செயற்கை காலுடன் இந்தியாவை வலம் வரும் நம்பிக்கை வாலிபர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை காலுடன் இந்தியாவை வலம் வரும் நம்பிக்கை வாலிபர்

Added : பிப் 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
செயற்கை காலுடன்,இந்தியா,வலம் வரும்,நம்பிக்கை,வாலிபர்

திருநெல்வேலி: ரயில் விபத்தில், இடது கால் துண்டிக்கப்பட்ட வாலிபர், செயற்கை காலுடன், இந்தியா முழுவதும், சைக்கிளில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
ம.பி., மாநிலம், இந்துாரைச் சேர்ந்தவர், பிரதீப்குமார் சென், 29. சில ஆண்டுகளுக்கு முன், ரயில் விபத்தொன்றில் இடது காலை இழந்தார். ஆரம்பத்தில், நடப்பதற்கே சிரமப்பட்டார். பின், செயற்கை கால் பொருத்திக் கொண்டார். தற்போது, சைக்கிளில், இந்தியா முழுவதும் வலம் வருகிறார். 'துாய்மை இந்தியா' மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, நவ., 14ல், சைக்கிள் பயணத்தை துவக்கினார்.
தினமும், 50 - 100 கி.மீ., வரை, சைக்கிள் ஓட்டி வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்து, கேரளா வழியாக, நேற்று முன்தினம், கன்னியாகுமரியை அடைந்தார். நெல்லை வழியாக, மதுரை, ராமேஸ்வரம் என, மீண்டும் பயணத்தை தொடர்கிறார்.

இதுவரை, 3,900 கி.மீ., கடந்துள்ளார். தினமும், மக்களிடம் துாய்மை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஜூன், 30ல், காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை