வந்துவிட்டது தானோட்டி படகு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வந்துவிட்டது தானோட்டி படகு!

Added : பிப் 02, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வந்துவிட்டது தானோட்டி படகு!

வானுார்தி, கார், லாரி என்று பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பம் வந்துவிட்டது. கப்பலில் அப்படி வராமலா இருக்கும்... இதோ வந்தாச்சு! அன்டார்டிகா கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக, ஆஸ்திரேலிய அரசின் அறிவியல் அமைப்பான, சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., ஆளில்லாமல் கடலில் பயணிக்கும் 'செயில் ட்ரோன்' என்ற ஆய்வுப் படகை பயன்படுத்தவிருக்கிறது.
சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., வும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஓர் அமைப்பும் கூட்டாக செயில் ட்ரோனை உருவாக்கியுள்ளன.
இந்த தானோட்டிப் படகில் உள்ள பாய்மரம், காற்றின் சக்தியை பயன்படுத்தி பயணிக்க, இதன் மீதுள்ள சூரிய மின் பலகை, பல கருவிகளுக்குத் தேவையான மின்சாரத்தை தரும்.
தன் இருப்பிடத்தையும், போக வேண்டிய கடல் பாதையையும் அறிய, செயற்கைக் கோளை செயில் ட்ரோன் பயன்படுத்துகிறது. எதிரே வரும் படகுகள், பனிப் பாறைகளை தவிர்க்க உதவும் உணரி போன்ற கருவிகள் இப்படகில் இருக்கின்றன. தேவைப்பட்டால், ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக் கோள் வழியே, படகை செலுத்தவும் முடியும்.
அன்டார்டிகா பகுதியின் வானிலை, கடல் நீரிலுள்ள கரியமிலம் மற்றும் இதர தன்மைகளை அளக்கும் கருவிகள் செயில் ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ளன.
இரவு - பகல் பாராமல் கடலின் தன்மைகளை தன் கருவிகள் மூலம் உணர்ந்து, அந்த தகவல்களை கரையிலிருக்கும் ஆய்வகத்திற்கு தொடர்ந்து அனுப்ப வல்லது செயில் ட்ரோன்.
'இதுவரை கடல் குறித்து பெற முடியாத தகவல்களை இந்த தானோட்டிப் படகு தொழில்நுட்பம் மூலம் அறிவியல் உலகம் பெற முடியும்' என்கிறார், சி.எஸ்.ஐ.ஆர்.ஓ.,வின் ஆய்வுத் தலைவரான ஆண்ட்ரியாஸ் மருசோஸ்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை