விபத்தில் காயமடைந்த நண்பனை தோளில் சுமந்து சென்ற இளைஞர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காயமடைந்த நண்பனை தோளில் சுமந்து சென்ற இளைஞர்

Updated : பிப் 03, 2018 | Added : பிப் 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு மருத்துவமனை, Government Hospital,திருப்பூர்,Tirupur, லியோ, மதுரை,Madurai, பழனி, பனியன் கம்பனி ,பைக் விபத்து ,Bike Accident,ராக்கியாபாளையம் ,Rakkiyapalayam,  மருத்துவமனை, Hospital,நண்பன் விபத்து,Friend accident, Leo,Palani, Banian company,

திருப்பூர்;திருப்பூரில், வாகனம் மோதி காயமடைந்தவரை, மருத்துவமனைக்கு தோளில் சுமந்து வந்தவரால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையை சேர்ந்தவர் லியோ, 21. காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு அருகேயுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடன், வேளாங்கண்ணியை சேர்ந்த பழனி, 23, வேலை செய்கிறார். நேற்று காலை இருவரும், நல்லுார் அருகே ரோட்டோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ஒரு பைக், லியோ மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த லியோ, மயக்கமடைந்து கீழே விழுந்தார்.அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு, ஒரு காரில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவமனைக்குள் கார் சென்றால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்றுகூறி, அதன் டிரைவர், இருவரையும் மருத்துவமனை நுழைவாயில் அருகே இறக்கி விட்டு சென்றார்.காரிலில் இருந்து இறங்கிய பழனி, காயமடைந்த லியோவை, தனது தோளில் சுமந்து, அவசர சிகிச்சைப்பிரிவை நோக்கி வேகமாக ஓடினார்.அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பணியிலிருந்த மருத்துவர்கள், 'காயமடைந்த நபரை, முறையற்ற வகையில், இதுபோல் சுமந்து வரக்கூடாது,' என்று, அவருக்கு அறிவுறுத்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-201802:01:41 IST Report Abuse
Mani . V இந்த "டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் இந்தியா" என்று சொன்ன ஆளை யாராவது பார்த்தீங்களா? (என்னது நீங்களும் அந்தாளைத்தான் தேடுகிறீர்களா?).
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
04-பிப்-201801:15:14 IST Report Abuse
Kuppuswamykesavan உற்றதோழன் அவர். பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை