சொந்த செலவில் கோவிலை புதுப்பிக்கும் முஸ்லிம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சொந்த செலவில் கோவிலை புதுப்பிக்கும் முஸ்லிம்

Added : பிப் 06, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத் முஸ்லிம் , Gujarati Muslims,அனுமார் கோவில்,  Hanuman Temple,  மிர்ஜாப்பூர் அனுமார் கோவில் ,Mirzapur Hanuman Temple,  மோயின் மேமன், Moin Menon, கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, 
  Temple priest Rajesh Bhatt, Brotherhood, Social Unity,

ஆமதாபாத் : குஜராத்தில், 500 ஆண்டுகள் பழமையான, அனுமார் கோவிலை, ஒரு முஸ்லிம் தன் சொந்த செலவில் புதுப்பித்து வருகிறார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம், மிர்ஜாப்பூர் பகுதியில், அனுமார் கோவில் ஒன்று உள்ளது; 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மிர்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், மோயின் மேமன், ௪௩; கட்டட கான்ட்ராக்டர். தினமும், அனுமார் கோவில் வழியாக செல்லும் மேமனுக்கு, அந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என, ஆசை ஏற்பட்டது. இது பற்றி, கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட்டிடம் தெரிவித்தார். அவர் சம்மதித்ததை அடுத்து, கோவிலை புதுப்பிக்கும் பணியை, மேமன் துவக்கி உள்ளார்.

இது பற்றி, மேமன் கூறியதாவது: நான் தினமும், ஐந்து வேளை தவறாமல், தொழுகை செய்பவன். சிறு வயது முதலே, இந்த கோவிலை பார்த்து வருகிறேன். இந்த கோவிலின் சிதிலமடைந்த நிலையை பார்த்து, மிகவும் வருந்தினேன். இந்த கோவிலை, என் சொந்த செலவில் புதுப்பிக்க முடிவு செய்து, அர்ச்சகரிடம் பேசினேன். அவரும் சம்மதித்தார். பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். கோவில் பின்புற சுவரில், மற்ற கோவில்களில் உள்ளதை போல், காவி நிற, 'டைல்ஸ்' ஒட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட், ''இந்தியாவில் நிலவும் சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு, இதுவே சரியான உதாரணம்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
07-பிப்-201820:20:50 IST Report Abuse
rajan இது தான் உண்மையான மனித நேயம் சார்ந்த காந்தி சொன்ன அந்த "ஈஸ்வரன் அல்லா தேரே நாம்" எத்தனை வலிமையான வாசகங்கள். இங்கு பிரிவினையை வளர்ப்பதே சுயநலம் சார்ந்த அரசியல்வாதிகள் தானே. பிரச்சினைகளுக்கு ஆதாரம் மக்கள் அல்ல என்பதே உண்மை .
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
07-பிப்-201820:15:35 IST Report Abuse
rajan இதுவே ஆத்மார்த்தமான இந்தியா போற்றும் விரும்பும் மதநல்லிணக்கம். இதை புரிந்து நம் அரசியல் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். இஸ்லாமிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-பிப்-201813:23:47 IST Report Abuse
Pasupathi Subbian இதுதான் உண்மையான இந்தியா? மற்றவை கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகள்
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-பிப்-201812:27:31 IST Report Abuse
Rahim சகோதரர்களின் வழிபாட்டு ஸ்தலத்தை இன்னொரு சகோதரன் புதுப்பித்து கொடுக்கிறான் ,இதுதான் இந்தியா ,இந்த ஒற்றுமையைத்தான் சில ரத்தக்காட்டேரிகள் கழுத்தை அறுத்து ரத்தம் குடிக்க துடிக்கின்றன ,ஆயிரம் சவால்கள் இடைஞ்சல்கள் வந்தாலும் சரி இந்து, முஸ்லீம்,கிறிஸ்தவ சகோதரத்துவதோடு தீய சக்திகளின் சதியை முறியடித்து இந்தியராக பெருமை கொள்வோம்.
Rate this:
Share this comment
07-பிப்-201819:30:17 IST Report Abuse
VadiveluShanmugamபேச்சோடு நிற்காமல் செயல்படலாமே....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-பிப்-201807:27:50 IST Report Abuse
ஆரூர் ரங் நன்று.பாராட்டுக்கள் / . இந்துக்கள் என்றுமே எம்மதமும் சம்மதம். எல்லாக்கடவுளரும் அருள்புரிவார் என தர்கா & சர்ச்சுக்கு போவதை வழக்கமாகவே கொண்டிருப்பவர்கள் . ஆனால் சிலை வழிபாட்டையும் மாற்றுமத வழிபாடுகளையும் இறக்குமதி மதங்கள் கடுமையாக கண்டித்து அவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு கூறுகின்றன அதுவும் வஹாபி தவஹித்துக்கள் மற்றும் பெந்தேகோஸ்தே கடுமையாக எதிர்க்கிறார்கள் . இந்து திருமணங்களில் இஸ்லாத்துக்கு ஏற்புடையதாக இல்லாத பல நடைமுறைகள் இருப்பதால் கலந்துகொள்ள வேண்டாம் என பிரித்தாளும் பிரச்சாரம் செய்கிறார்கள். பெரும்பாலான இளைஞர்களும் அநியாயமாய் அவர்கள் பின் போய் அழிகிறார்கள் . இன்னும் சொல்லப்போனால் இந்துதிருமணங்களில் இந்துக்கடவுளருக்குப் படைக்கப்பட்ட உணவுகளையே பரிமாறுவதால் அங்கு சாப்பிடவேண்டாம் என ஒரு கிறித்தவ போதகர்கள் பேசியது மறக்கமுடியாது. இப்போது சொல்லுங்கள். நாட்டின் ஒற்றுமைக்கு இந்துக்கள்தானே காரணம் ? இதுபோன்ற இஸ்லாமியர்கள் அதிகமானால் ஒற்றுமை தானே வளரும்
Rate this:
Share this comment
Mohammed Jaffar - Chennai,இந்தியா
07-பிப்-201811:43:12 IST Report Abuse
Mohammed Jaffarஇந்துக்களை பொறுத்தவரை.. இந்து கடவுளை பொறுத்தவரை.. எல்லாம் கடவுள்.. மனுஷன்ல இருந்து, ஆடு மாடு எலி குரங்கு பன்னி... கல்லு மண்ணு முதல் எல்லாம் கடவுள் தான்.....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-பிப்-201814:50:27 IST Report Abuse
ஆரூர் ரங்தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்பதன் பொருளே அதுதானே? அனைத்திலும் அனைத்துமாக இருப்பதே உண்மை இறைவன்...
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201806:02:01 IST Report Abuse
Ivan Ivaru seiraru OK, Ithuku ivaru mathathu la irunthu prob varama iruntha OK.
Rate this:
Share this comment
Cancel
07-பிப்-201802:54:40 IST Report Abuse
INDIAN🇮🇳🇮🇳🇮🇳 வாழ்த்துக்கள் நண்பரே. உங்களை அனுமன் மற்றும் அல்லா நல்ல வாழ்க்கை குலம் வாழ ஆசிர்வாதிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Eswar -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201800:49:59 IST Report Abuse
Eswar Appreciate your effort sir. God bless you
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
07-பிப்-201800:26:08 IST Report Abuse
Kuppuswamykesavan நல்ல விசயம் பாராட்டுக்கள், அவருக்கு. இறைவனுக்கு சில ஆயிரம், திரு பெயர்களும், உருவங்களும் இருந்தாலும், உண்மையில் பார்க்க போனால், இறைவன் ஒருவனே எனலாம். அவன் அருவாகவும் இருக்கிறான், உருவாகவும் இருக்கிறான், அரு உருவாகவும் இருக்கிறான். இறைவன் ஜோதியாக காட்சி அளித்தால், அது அருவாகும். சிவ லிங்க வடிவில் காட்சி அளித்தால், அது அரு உருவாகும். அம்பாளை போல காட்சி அளித்தால், அது உருவாகும். ஆக, எந்த அம்சமாக இறைவனை வணங்கினாலும், இறைவன் ஒருவனே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை எனலாம். இதை, ஆழ்ந்த தியானங்களில் பயணித்து அனுபவப்பட்ட, பெரியோர்கள் கூறி சென்றுள்ளதன் வாயிலாக, நாம் அறியலாம்.
Rate this:
Share this comment
Mohammed Jaffar - Chennai,இந்தியா
07-பிப்-201811:45:12 IST Report Abuse
Mohammed Jaffarநல்லா சொல்லி இருக்கீங்க @Kuppuswamykesavan - chennai,இந்தியா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை