நிர்வாகிகள் கூட்டம்: ஸ்டாலின் மீது குவியும் புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் கூட்டம்: ஸ்டாலின் மீது குவியும் புகார்

Updated : பிப் 05, 2018 | Added : பிப் 05, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்டாலின்,Stalin, திமுக நிர்வாகிகள் , திமுக புகார்கள், ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar election, உள்ளாட்சித் தேர்தல் ,panchayat election,  லோக்கல் பிரச்னை,

சென்னை: ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்த பின், தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் உணர்வுகளை அறிந்து கொண்ட தி.மு.க., தலைமை, அவர்களை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், மாவட்ட வாரியாக சென்னைக்கு வரவழைத்து, கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியாத கட்சிப் பிரச்னைகளை, விலாவரியாக எழுதி, ஒரு பெட்டியில் போட்டு விடலாம் என, புதிய வழிமுறையையும் ஏற்படுத்தி இருக்கிறது தி.மு.க., தலைமை.


குவியும் புகார்கள்:அதன்படி, நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் ஏகப்பட்ட புகார்கள் குவிகின்றன. லோக்கலில் நடக்கும் அத்தனை அரசியலும், அந்த புகார் பெட்டியில் குவியும் கடிதங்கள் மூலம் தெரிய வருகின்றன.

இதையடுத்து, சரி செய்யக் கூடிய பிரச்னைகள் அனைத்தையும் அப்படி அப்படியே குறித்து வைத்துக் கொள்ளும் தி.மு.க., தலைமை, விரைவில் அதற்காக கமிட்டி ஒன்றை அமைத்து, அந்த கமிட்டியை மாவட்டம் தோறும் அனுப்பி, பிரச்னைக்குரியவர்களை அழைத்துப் பேசி சரி செய்யும் யோசனையில் உள்ளது.

இப்படி குவியும் லோக்கல் பிரச்னைகளுக்கு மத்தியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்தும் சிலர், புகாராக குறிப்பிட்டு கடிதங்களை பெட்டியில் போட்டிருக்கின்றனர். அதில், பெரும்பாலானவை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் செயல்பட்ட விதம் தவறு என்றே குறிப்பிட்டுள்ளனர்.அது குறித்து, நிர்வாகிகள் கூட்டத்திலேயே முறையான விளக்கம் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தி.மு.க., தரப்பில் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KV Pillai - Chennai,இந்தியா
11-பிப்-201803:28:42 IST Report Abuse
KV Pillai எந்த துறையிலும் வாரிசுகள் பெற்றவர்களை விட திறமை குறைந்தவர்களாகவே உள்ளனர். சோனியாவாவது ஓரளவு உடல் நிலை சீராக இருக்கும் போதே மகனை களத்தில் இறக்கி விட்டார். ராகுலுக்கும் அரசியல் கற்றுக் கொள்ள உதவ முடிகிறது. கலைஞரும் தனது மகனுக்கு முன்னரே இதைச் செய்திருக்கலாம். ஆனாலும் ஸ்டாலின் அவர்கள் அரசியலில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி நடை போடுவார் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
06-பிப்-201801:40:07 IST Report Abuse
jagan சொல்ல முடியாது...எல்லா புகார்களையும் வெள்ளை தாளில் எழுதுவதற்கு பதில் 2000 கரன்சி நோட்டுகளில் எழுதி போடவும் என்று காசு பார்த்தாலும் பார்த்திருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
05-பிப்-201816:56:01 IST Report Abuse
தமிழர்நீதி நீங்கள் சுட்டிக்காட்டும் குறை கொட்டி கொடுக்கும் பரிசு என்று பெட்டியில் எழுதி வையுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
05-பிப்-201816:44:15 IST Report Abuse
chails ahamad பெட்டியில் புகார்கள் குவியுதோ இல்லையோ திமுக வின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட , நாளைய ஆட்சியில் திமுக அமருவது உறுதி என்பதை உணர்ந்த சில திமுக விரோத அல்லக்கைகள் கண்டபடி இங்கே செயல் தலைவர் திரு . ஸ்டாலின் அவர்களின் மீதும் , திமுக வின் மீதும் புகார் கூறி ஒப்பாரி வைக்கின்றார்கள் , இதுபோன்ற ஒப்பாரிகளுக்கு பதிலாக கிடைத்திடும் வெகுமதிகள் மிகவும் மனதை கனக்கின்றது விடயமாகவே இருந்திடும் என்பதுடன் , எத்தனை எதிர்கட்சி அல்லக்கைகள் திமுக வை பற்றி வசை பாடினாலும் , தமிழக ஆட்சியில் திமுக அமருவது உறுதியாகும் .
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
06-பிப்-201811:50:13 IST Report Abuse
parthaஅடுத்த ஆட்சி திமுகதான் எங்கே கத்தாரிலா MR Chails???...
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-பிப்-201816:03:54 IST Report Abuse
Baskar பந்தா தலைவருக்கு பந்தா பண்ணவே நேரம் போதவில்லை.பின் எப்படி கட்சி வளரும்.என்றைக்கு இவர் வீரமணி திருமா வை.கோ இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறாரோ அதுவரை இவர்கட்சி வருகிற தேர்தலில் பயங்கர முடிவுகளை எதிர் நோக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-பிப்-201815:56:06 IST Report Abuse
Baskar எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டாய்.
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
05-பிப்-201815:56:06 IST Report Abuse
Kabilan E நிர்வாகிகள் தலைமைக்கு கப்பம் கட்டவில்லை என்றால் அவனுக்கு உடனே ஆப்பு வைக்கும் நாதஸ் சுடலை குடும்பம் இன்று இந்த செயல் படாத தலைவனின் மீது குவியும் புகார்களுக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா? அடிமை காவடி தூக்கம் உருப்படாத தொண்டனின் ஆதங்கம்...
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
05-பிப்-201815:52:01 IST Report Abuse
Kabilan E திமுக என்ன உன்னோட குடும்ப சொத்தா ? ஒழிஞ்சி போ ...
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
05-பிப்-201815:51:36 IST Report Abuse
Kabilan E இந்த ஊழல் பெருச்சாளியின் குடும்பம் திமுகவை விட்டு விலக வேண்டும் என்பதே உண்மை தொண்டனின் விருப்பம்...
Rate this:
Share this comment
Cancel
Kabilan E - Chennai,இந்தியா
05-பிப்-201815:51:11 IST Report Abuse
Kabilan E பின்னே இந்த ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்கார குடும்பம் முன்னேற அடிமை அல்லக்கை தொண்டன் எத்துனை காலம் நாயாய் உழைப்பான்...கண்டிப்பாக எரிமலை போல் மனக்குமுறல்கள் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை