98 வயதில் எம்.ஏ., பட்டம் முதல்வர் நிதிஷ் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

98 வயதில் எம்.ஏ., பட்டம் முதல்வர் நிதிஷ் பாராட்டு

Added : பிப் 08, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
98 வயது முதியவர் எம்.ஏ பட்டம், முதல்வர் நிதிஷ் குமார், பீஹார், ராஜ்குமார் வைஸ்யா,Rajkumar Vizya, நாளந்தா திறந்த நிலை பல்கலை,Nalanda Open University, முதியவர் முதுகலை பட்டம் ,   Post Graduate Degree, 98-year-old man MA degree, Chief Minister Nitish Kumar,
Bihar,

பாட்னா : பீஹாரில், 98 வயதில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த முதியவருக்கு, அவரது வீட்டுக்குச் சென்ற, முதல்வர் நிதிஷ் குமார், பட்டம் வழங்கி கவுரவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2017ல், பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த நிலை பல்கலையில், ராஜ்குமார் வைஸ்யா, 98, பொருளாதாரத்தில், முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

பாட்னா, என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, முதல்வர் நிதிஷ் குமார், தள்ளாத வயதில் முதுகலை பட்டம் பெற்ற, ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று, சால்வை அணிவித்து, முதுகலை பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தார்.

வீடு தேடி வந்து பட்டம் அளித்த, முதல்வர் நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவித்த ராஜ்குமார், ''வீட்டில் படிக்கும் சூழ்நிலை இருந்ததாலும், வாசிப்பதில் ஆர்வம் உள்ளதாலும், எம்.ஏ., பட்டம் பெற முடிந்தது.

''கல்வி கற்பதற்கு வயது தடையல்ல என்பதை, வருங்கால மாணவர்களுக்கு உணர்த்த, இந்த வயதில் படிக்க முடிவு செய்தேன்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-பிப்-201820:04:09 IST Report Abuse
அப்பு சரி.. நித்தீஷை ஏதாவது அரசு வேலை கேட்கவேண்டியது தானே.. அவுரு 70 வயசாயி அரசு வேலை பாக்கலியா?
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
08-பிப்-201818:06:31 IST Report Abuse
Kailash பீஹாரில் புத்தகத்தை வைத்தே எக்ஸாம் எழுதுகிறார்கள் இவர் என்னடாவென்றால் பீஹார் வழக்கமே கடைபிடிக்காமல் எக்ஸாம் எழுதியதால் முதல்வரே வீட்டுக்கு வந்து பாராட்டுகிறார்
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201814:33:53 IST Report Abuse
ArulKrish How can he sell PAKODA at this age?
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201809:46:49 IST Report Abuse
ushadevan தள்ளாத வயதில் இளமையாய் கற்கிறார் பாராட்டுக்கள்.நேரில் சென்று வாழ்த்திய அமைச்சருக்கு பாராட்டுக்கள். முயற்சிக்கு தோல்வி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
08-பிப்-201806:28:18 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK super
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-பிப்-201805:52:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவரது வயதை மார்க் என்று பார்த்து பாஸ் போட்டு விட்டார்களா? 98 வயதில் புத்தகத்தில் படித்தது இவ்வளவு ஞாபகமாக எழுதமுடியுமா, இல்லை அவரது அனுபவமே ஒரு புத்தகமா? அதை எழுதி பாஸ் ஆனாரா? அப்படித்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-201802:53:16 IST Report Abuse
தமிழ்வேல் இருவருக்கும் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை