2016ல் பணி நியமனம் பெற்ற பேராசிரியர்களுக்கு 'கிலி':தனித்தனியாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2016ல் பணி நியமனம் பெற்ற பேராசிரியர்களுக்கு 'கிலி':தனித்தனியாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு

Added : பிப் 07, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை:பாரதியார் பல்கலையில், துணைவேந்தர் கணபதியால் நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக விசாரிக்க உள்ளனர்.
உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு, லஞ்சம் பெற்ற, கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, வேதியியல் துறை தலைவர் தர்மராஜ் ஆகியோர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உடந்தையாக இருந்த, தொலைதுார கல்வி இயக்குனர் மதிவாணன் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உயர்கல்வித்துறை செயலாளரின் தடையை மீறி, 2016ல், 72 பணியிடங்களை, துணைவேந்தர் கணபதி நிரப்பியுள்ளார். பணியிடங்களுக்கு, 20 லட்சம் முதல், 30 லட்சம் வரை பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இடஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, உயர்கல்வித்துறை அமைச்சர், செயலாளருக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, 2016ல், துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் தகுதி குறித்து விரிவாக விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:பல்கலையில், 2016ல் நடந்த பணி நியமனங்களில், பல்வேறு முறைகேடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. பல நியமனங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. புகார்களின் பேரில், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், 72 பேரிடம், தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல், பல்கலையில் நிரப்பப்பட்ட பல்வேறு பணியிடங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின், அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முக்கிய ஆதாரம்!
ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற, மத்திய அரசின் அறிவிப்புக்கு பின், துணைவேந்தர், லஞ்சப் பணத்தை 'ஆன்-லைன்' மூலம் பெற்றதை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்; வங்கி ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை, இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்க உள்ளனர்.
பாரதியார் பல்கலையில், 'முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்' என்ற பெயரில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதில், துணைவேந்தரின் ஊழலுக்கு, பாரதியார் பல்கலையில் பணிபுரியும், ஒரு உதவி பேராசிரியை, மூன்று பேராசிரியர்கள், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பணிபுரியும், மூன்று பேராசிரியர்கள் என, மொத்தம், ஏழு பேருக்கு கூட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை