வெப்பத்தை தடுக்கும், 'ஏரோஜெல்' செங்கல்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வெப்பத்தை தடுக்கும், 'ஏரோஜெல்' செங்கல்!

Added : பிப் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வெப்பத்தை தடுக்கும், 'ஏரோஜெல்' செங்கல்!

கட்டடத்துக்கு வெளியே உள்ள வெப்பமும் குளிரும், உள்ளே வராமல் தடுக்க, 'ஏரோஜெல்' என்ற விந்தைப் பொருளை பயன்படுத்தலாம் என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல்லை, 'இன்சுலேஷன்' எனப்படும் தட்பவெப்ப தடுப்பானாக சுவர்களில் பயன்படுத்தினால், 30 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என சுவிட்சர்லாந்தின் 'எம்பா' ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று சுவர்களுக்கு, நடுவில் காலி இடம் உள்ள செங்கற்களை பயன்படுத்துவது பரவலாகியிருக்கிறது. இந்த காலி இடத்தில் செயற்கை கம்பளி போன்ற பொருட்களை நிரப்பி, பின் சிமென்டை பூசி சுவர்களை எழுப்புகின்றனர். இதனால் வெளி தட்பவெப்பம் கட்டிடத்திற்குள் வருவதை வெகுவாக குறைக்க முடியும்.
நுண்ணிய ஏரோஜெல் குளிகைகளை கலந்த கலவையை செங்கல்லுக்கு நடுவே நிரப்பினால், வெப்பக் கடத்தலை மேலும் குறைக்க முடியும். இதனால் வெயில் காலத்தில் குளிர் சாதனம் மற்றும் குளிர் காலத்தில் வெப்பமேற்றும் சாதனங்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைக்கலாம்.
இருந்தாலும், உலக சந்தையில் ஏரொஜெல்லின் உற்பத்தி குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதுதான் இடிக்கிறது. ஆனால், ஏரொஜெல்லுக்கு கட்டுமானத் துறையில் கிராக்கி அதிகரித்தால், உற்பத்தி அதிகரித்து விலை சரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை