ஊழல் பற்றி பேசாதது ஏன்? : பிரதமருக்கு ராகுல் கேள்வி Dinamalar
பதிவு செய்த நாள் :
ஊழல் பற்றி பேசாதது ஏன்? :
பிரதமருக்கு ராகுல் கேள்வி

புதுடில்லி : ''ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து, பிரதமர் மோடி, எந்த பதிலும் அளிக்காதது ஏன்?'' என, காங்., தலைவர், ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஊழல் பற்றி பேசாதது ஏன்? : பிரதமருக்கு ராகுல் கேள்வி


ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில், பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது அவர், காங்., மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இது குறித்து, காங்., தலைவர், ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:லோக்சபாவில், பிரதமர் மோடியின் உரை, தேர்தல் பிரசாரம் போல் இருந்தது. பிரதமரிடம் இருந்து, வேலைவாய்ப்புகளை மட்டுமே, மக்கள் எதிர்பார்க்கின்றனர்; சொற்பொழிவை அல்ல.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, மோடியிடம் இருந்து பதில் வரவில்லை.

நம் ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் குறித்து, பிரதமர் எதுவும் பேசவில்லை. தான் பிரதமர் என்பதை, மோடி மறந்து விட்டார்.

மக்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு, பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார்; மக்களிடமே கேள்விகளை திருப்பி கேட்கிறார்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் பேசியும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக பேசவில்லை. இது, முழுவதும் அரசியல் பேச்சு தான்.

பொதுக்கூட்டத்தில் எங்களை விமர்சிக்க, அனைத்து உரிமையும் அவருக்கு உள்ளது. ஆனால் அதற்கு, பார்லி., சரியான இடம் கிடையாது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேடு நடந்துள்ளது என, தொடர்ந்து கூறுகிறேன். இந்த ஒப்பந்தத்தை மாற்றியதுயார்; எதற்காக மாற்றப்பட்டது; யாருக்காக மாற்றப்பட்டது என, பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிராக போர் தொடுப்பேன் எனக் கூறிய பிரதமர், இன்று, ஊழல்வாதிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

விவசாயிகள், இளைஞர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றி, பிரதமர் எதுவும் பேசவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.

காங்., முன்னாள் தலைவர், சோனியா கூறுகையில், ''பிரதமர் மோடியின் பேச்சில் புதிதாக ஒன்றுமில்லை. பழைய கதைகளையே திரும்பத் திரும்ப கூறுகிறார். மக்கள், தங்கள் எதிர்காலம் பற்றி கவலை அடைந்துள்ளனர். ஆனால், இதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை,'' என்றார்.

காங்., -- எம்.பி., சசிதரூர் கூறுகையில், ''பிரதமர், மிகச் சிறந்த பேச்சாளராக இருக்கலாம். ஆனால், லோக்சபாவில் அவரது பேச்சில் பாதி உண்மை தான் உள்ளது. தவறான குறிப்புகள் தான் இடம் பெற்றுள்ளன,'' என்றார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-201823:29:38 IST Report Abuse

Mani . Vஊழலை பற்றி பேசினால் அமித்ஷா பையனின் பல லட்ச மடங்கு சொத்து உயர்வை பற்றியெல்லாம் பேச வேண்டி வருமா இல்லையா? (சுன.பானா............ஆடு.........கோபால்............தைரியமான ஆளுதானே......... சொல்லி பாரு......... அதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா? இல்லையா?......)

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
08-பிப்-201820:57:17 IST Report Abuse

ganeshaஇன்று லோக் சபாவில் ஜெயித்தலி கொடுத்த பதிலுக்கு பிறகு பப்புவும் இங்கு மோடி ஒலிக தலைவர் பாலக்ரிஷ்ணனும், வாயை மூடிண்டு இருக்க வேண்டியது தான். பாலிடிக்ஸ் இல் இருப்பவர்களுக்கு இது கூட தெரியாமல் இங்கு கருத்து எழுதுவது பேசுவது வெட்கக்கேடு.

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
08-பிப்-201820:53:58 IST Report Abuse

ganeshaபப்பு மாதிரி இங்க எழுதுகிற பாலகிருஷ்ணன் என்பவர் இருக்கிறார்.. மோடி ஒழிக என்பதை தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டியது ஊழல் செய்யும் அரசு லஞ்சம் லாவண்யம் தண்ணீ இலவசம் கொடுக்கும் அரசு மட்டுமே. அதற்காக மோடி ஒழிக என்று ஏழுதுவதற்கு தயங்க மாட்டார். பப்புவுக்கும் இங்கு பெனாத்தும் துப்புக்கெட்ட மோடி ஒழிக கும்பலுக்கும் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும். இதே மாதிரி முன்னோருமுறை வெளிநாட்டு விமானங்கள் வாங்குவதில் ஊழல் என்று கம்யூனிஸ்ட் பார்ட்டி சீதாராம் யச்சூரி (மோடியோ பிஜேபியோ அல்ல) பார்லியமென்டிலும் வெளியிலும் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்தோணி காங்கிரஸ் இன் ஒரு சிறந்த தலைவர் இதை பற்றி இங்கு விவாதிக்கவும் மற்றும் அதன் விலைகளை சொல்லுவதும் அந்த விமானத்தின் உள்ள திறமைகளை விமர்சிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகவே நாட்டின் ராணுவ ரகசியங்களை பாதுகாக்க இதில் ஊழல் இல்லை என்பதை தவிர வேறு எந்த தகவலையும் வெளியில் பகிங்கரமாக சொல்ல முடியாது. என்று கூறினார். அந்தோணி பேசியது சரி அது தான் உண்மை. துப்பு கேட்ட பப்புக்கு அல்லது இங்கு மோடி ஒழிக கும்பலுக்கும் இந்த பாதுகாப்பு அம்சம் வரலாறு இதெல்லாம் தெரியுமா? நாட்டை துண்டாட தான் தெரியும். துப்பு இருந்தால் இதற்கு பதில் எழுதுங்கள் பார்க்கலாம்.

Rate this:
rajan - kerala,இந்தியா
08-பிப்-201820:04:18 IST Report Abuse

rajanஏன் பப்பு உங்க ஆத்தா ஆட்சிக்காலத்தில நடக்காத ஊழலா அத்தனை கோடிக்கணக்கில ஒருத்தன் விடாம ஆட்டைய போட்டு ஊழல் நடந்த போதும் பார்த்தேல்ல உங்க பிரதமர் மன் ஜி வாய திறந்தாரா இல்லையே. எங்க ஊரு கல்லாப்பெட்டி சிங்காரமாச்சும் பகிரங்கமா துணிச்சலா ஆம் காங்கிரஸ் ஆட்சியில ஊழல் நடந்ததுன்னு போட்டு உடைச்சான். அப்போ எல்லாம் நீ எந்த ஊர்ல இருந்த இப்போ இந்த கேள்வி கேட்க. வாடிகன் போயிருந்தியா இத்தாலி போயிருந்தியாப்பா.

Rate this:
rama - johor,மலேஷியா
08-பிப்-201819:51:54 IST Report Abuse

ramaதமிழ்நாட்டு ஊழல் அமைச்சர்களை அடிமை படுத்தி தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் மோடி ஊழல் பற்றி பேசமாட்டார். ஊருக்கு தான் உபதேசம், மோடிக்கு இல்லை.

Rate this:
08-பிப்-201818:18:00 IST Report Abuse

TamilMarkஊழலுக்கு சொந்தக்காரர்கள் தான் ஊழல் பற்றி பேச வேண்டும் பிரதமர் மோடி அல்ல

Rate this:
Shekgar Ramamoorthy - Chennai,இந்தியா
08-பிப்-201817:07:39 IST Report Abuse

Shekgar RamamoorthyIndia bought other things with it as well. Which may be they don't want to disclose. We'll may be price got higher because 50% reinvestment clause for the french Meteor missiles with it Help for tejas engine Serviceability clause

Rate this:
Shekgar Ramamoorthy - Chennai,இந்தியா
08-பிப்-201817:04:12 IST Report Abuse

Shekgar RamamoorthyGovt is not in defensive mode. But if there is an agreement of non disclosure with France Govt than we cannot disclose it. Think the other way France also did not disclose much details about the deal. But in France no one is talking about scam. Secrecy does not means any scam. What I guess that it is France Govt who want a Secrecy not Indian Govt. Because I am not able to find any gain in secrecy by India. But France can face some issue if secrecy not happens. Might be France has given some concession on some condition of the deal. Which if disclose by India, than other possible customer can demand. France is in talk with UAE, BRASIL, SOUDI AREBIA, QATAR for Rafael sale. Egypt brought 24 Rafael at 5.2 billions EURO. Means per aircraft it is 0.217 millions EURO. We are buying 36 Rafael at 7.87 billions EURO. Means per aircraft 0.216 millions EURO. So I think we are getting right price. If we think about offset clause than a part of 7.87 Billion EURO will invest back to India. We are in gain.

Rate this:
Santhanam - chennai,இந்தியா
08-பிப்-201816:56:10 IST Report Abuse

SanthanamHe spoke about corruption only for 90 mins that is congress. If you don't get that hint you're rubbish.

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
08-பிப்-201816:51:56 IST Report Abuse

ramanathanஅடேய் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு வழிகள் உள்ளது... ஒன்று...காங்கிரஸ் கட்சியை இந்திய அளவில் தடை விதிக்க வேண்டும். ..இரண்டு.. நேரு குடும்பத்தை நாடு கடத்த வேண்டும். ..இதுதான் தேச நலனுக்கு நல்லது

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement