'நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு; தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு
தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

NEET exam,medical entrance test,நீட்இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

Advertisement

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
09-பிப்-201808:15:02 IST Report Abuse

Manianஐயா ஜெயசீலா: 6வ் உசத்திய கேன்சரை நாலு வருஷத்திலே எவனாலேயும் குணப்படுத்த முடியாது. உன்னுடைய குறைகளையே (முட்டாள்த்தனத்தை ) 40 வருஷம் கழித்தும் நீக்க முடியவில்லையே, (நீ படிச்சது எதுக்கும் உபயோகம் இல்லை என்று தெறிந்து, உன் புத்தி சலித்தனத்தை முன்னேற்றி கொள்ளாதபோது ) மோடியை பற்றி பேசி வீணடிக்கலாமா?

Rate this:
08-பிப்-201819:58:29 IST Report Abuse

அப்புநம்ம ஊர் டாஸ்மாக், மணல் கொள்ளை, கேபிள் டி.வி மாஃபியாக்கள் மாதிரி இது நீட் மாஃபியா....மத்திய அரசால் நடத்தப் படுவது. அவங்க வெச்சதுதான் சட்டம்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-பிப்-201814:15:55 IST Report Abuse

Pasupathi Subbianநீட் என்பது தகுதி தேர்வுதான். இதில் என்ன வித்தியாசம் பார்ப்பது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மேலே தொடர அனுமதிக்கப்படுவார்கள் , தொலைதூர கல்வியாக இருந்தாலும், சரி, பகுதி நேர படிப்பாக இருந்தாலும் சரி , நுழைவு தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே .

Rate this:
Moorthy -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201807:24:22 IST Report Abuse

Moorthyபள்ளியில் சென்று தான் படிக்க வேண்டும் என்று ஏன் இந்த வரைமுறை? நுழைவுத்தேர்வு தானே திறமை உள்ளவன் வெற்றி பெறுவான். என்னங்க சார் உங்க சட்டம்?

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-பிப்-201806:13:57 IST Report Abuse

Manianதகுதி வாய்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டில் வர இது மிகவும் உதவும். திறமை இல்லாதவர்கள் லஞ்சம் கொடுத்து பொய் ஜாதி முறையில் இனி வர முடியாது. மிக நல்ல ஆரம்பம்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-201804:33:16 IST Report Abuse

Kasimani BaskaranCBSE சிலபஸ் வைத்து தேர்வு என்றால் தமிழனுக்கு பெரிய நாமம்தான் கிடைக்கும்...

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
08-பிப்-201817:03:08 IST Report Abuse

Raj Puகிடைக்கவேண்டும் என்று தானே உங்கள் ஆட்டங்கள் இதை செய்கிறார்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement