மீனாட்சி கோவில் மீது நடந்த தாக்குதல்: எச்.ராஜா ஆவேசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோவில் மீது நடந்த தாக்குதல்: எச்.ராஜா ஆவேசம்

Added : பிப் 05, 2018 | கருத்துகள் (250)
Advertisement
 பா.ஜ., எச்.ராஜா , மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,Madurai Meenakshi Amman Temple,  தீ விபத்து, மீனாட்சி கோவில் தாக்குதல், மதுரை கோவில் தாக்குதல், சுந்தரேஸ்வரர் சுவாமி,Sundareswarar Swamy, அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, மதுரை, மீனாட்சி கோவில்,BJP, H. Raja,  Amman Temple, Fire Accident, Meenakshi Temple Attack, Madurai Temple Attack, Hindu munnani,  Amman Shrine, Swami Sannidhi, Madurai, Meenakshi Temple,Amman Sannidhi,, Swami , அம்மன் கோவில், இந்து முன்னணி ,

மதுரை: தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பார்வையிட்ட பிறகு பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை கலெக்டர் கருத்தின்படி, தீ விபத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 7,500 சதுர அடி பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் தீ, புகை கிளம்பிய போது அங்கு இருந்த மூன்று அல்லது நான்கு பேர் ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளனர். எனவே இது விபத்தா அல்லது சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தீ விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் எங்கு உள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல, கோவில்கள், அறநிலைய துறையிடம் சிக்கியுள்ளன.
மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து உச்சகட்ட பாவ செயல். மாற்று வழிபாட்டு தலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் ஊளையிடும் அரசியல்வாதிகள் இப்போது எங்கே போனார்கள். மதுரை மீனாட்சி கோவிலில் கடைகளை யாருக்கு ஒதுக்கியுள்ளனர். இந்த விவரத்தை அதிகாரிகள் உடனே வெளியிட வேண்டும்.
மதுரை கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் கடைகள் இருக்க கூடாது என இந்து முன்னணி 1992ம் ஆண்டு முதல் போராடி வருகிறது. கோவில் நிர்வாகம், அலட்சியமாக, லாயக்கற்ற நிலையில் இருந்துள்ளது.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (250)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
11-பிப்-201808:25:55 IST Report Abuse
praj எச்.ராஜா ஆ.....வேசம்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
09-பிப்-201810:29:23 IST Report Abuse
Natarajan Ramanathan கருமுத்து தியாகராஜன் என்பவன்தான் அறங்காவலராக இருக்கிறான். அவன் நினைத்தால் அனைத்து கடைகளையும் முழுவதுமாக தடை செய்யலாமே
Rate this:
Share this comment
Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201809:40:23 IST Report Abuse
Munnamalaiஅறங்காவலருக்கு ஏதைய்யா அவ்வளவு அதிகாரம்? எல்லாம் HREB மற்றும் அரசியல் வாதிகளிடம்தான்....
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
07-பிப்-201815:05:59 IST Report Abuse
Kaliyan Pillai ஹிந்துக்களுக்கு சூடு சொரணையில்லை. கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் யாவும் களவாடப்பட்டு தற்சமயம் வெறும் வெண்கல சிலைகள் உள்ளன. கோவிலைச்சுற்றிலும் துலுக்கர்களே கடை வித்துள்ளனர். ஆனால் மசூதி வளாகத்தில் கிறித்துவ வளாகத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட மாற்று மதத்தினருக்கு அவர்கள் விட்டுத்தருவதில்லை. உண்டியலில் காசை கொட்டுகின்றனர். அது எங்கே போகிறது என்பதை பற்றி எவனும் கவலைப்படுவதில்லை. அரசியல்வாதி அதிகாரி பூசாரிகள் கூடுபோட்டு அள்ளிச்செல்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X