கடுகு எண்ணெயில் பறந்த போயிங் விமானம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடுகு எண்ணெயில் பறந்த போயிங் விமானம்!

Added : பிப் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கடுகு எண்ணெயில் பறந்த போயிங் விமானம்!

உலகிலேயே முதல் முறையாக, உயிரி எரிபொருளை பயன்படுத்தி பெரிய விமானம் ஒன்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.
கடந்த வாரம், அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட குவான்டாஸ் விமான சேவையின் போயிங் டிரீம்லைனர் 787-9 விமானம்தான் இந்த சாதனையை செய்திருக்கிறது. வழக்கமான எரிபொருளை, 90 சதவீதமும், உயிரி எரிபொருளை, 10 சதவீதமும் கலந்து பயன்படுத்தி அந்த விமானம் பறந்தது.
கடுகு வகையை சேர்ந்த, பிராசிக்கா கறிநாடா என்ற விதையிலிருந்து தயாரிக்கப்பட்டது அந்த உயிரி எரிபொருள். குவான்டாஸ் வெளியிட்ட தகவல்படி, கடுகு எண்ணெய் எரிபொருளை பயன்படுத்தினால், விமானம் வெளியேற்றும் புகை மாசில், 80 சதவீதம் வரை குறையும். அதன்படி, இந்த கலவை எரிபொருள், 7 சதவீத கரியமில மாசினை குறைத்துள்ளது. அதாவது, 18,000 கிலோ கார்பன் மாசின் காற்றில் கலக்காமல் அது தடுத்துள்ளது.
கனடாவை சேர்ந்த 'அக்ரிசோமா பயோசயன்சஸ்' தயாரித்துள்ள, இந்த உயிரி எரிபொருளுக்கு பயன்படும் கடுகு வகைப் பயிர் தரிசு நிலங்களிலும், ஊடு பயிராகவும் வளர்க்கலாம். எனவே, விவசாயிகளுக்கும் லாபம் தரும் என்கிறது அக்ரிசோமா.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை