வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீவி., ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீவி., ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்

Added : பிப் 08, 2018 | கருத்துகள் (154)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று (பிப்.,8) காலை 10.40 மணியளவில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.


கெடு

ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து தவறாக பேசியதாக, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. 'ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தியதையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மேலும் வைரமுத்து வரும் பிப்.,3 ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

அப்போது ஜீயர் கூறுகையில், ஆண்டாள் தாயார் கூறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
14-பிப்-201809:47:45 IST Report Abuse
TechT மொத்த சப்போர்ட் 20 பேர்தானா??
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201803:43:20 IST Report Abuse
J.V. Iyer இன்னும் வைரமுத்து மீது மதிப்பு இருப்பதால் தான் இதைச் செய்கிறார். எதோ தவறு செய்துவிட்டார். படித்தவர், பண்பாளர். மன்னிப்பு கேட்டால் அவர் மதிப்பு உயரமே தவிர குறையாது. இதை வைரமுத்து உணரவேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும். செய்வாரா?
Rate this:
Share this comment
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
08-பிப்-201823:23:29 IST Report Abuse
Mohan Nadar கட்சியை வளர்க்க அடிமட்ட தொண்டன் சாக மாட்டானா அலைந்தார்கள், எவனாவது கடவுளை ஏச மாட்டானா என்று அலைந்தார்கள், எவனாவது சாதியை ஏச மாட்டானா என்று அலைகிறார்கள், கோவிலுக்கு தீங்கு செய்யவும் அஞ்ச மாட்டார்கள், கடவுளுக்கே தேசவிரோதி பட்டம் கொடுக்க தயங்க மாட்டார்கள், நாமதான் கவனமாக இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NY,யூ.எஸ்.ஏ
08-பிப்-201820:41:04 IST Report Abuse
Tamilan முதலில் ஆண்டாள் கடவுள் இல்லை. அவள் கடவுள் பக்தை. இந்த உண்மை, மதம் பிடித்த மதவாதிகள் மண்டைக்குள் ஏறாது, வருந்தத்தக்கது. கிருத்துவத்தில் மாதா கடவுள் இல்லை. இஸ்லாமில், முகமது கடவுள் இல்லை, மனிதர்களே ... மனிதர்கள் அனைவரும் விமரிசனத்திற்கு உட்பட்டவர்களே..
Rate this:
Share this comment
greenway chennai - chennai,இந்தியா
08-பிப்-201822:38:01 IST Report Abuse
greenway chennaiஆண்டாளை மட்டும் பேசவும் , மற்ற மதத்தினரை புண்படுத்தாதீர்கள்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201800:17:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே" ன்னு கடவுளையும் கடிந்த கதைகளும் உண்டு. மனிதன் படைத்த கடவுளை, மனிதன் விமரிசிப்பதால் அந்த கடவுளுக்கு எந்த குறைவும் ஏற்பட்டு விடாது....
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
09-பிப்-201800:36:00 IST Report Abuse
N.Kசைவம் மற்றும் வைணவ நம்பிக்கைகளில், கடவுள் மட்டும்மல்ல, கடவுளின் அடியார்களும், அடியார்களின் அடியார்களும் கடவுளுக்கு இணையாகவே மதிக்கப்பட்டுள்ளனர்....
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
09-பிப்-201801:17:05 IST Report Abuse
vnsஅப்போ ஏன்டா Mohamad ஐ கார்டூனாக்கினத்துக்கு கத்தினீர்கள் ?...
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
08-பிப்-201819:38:04 IST Report Abuse
அன்பு அவசரப்பட்டு உரிய ஆதாரமின்றி, ஆண்டாளை தவறாக வைரமுத்து பேசியது கண்டத்திற்குரியது என்று தான் நான் கருதுகிறேன். ஆண்டவனை நம்பும் அதே சமயத்தில் எந்த மதத்தை நம்பாத நான், மதத்தை நம்பும் மக்களின் இறைவனை இழிவாக பேசியது முற்றிலும் தவறு என்று கருதுபவன். இதை உணர்ந்து வைரமுத்துவே மன்னிப்பு கேட்டால் நல்லது. மன்னிப்பு என்பது தானாக மனம் வருந்தி வருவது. அதை வற்புறுத்தி கேட்பது என்பது சரியான செயல் அன்று.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
08-பிப்-201819:08:58 IST Report Abuse
Nagan Srinivasan வைரமுத்து மன்னிப்பு கேட்க ஸ்ரீ வில்லி புத்தூர் வந்தால், ஸ்ரீ வில்லிபுத்தூருக்குத்தான் பாவம். வைரமுத்து சினிமா பாடல் எழுத்தர். அவருக்கு தமிழ் தமிழோடு இசைந்த வைணவம் தெரியாது. ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜ ஜீயர் இந்த மனிதர்களை மனத்தில் கூட நினைப்பது பாவம் என்று விட்டு விடுவது தான் நன்று. ஸ்ரீ ஜீயர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர் ஆண்டாளின் கீர்த்தியை உலகம் முழுதும் பரப்ப ஒரு குழு ஏற்படுத்தி அதை உலகம் முழுவதும் செல்ல ஏற்பாடு செய்வதே சிறந்தது. தாயின் அருமை ஜீயருக்கு தெரியும். அவள் அரங்கனை ஆண்டாள். அது சத்தியமாயின், அவள் மறுபடியும் உதிப்பாள் சாதிப்பாள் இது சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
08-பிப்-201818:57:00 IST Report Abuse
மு. செந்தமிழன் ஒரு விஷயம் எப்படி ஊதி பெருசு படுத்தப்படுகிறது என்பதை இங்கே காணலாம். ஈர பேன் ஆக்கி பேண பெருமாளை ஆக்குனதுனு ஒரு பழமொழி உண்டு அதுதான் இப்ப ஞாபகத்திற்கு வருது
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
08-பிப்-201818:52:43 IST Report Abuse
Srikanth Tamizanda.. கோணார் தமிழ் உரை இல்லாமல் அனேகருக்கும் திருக்குறள் பற்றி விளக்கம் கூற இயலாது. நிலமை இப்படி இருக்க "வேதத்துக்கு வித்தாகும் கோதை தமிழ்" என்று போற்றப்படும் ஆண்டாள் இயற்றிய சங்கத் தமிழ் திருப்பாவை பற்றிய உண்மையான பொருள் என்ன என்று புரியாமல், தன் அறிவுக்கு எட்டிய காமத்தை பற்றி ஆண்டாள் சொல்லியதாக கூறியது எவ்வளவு மடமை. ஆண்டாள் எந்த பொருளில் கூறினார் என்பதை ஆசிரியர்கள் பலரும் திருப்பாவை உபன்யாசம் மூலம் தெளிவாக கூறியுள்ளனர். யூ டியூப் இல் கண்ட பின் உங்களுக்கு புரியும் வைரமுத்து கூறியது எவ்வளவு கேவலம் என்பது. இதற்கு பிராமணர்களை வசை பாடுவது இன்னொரு மடமை. பிராமணர்களை திட்டியதற்காகவா இந்த எதிர்ப்பு? பூமாதேவியின் திரு அவதாரமான ஆண்டாள் என்கிற கடவுளை இழிவாக பேசியதற்க்கு தான் இந்த கண்டனம்..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-பிப்-201818:17:37 IST Report Abuse
Pugazh V //ஆண்டாள் தாயார் கூறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் // இது என்ன புதுசா இருக்கு? ஆண்டாள் தாயார் எப்படி இவரிடம் வந்து கூறுவார்?? ஜீயரின் மொபைலில் கூறுவாரா அல்லது லேண்ட் லைனில் கூறுவாரா..இல்லை நேரிலா?
Rate this:
Share this comment
Cancel
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். முடிந்து போன விஷயம். வைரமுத்து ஓரு கிருஸ்தவன். இந்து கடவுளை இழிவுபடுத்தி தனது சமூகத்தில் நல்ல பெயரும் தீயசக்திகளின் பாராட்டையும் அடைந்தாகிவிட்டது. மன்னிப்பு கேட்டால் அவனுடைய சமூகம் ஒருவழிப் படுத்திவிடும். ஆகையால் இது நடக்காத காரியம். முடிந்தால் வைரமுத்து பாட்டு ஏழுதிய சினிமாவை புறக்கணியுங்கள். எந்த கூட்டத்திற்கும் போகாதீர்கள். வழிக்கு வந்துவிடுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை