பேரிடரிலிருந்து மீட்க உதவும் செயலி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பேரிடரிலிருந்து மீட்க உதவும் செயலி!

Added : பிப் 02, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பேரிடரிலிருந்து மீட்க உதவும் செயலி!

இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த இடங்களில் சிக்கியவர்களால், பல மணி நேரங்கள் உயிர் பிழைத்திருக்க முடிகிறது. அப்படி பிழைத்திருப்பவர்களுக்கு உரிய நேரத்திற்குள் முதலுதவி மற்றும் மீட்பு உதவிகள் சென்று சேராதபோது தான் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.
அப்படி பேரிடர்களில் சிக்கியவர்கள், தங்கள் இருப்பிடத்தை தெரிவிக்க உதவும் தொழில்நுட்பத்தை, ஸ்பெயினின் அலிகான்ட் ஆய்வுப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மொபைல் செயலி வடிவிலான இந்த தொழில்நுட்பம், ஆபத்துக்கு உதவி கோரும் சமிக்ஞைகளை 'வை--பை' மூலம் அனுப்பியபடி இருக்கும். இந்த சமிக்ஞைகளை தேடும் பணியில் உள்ளோர் ஒரு சிறிய ஆன்டெனா பொருத்திய கருவியை மொபைலில் இணைத்து பயன்படுத்தலாம்.
பேரிடரில் சிக்கியவர்களின் இருப்பிடத்தை காட்டித் தரும் சமிக்ஞைகள் கிடைத்ததும் உடனே அந்த இடத்தை நோக்கி சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆபத்தில் சிக்கியவர்கள் இந்த செயலியை முடுக்கி விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. மொபைல் டவர்கள் இல்லாத இடங்களிலும், குறைந்தது, 4 கி.மீ., தொலைவு வரை இந்தச் செயலியால் சமிக்ஞைகளை அனுப்ப முடியும்.
மலை, காடுகள், கட்டட இடிபாடுகள், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து மீட்க இத்தொழில்நுட்பம் உதவும் என, ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை