After 241 ceasefire violations in 35 days, India readies its guns against Pakistan | இளம் கேப்டனின் வீரமரணத்தால் கொந்தளிப்பு: பாக்.கிற்கு பதிலடி கொடுக்க தயார்| Dinamalar

இளம் கேப்டனின் வீரமரணத்தால் கொந்தளிப்பு: பாக்.கிற்கு பதிலடி கொடுக்க தயார்

Updated : பிப் 06, 2018 | Added : பிப் 06, 2018 | கருத்துகள் (53)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 35 நாட்களில் 241 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாக். தாக்குதல் நடத்தியதாக ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தில் பீம்ஹர்காலி எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 23 வயது இளம் கேப்டன் கபில்குன்டு, ரோஷல்லால்,43, ராம் அவ்தார்,25, ஷூபம்சிங்,28 உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 3 ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர்.பாக்.கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்து பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்படுத்திய வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்தியா-பாக்.இடையே 740 கி.மீ. தூரம் ராணுவ கட்டுப்பாட்டிலும், 192 கி.மீ. தூரம் காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியை எல்லை பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியா-பாக்.இடையே எல்லைகட்டுப்பாட்டு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும் கடந்த 2014-ம்ஆண்டில் பாக். 153 முறையும், 2016-ம்ஆண்டு 228 முறையும், 2017-ம் ஆண்டில் 771 முறையும், 2018-ம் ஆண்டு ஜனவரியில் 241 முறையும் போர் நிறுத்த ஒப்பந்தை்த பாக்.மீறியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீரமரணம் அடைந்த கேப்டன் கபில்குன்டு உடல் அவரது சொந்த மாநிலமான நேற்று அரியானா கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேப்டனின் வீரமரணம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால் பழிக்குவாங்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் படை குவிப்பை தீவிரப்படுத்திவதற்கான நடவடிக்கைகளை துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
11-பிப்-201812:19:27 IST Report Abuse
Ravichandran மாவீரனுக்கு எனது சிரம்தாழ்ந்த அனுதாபம். இது போன்ற வீரர்கள் மரணம் மனதை கொல்கிறது. சும்மா சொல்லாமல் பார்டரில் பாகிஸ்தான் ராணுவம் நிற்கமுடியாது ஒரு அதிபயங்கர தாக்குதல் நடத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
06-பிப்-201821:04:52 IST Report Abuse
THINAKAREN KARAMANI எல்லை மீறுகின்ற இடங்களில் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய விஞ்ஞானக் கருவிகளை (ரேடார் போன்றவை) புதிதாகக் கண்டுபிடிப்பதிலும், செயற்கைகோள்கள் மூலம் எதிரிகளின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதிலும் நமது திறமையைக் காண்பித்து எதிரிகளைப்பூண்டோடு அழிக்கவேண்டும். இப்படி இளம் இந்திய வீரர்களை தினம் தினம் பலிகொடுத்துக் கொண்டு இருக்கக்கூடாது. எதிரிகளின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டு பிடிப்பதற்காக மட்டுமே சிறந்த விஞ்ஞானிகள்குழுவை அமைத்து அதற்கான விஞ்ஞான நுணுக்கங்களைக் கண்டுபிடித்து எதிரிகளை அழிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-201814:23:22 IST Report Abuse
PRABHU பாகிஸ்தானை இந்திய ஒன்னும் செய்யப்போவதில்லை ....இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு, தேர்தலுக்கு பாக்கிஸ்தான் ரொம்ப முக்கியம்....
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-201813:21:35 IST Report Abuse
PRABHU இந்திய பிரஜையாகிய மீனவர்களை இலங்கையிடமிருந்து காப்பாத்த முடியாத இந்திய ராணுவம்...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
11-பிப்-201817:02:41 IST Report Abuse
Shriramஅவைங்க பேராசை காரணம் .. நான் சொல்லல ம்ம் மு.க சொன்னது,,...
Rate this:
Share this comment
Cancel
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-201813:07:53 IST Report Abuse
ramesh ஜைஹிந்த் நீ கலக்கு சித்தப்பு அவனுங்க கிடக்குறானுங்க..
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
06-பிப்-201812:57:50 IST Report Abuse
ganapati sb போர்நிறுத்தம் அமலில் உள்ள இடங்களில் உள்ள ராணுவவீரர்களின் மரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல இதை செய்வது பாகிஸ்தான் ராணுவமா அல்லது அவர்களுக்கு கட்டுப்படாத ஜிஹாதி தீவிரவாதிகளா
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-பிப்-201812:42:54 IST Report Abuse
Pasupathi Subbian எட்டாவது நடவடிக்கை எடுத்தலும், அக்கரையில் பஞ்சம் பிழைக்கும் பச்சைகளின் அடிமைகள் , வரிந்துகட்டிக்கொண்டு , எதோ இந்தியாவில் இவர்களுக்கு எதிராக வன்முறை நடப்பதுபோல , குய்யோ முய்யோ என்று கத்தும் . அடிக்க கையை ஓங்கினாலே போதும் , அடிபட்டதுபோல ஊளையிடும் இவைகள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
06-பிப்-201812:17:27 IST Report Abuse
Cheran Perumal போட்டு தள்ளுங்கப்பா, அப்புறம் பேசலாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
06-பிப்-201812:08:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த அரசின் சொதப்பல்களுக்கு இன்னொரு செய்தி. நடந்த இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா சுட்டதில் பாகிஸ்தானில் ஒருவர் பலியாகி உள்ளாராம். (ஆதாரம் செய்தி Cross-LoC fire: Indian envoy summoned over civilian deaths ). அதை கண்டித்து, பாகிஸ்தான் அரசு இந்திய ஹைகமிஷனரை அழைத்து கண்டனம் சொல்லியுள்ளது. நமது வாய்ச்சொல் வீரர், கையாலாகாத அமைச்சகம் வாய் கிழிய கூவியதை தவிர வேறு என்ன செய்தது? யாருக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்? யாரை பார்த்து பயப்படுகிறார்கள்? ஐ.நாவில், உலக அரங்கில் இவை போன்ற அழுத்தங்கள் தான் செல்லுபடியாகும். நீ அவைகளுக்கு கவலை படவில்லை என்றால் பாகிஸ்தானை போட்டு நசுக்க வேண்டியது தானே. அப்படி இல்லையென்றால் செய்ய வேண்டிய விஷயங்களை திருத்தமாக செய்யலாமே?
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
06-பிப்-201811:58:56 IST Report Abuse
Ravichandran அமைதி மார்க்கத்துக்காரனுங்க ஒருத்தனும் கருத்து சொல்ல வரல பாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை