மத்திய அரசை தட்டி கேட்போம்: பன்னீர்செல்வம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசை தட்டி கேட்போம்: பன்னீர்செல்வம்

சென்னை : ''தமிழக மக்களின் உரிமைக்கு பாதிப்பு வந்தால், ஜெ., வழியில், மத்திய அரசை தட்டிக் கேட்போம்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.

மத்திய அரசை, தட்டி ,கேட்போம், பன்னீர்செல்வம்


சென்னையில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு பணியில் இருப்போர், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பணி நேரத்தில் தவறு செய்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் யார் ஆட்சியிலிருந்தாலும், தமிழக மக்களின் உரிமைக்கு பாதிப்பு வந்தால், தட்டிக் கேட்டு, ஜெ., நல்லாட்சி நடத்தினார்.

விசாரணை


அவர் வழியில் நாங்களும், மக்களுக்கு பிரச்னைகளை உருவாக்கும் திட்டமாக இருந்தால்,

அதை திருத்திக் கொள்ளும்படி, மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.இதில், மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. யார் தவறு செய்தாலும், தட்டிக் கேட்கும்அதிகாரம், மாநில அரசுக்கு உண்டு.
மதுரையில், பொதுமக்களுக்கு, பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

என்ன காரணத்தால், மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது என்பது, விசாரணைக்கு பின் தெரிய வரும். அமைச்சர்கள் உதயகுமார், ராமச்சந்திரன் பார்வையிட்டு, அரசுக்கு விளக்கம் அளிப்பர்.

திட்டங்கள் அடிப்படையில், தமிழகத்திற்குரிய நியாயமான பங்கை பெற, மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும், கட்சி விதிகளுக்கு மாறாகநடந்தவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும், இரு மாவட்டங்கள் மீதம் உள்ளன.

Advertisement


நடவடிக்கை

அங்கும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் நீக்கப்பட்ட பின், காலி இடங்களுக்கு உரிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நமக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசிடம் கேட்கிறோம்; அவர்கள் தர மறுக்கின்றனர். அதை பெற, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு, உரிய விளக்கம் கேட்கப்பட்டு, கட்சியினருக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VKP - TIRUCHIRAPALLI,இந்தியா
05-பிப்-201814:05:22 IST Report Abuse

VKPஒரு வேளை மத்திய அரசுக்கு முன் தரையில் குப்புற படுத்து சிபிஐ விசாரணை வருமானவரி சோதனைக்கு பயந்து கையை காலை தரையில் தட்டி தட்டி அழுவாரோ என்னமோ.... இதுக்கெல்லாம் நீங்க தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டு அவர் தமிழ் நாட்டு மக்களுக்கு எதோ நல்லது செய்ய போறார்னு நெனைச்சா அதுக்கு அவர் பொறுப்பில்லை

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
04-பிப்-201820:48:00 IST Report Abuse

GB.ரிஸ்வான் இவர் தட்டி கேட்பதற்குள் அப்படி நினைக்கும் போதே வருமான வரி இவர் வீட்டு கதவை தட்டும் ....

Rate this:
rajan - kerala,இந்தியா
04-பிப்-201820:34:31 IST Report Abuse

rajanபார்த்து பரிமாறப்பா. நீ தட்டி கேக்கிற அதே வேகத்தில அவுக லேசா தட்டினா கூட அந்த கணபதியால கூட தடுக்க முடியாது மொத்தமா பன்னீர் தெளிச்சுடுவாங்கப்பா

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X