ஹார்லியின் மின்சார பைக்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஹார்லியின் மின்சார பைக்!

Added : பிப் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஹார்லியின் மின்சார பைக்!

இரு சக்கர வாகன உலகின் இணையில்லா ராஜாவாக கருதப்படுவது ஹார்லி டேவிட்சன் வண்டிகள்தான். அது, 2019ல் மின்சார பைக் ஒன்றை விற்பனைக்கு விட இருக்கிறது.
ஏற்கனவே, 2014ல் 'லைவ் வயர்' என்ற மாதிரி மின்சார பைக் ஒன்றை வாகனக் காட்சிகளில் தன் வாடிக்கையாளர்களிடம் காட்சி கருத்துக் கேட்டது.
ஹார்லியை கொண்டாடுபவர்கள் அதன் வண்டிகளில் வரும் லயமான இயந்திர ஒலியை ரசிப்பர். ஆனால் மின் பைக்கில் ஓசையே வராது.
எனவே லைவ் வயரில், ஆக்சிலேட்டரை முறுக்கும்போது, வண்டியின் வேகத்திற்கேற்ப, ஓட்டுநருக்கு கேட்கும்படி ஒரு ஒலியை சேர்த்திருந்தது ஹார்லி. தவிர, மின் வண்டிகளில் 'கியர்' இருக்காது. இந்த குறையை இட்டு நிரப்பினால் ஹார்லியால் சரியும் விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் என்று இரு சக்கர வாகன இதழாளர்கள் கருதுகின்றனர்.
இயற்கைப் பிரியர்களான ஹார்லி ரசிகர்கள், புகையால் காற்றை நச்சாக்காத மின்சார ஹார்லியை வெற்றிபெறச் செய்வரா?

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201800:49:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நம்ம ஊர் புல்லட்டுக்கு அழகு அதன் டப், டப் சத்தம். ஹார்லிக்கு அழகு அதே தான். அதான் கெத்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X