நகரங்களை வடிவமைத்துத் தரும், 'கூகுள்!'| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நகரங்களை வடிவமைத்துத் தரும், 'கூகுள்!'

Added : பிப் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நகரங்களை வடிவமைத்துத் தரும், 'கூகுள்!'

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 2017 அக்டோபரில், 'சைட்வாக் லேப்ஸ்' என்ற தனி நிறுவனத்தை துவங்கியது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நகரங்களை வடிவமைத்து, அவை வசிப்பதற்கும், பயணிப்பதற்கும் இனிமையானவையாக ஆக்குவதுதான் சைட்வாக் லேப்சின் நோக்கம்.
கனடாவின் டொரன் டோ நகரம், சைட்வாக் வடிவமைத்துத் தந்த மாதிரியே புதிய விரிவாக்கப் பகுதியை கட்டி வருகிறது. குப்பை குவிவது, புகை மாசு, நீர் மாசு, போக்குவரத்து நெரிசல், சைக்கிள் பயணி மற்றும் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் போன்றவை இல்லாத பகுதியாக புதிய விரிவாக்கம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதாக சைட்வாக் அறிவித்துள்ளது.
விரைவில் மற்ற நாடுகளின் நகரங்களுக்கும், ஆலோசனை தரத் தயார் என சைட்வாக் அறிவித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் போடப்பட்டு வருவதால், கூகுள் மட்டுமல்ல, ஐ.பி.எம்., போர்டு, சீமென்ஸ், அமேசான் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் செம்மை நகரங்களை உருவாக்கித் தருவதில் போட்டியிடத் துவங்கியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை