5 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' வினியோகிக்க அரசு முடிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'
வினியோகிக்க அரசு முடிவு

மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால், மேலும், ஐந்து லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்'களை, விரைவில் வினியோகிக்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

5 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' வினியோகிக்க அரசு முடிவு


தமிழகத்தில், பொருத்துதல் கட்டணமாக, 200 ரூபாயை வசூலித்து, கேபிள், 'டிவி'க்கான, செட் - டாப் பாக்ஸ்களை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வினியோகித்து வருகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்,

சேவை வழங்குவது கட்டாயம் ஆகியுள்ளதால், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு, செட் - டாப் பாக்ஸ்களை வினியோகித்து வருகின்றன.

இந்நிலையில், அரசு, செட் - டாப் பாக்ஸ்கள் வாங்க, மக்களிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளதால், விரைவில், மேலும் ஐந்து லட்சம், செட் - டாப் பாக்ஸ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.இது குறித்து, அரசு கேபிள் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 70 லட்சம் செட் - டாப் பாக்ஸ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
அதில், முதல்கட்டமாக, 24 லட்சம், 'பாக்ஸ்'கள், கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு, வினியோகம் துவங்கியது.
மொத்தம், 19 லட்சம் செட் - டாப் பாக்ஸ்கள் வந்ததில், 17 லட்சத்தை வினியோகித்து, தமிழகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளோம்.

Advertisement

மேலும், இரண்டு லட்சம், செட் - டாப் பாக்ஸ்கள் வினியோகத்திற்கு தயாராக உள்ளன. மக்களிடம் ஆர்வம் அதிகரித்திருப்பதால், மேலும், ஐந்து லட்சம் செட் - டாப் பாக்ஸ்களை, விரைவில் வினியோகிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201803:55:35 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>பல்லுப்போன கிழங்களும் கூட டிவி பாக்றதே இல்லே என்பதுதான் உண்மை , நானெல்லாம் டிவிலே ஜஸ்ட் ஒண்ணுலேந்து 100 வரை ரிமோட்டுலே பிரஸ் பண்ணுவேன் கார்ட்டூன் பாப்பேன் திருப்பதி அண்ட் சங்கரா பார்ப்பேன் பொதிகைலே பல நிகழ்ச்சிகள் நன்னாயிருக்கு அதுபார்ப்பேன்

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-201823:46:31 IST Report Abuse

Mani . Vசரி இதில் பல ஆயிரம் கோடியை "போட்டு" விடலாம்.

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
08-பிப்-201815:57:50 IST Report Abuse

N.Kaliraj ரூ 200 என்பது கண்துடைப்புக்காக.... வாங்குவது இதில் 5 மடங்கும் ஒருசில இடங்களில் அதற்கும் மேல்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-பிப்-201815:42:22 IST Report Abuse

Endrum Indianஅப்போ 5 லட்சம் செட் டாப் பாக்ஸ் ரூ 300 (வாங்குவது ரூ 500 ரசீது வெறும் ரூ 200 ) கமிஷன் வெறும் ரூ. 15 கோடி தான் வருகின்றது . இதெல்லாம் ஒரு தொகையே இல்லை அசிங்க தி.மு.க வுக்கு.

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
08-பிப்-201811:14:18 IST Report Abuse

Sivaசீரியல். இலவசம். டாஸ்மாக் .90% உழைப்பு இல்லாமல் வாழும் ஓசி தமிழன்...... திருத்துவதற்கு ஒரு வாய்ப்பு வருமா ?

Rate this:
Netpark mathur - Mathur,இந்தியா
08-பிப்-201809:37:48 IST Report Abuse

Netpark mathurரூ.200 /-க்கு கொடுப்பதாக செய்தி உள்ளது. ஆனால் ரூ.500 முதல் 1500 வரை வசூலிக்கின்றனர். மேலும் பாதி சேனலுக்கு மேல் ஸ்ட்ரக் ஆகிறது. எங்கள் பகுதியில் செட்டாப் பாக்ஸ் ஆப்ரெட்டர் பணம் கட்டாததால் 1 மாதத்திற்கு மேல் செட்டாப் பாக்ஸ் இருந்தும் பழைய நிலையிலே உள்ளோம்.

Rate this:
08-பிப்-201809:18:44 IST Report Abuse

அப்புவாக்கி டாக்கி வாங்குனமாதிரி...அப்பிடியே அல்வா சாப்புடற மாதிரி...

Rate this:
ravichandran - Hosur,இந்தியா
08-பிப்-201808:54:20 IST Report Abuse

ravichandranஆமா 1700 ரூபா கேட்குறான் எங்க கேபிள் ஆபரேட்டர். எனக்கு வேணவே வேணாம்னு சொல்லிட்டேன்...

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
08-பிப்-201822:20:08 IST Report Abuse

Basic InstinctDD Freedish . மாத கட்டணம் கிடையாது. HD Quality, Free Recording, அதிகமாக hindi channels, மற்ற மொழி. ஒன்று இரண்டு சேனல்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறன். யாரவது பயன் படுத்தி இருந்தால் கருத்து சொல்லலாம்....

Rate this:
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
08-பிப்-201808:40:37 IST Report Abuse

Raajanarayanan Raaj Narayananசெட் டாப் பாக்ஸில் எவ்வளவு ஊழலோ.இந்த திராவிட கட்சிகள் எது கொடுத்தாலும் இலவசம் என்ற பேரில் ஊழல் செய்கிறார்கள்.உதாரணமாக டிவி 3055 ரூபாய் டிவியில் 500 ரூபாய் டிவிக்கு கமிஷன் வாங்கினால் உதாரணமா 1900000 டிவிக்கு எவ்வளவு கமிசன் வாங்கியிருப்பார்கள்.அடுத்து மிக்ஸி,கிரைண்டர்.பேன்,லேப்டாப்.சைக்கிள் முட்டை என அனைத்திலும் கமிஷன் வாங்கி மக்களுக்கு சேவை செய்வதாக கட்டி கொள்கிறார்கள்.இந்தியாவிலே அறியாமையில் மக்கள் அதுவும் இலவசம் போதை ஆகி விட்டது.மக்களும் எப்பொழுது இலவசம் கொடுப்பார்கள் என அலைய வேண்டியதுதான்.மக்கள் இன்னும் பாடம் கற்க வில்லை.அரசியல் வாதி வோட்டுக்கு கொடுக்கும் காசு எங்கிருந்து வருகிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால் இந்த இலவசம் இல்லாமல் போய்விடும்.

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
08-பிப்-201816:59:28 IST Report Abuse

Raj Puவெளிநாட்டு கருப்பு பணம் எப்போது வந்து சேரும்...

Rate this:
P.S.Ramaswamy - Chennai,இந்தியா
08-பிப்-201807:03:18 IST Report Abuse

P.S.Ramaswamyதமிழக அரசு கேபிள் டிவி இணைப்புகள் சென்னையில் இன்னும் கிடைக்கவில்லை. தமிழக அரசு இதற்கான முயற்சி எடுக்காமல் இருப்பது ஏன்?

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement