவுக்கு கரியமில மாசு காற்றில் கலக்கிறது.
வீடுகள், உணவகங்கள் என, பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு, 11.5 பில்லியன் சாண்ட்விச்கள் தயாராகின்றன.
இதை தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை அறிய மான்செஸ்டர் விஞ்ஞானிகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக, பிரிட்டனில் பரவலாக உண்ணப்படும் 40 வகை சாண்ட்விச்களை விஞ்ஞானிகள் கணக்கில் எடுத்துக் கொண்டனர்.
இவற்றில், எங்கும், எப்போதும் உண்பதற்காக முன்கூட்டியே முட்டை, பதப்படுத்திய இறைச்சி, சாசேஜ் போன்றவற்றால் தயாரித்து, குளிர்ச்சியூட்டி வைக்கப்படும் சான்ட்விச்களே அதிகம் சுற்றுச்சூழல் மாயை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இவற்றை தயாரிக்க ஒரு கார், 19 கி.மீ., துாரம் ஓடினால் ஏற்படும் கரியமில வாயுவுக்கு இணையான மாசுகள் காற்றில் கலக்கின்றன. மாறாக, பாலாடைக் கட்டி, முட்டை போன்றவற்றால் கொண்டு தயாரிக்கப்படும் சாண்ட்விச்கள் குறைவான மாசுபாட்டினை உருவாக்குகின்றன.
சாண்ட்விச்சை தயாரிக்க பயன்படும் பதப்படுத்திய இறைச்சியால் தான், அதிக மாசு ஏற்படுகிறது.
இவற்றோடு சீஸ், தக்காளி, லெட்யூஸ், ரொட்டி போன்ற இடு பொருட்களால் தான், அதிக மாசு ஏற்படுகிறது. சாண்ட்விச் தயாரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டில், 37 முதல் 67 சதவீதம் வரை இவையே காரணிகளாகின்றன.
மற்ற மாசுக் காரணிகளில் அவற்றை பெட்டிகளில், காகிதங்களில் அடைப்பது போன்றவற்றால், 8.5 சதவீத மாசு ஏற்படுகிறது.
இவற்றை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பல இடங்களில் எடுத்துச் செல்வதால் 4 சதவீத மாசும், கடைகளில் குளிரூட்டி வைத்து விற்பதால் 25 சதவீத மாசும் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாண்ட்விச்சில் பயன்படும் பொருட்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டும் கரியமில வாயு வெளியேற்றத்தில், 50 சதவீதத்தை குறைக்க முடியும் எனவும் மான்செஸ்டர் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X