கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து

Updated : பிப் 05, 2018 | Added : பிப் 05, 2018 | கருத்துகள் (38)
Advertisement
கோவில் கும்பாபிஷேகம்,  இஸ்லாமியர்கள்,Muslims,  சைவ விருந்து,   சவுந்திரநாயகி, அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் ,agastheeswarar Swami temple, அன்னதானம் , தலைவாழை இலை, முகமது பாரூக்,புதுக்கோட்டை அன்னவாசல் ,அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில், saiva feast, devotees, soundranayaki, agastheeswarar Swami temple, Annadhanam, head of the leaf, Mohammed baruk, Pudukkottai Annavasal, Ambika Sametha Agastheeswarar Swamy temple,Temple kumbabishekam,பக்தர்கள்,agastheeswarar Swami kovil,

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சைவ விருந்து பரிமாறி அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, பழமையான சவுந்திரநாயகி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதற்கு, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்ட போதே, பரம்பூர் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு, சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என, முடிவு செய்தனர்.அதன்படி, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோவிலுக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு, டேபிள், சேர் போடப்பட்டது. கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அனைவருக்கும் தலைவாழை இலையில், சைவ விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து, அன்னதான விழா ஏற்பாடு செய்த, முகமது பாரூக் கூறியதாவது:மத நல்லிணக்கம் என்பது, நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளம்.அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்துகிறோம். 5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, பெரும் மகிழ்வைத் தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
07-பிப்-201800:06:33 IST Report Abuse
Balamurugan Balamurugan இந்துக்களுக்கு முஸ்லிம்கள் சைவ சாப்பாடு போட்டதற்க்கு நன்றி ஆனால் இந்துக்கள் பிரியாணி போட்டா இஸ்லாமியர்கள் சாப்பிடுவார்களா?
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
06-பிப்-201823:38:29 IST Report Abuse
vns ஒரு நேரம் சோறுபோட்டால் இருக்குற குற்றவாளிகள் எல்லோரும் நல்லவர்களா? தினமும் இந்துக்கோவில்களில் இருந்து உண்டு அந்த இந்துக்கடவுகளையே குற்றம் கூறும் திரவிஷங்கள் ஒரு வேளை உணவு உண்டு முஸ்லிம்களை பாராட்டுகின்றன..
Rate this:
Share this comment
Cancel
kaki -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-201823:17:18 IST Report Abuse
kaki Great job bro !!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X