நூறு நாள் வேலை திட்டம் ராகுல் ஏற்படுத்துவாரா மாற்றம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நூறு நாள் வேலை திட்டம் ராகுல் ஏற்படுத்துவாரா மாற்றம்?

Added : பிப் 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நுாறு நாள் வேலை திட்டத்தில், ஏமாற்றம் அடைந்துள்ள கிராம பெண்கள், சமீபத்தில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர், ஜான்சிராணியை முற்றுகை யிட்டனர்.

தங்களின் குறைகளை பட்டியலிட்டு, காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கு அனுப்பி வைக்கும்படியும், பார்லிமென்டில், காங்கிரஸ் குரல் கொடுக்கும்படியும் வலியுறுத்தினர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்து வருகிறது. கடந்த, 2006ல், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் துவக்கப்பட்ட, இத்திட்டத்தை செயல்படுத்தியதில், தமிழகம் முதலிடம் பெற்று, தேசிய விருது பெற்றது.

இப்படி சிறப்பு பெற்ற தமிழகத்தில், குறிப்பாக, தென் மாவட்டங்களில், நுாறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், சில மாதங்களாக, சரியான முறையில் செயல்படுத்தாத குறை நீடித்து வருகிறது. லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு, வேலை தராமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு, சம்பளப் பணமும், 3,000 முதல், 7,000 ரூபாய் வரை ஊதியம் நிலுவை
வைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நுாறு நாள் வேலைத் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும், 400 முதல், 1,000 பேர் வரை, வேலைக்கு சென்று வந்த கூலித் தொழிலாளிகள், தற்போது, வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் அமைப்பை பலப்படுத்தவும், மாவட்ட வாரியாக, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்யவும், மகளிர் காங்கிரஸ் தலைவர், ஜான்சிராணி, சமீபத்தில், 32 மாவட்டங்களில், சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது, அவரை முற்றுகையிட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பெண்கள், 'மத்தியில், காங்கிரஸ் அரசு அமைந்திருந்தபோது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பாட்டில் இருந்ததால், எங்களுக்கு வேலை கிடைத்தது.

'ஆனால், சில மாதங்களாக, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், திட்டப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வேலை கிடைக்காமல், நாங்கள் சிரமப்படு கிறோம்' என, கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.அதையடுத்து, மகளிர் காங்கிரசார், எந்தெந்த ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை சேகரித்துள்ளனர். அவற்றை பட்டியலிட்டு, ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பார்லிமென்டில், குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை