'எங்க வீட்டுப் பிள்ளை' படத்துக்கு எம்.எல்.ஏ., போட்டோவுடன் 'கட் அவுட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எங்க வீட்டுப் பிள்ளை' படத்துக்கு எம்.எல்.ஏ., போட்டோவுடன் 'கட் அவுட்'

Added : பிப் 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், எம்.ஜி.ஆர்., திரைப்படத்துக்கு, எம்.எல்.ஏ., படத்துடன் 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில், பண்ணாரி சாலையில், ஒரு தியேட்டரில், எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படம், டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில், திரையிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், எம்.ஜி.ஆர்., ரசிகர்களை வரவேற்று, தியேட்டரின் முகப்பில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் படத்துடன், 'கட் அவுட்' வைக்கப்பட்டுள்ளது. இதை அந்த வழியாக செல்லும், சினிமாவுக்கு வருவோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். மக்கள் சந்திப்புக்கு 'கெட் அவுட்' சொல்லும், 'பவானிசாகர் வீட்டுப்பிள்ளை' 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்துக்கு 'கட் அவுட்' வைத்துள்ளாரே? என்று 'ரைமிங்காக' பேசிச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X