சிதம்பரம் வீட்டில் ஆவணங்கள் சி.பி.ஐ., விசாரணை துவங்கியது Dinamalar
பதிவு செய்த நாள் :
சிதம்பரம் வீட்டில் ஆவணங்கள்
சி.பி.ஐ., விசாரணை துவங்கியது

புதுடில்லி : ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., 2013ல் தயாரித்த வரைவு அறிக்கை நகல்கள், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ., துவக்கி உள்ளது.

சிதம்பரம் வீட்டில் ஆவணங்கள் சி.பி.ஐ., விசாரணை துவங்கியது


மலேஷியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு, கடந்த, காங்., ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கமாக, 600 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட

அன்னிய முதலீடுகளுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதே நேரத்தில், 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த முதலீட்டுக்கு, அப்போது, மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர், சிதம்பரம் தலைமையிலான, அன்னிய முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நடந்துள்ள முறைகேடுதொடர்பாக, சிதம்பரத்தின் மகன், கார்த்தியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை விசாரிக்கிறது. ஜன., 13ல், டில்லி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு சொந்தமான அலுவலகம், வீடுகளில், அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தியது.

Advertisement

அப்போது, ஏர்செல் - மேக்சிஸ் மோசடி வழக்கு தொடர்பாக, 2013ல், சி.பி.ஐ., தயாரித்த வரைவு அறிக்கையின் நகல்கள், டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, சி.பி.ஐ.,க்கு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த அறிக்கையின் நகல்கள், சிதம்பரத்துக்கு எப்படி கிடைத்தன என்பது தொடர்பான விசாரணை துவங்கி உள்ளது.

இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: இந்த அறிக்கையை, நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில், தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரும்பகுதி, தற்போது சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒத்துப் போகிறது.

இது, அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கிறோம். இதில், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Nadar - Mumbai,இந்தியா
10-பிப்-201817:52:27 IST Report Abuse

Mohan Nadarமோடியின் திருவிளையாடல்களில் இதுவும் ஓன்று

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201822:51:41 IST Report Abuse

Pugazh Vஹா ஹா ஹா...2G சாட்சியங்கள் அழிக்கப்பட்டனவா..ஹா ஹா ஹா..உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கிறேன்..இதுவும் ஊகச் செய்தியே. எந்த சிபிஐ அதிகாரிக்கும் ப்ரஸ்மீட் நடத்த அதிகாரமோ அனுமதியோ கிடையாது.

Rate this:
Bala rk - Madurai ,இந்தியா
09-பிப்-201816:16:19 IST Report Abuse

Bala rkகொடுமை

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
09-பிப்-201811:34:10 IST Report Abuse

Kurshiyagandhiஎன்னடா நம்ம ப.சி க்கு வந்த சோதனை...அவரு ரொம்ப வல்லவராச்சே......தப்பை மறைக்கிறதுல்ல ....எப்படி மாட்டிக்கிட்டாரு?என்னடா நம்ம சி.பி.ஐ.,க்கு வந்த வறுமை...ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., 2013ல் தயாரித்த வரைவு அறிக்கை நகல்கள், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது..நம்ப முடியலையே யாரு பண்ணுன சதி வேலையா இருக்கும்

Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
09-பிப்-201820:46:18 IST Report Abuse

Bebetoதாவூத் இப்ராஹீமே ப சி யை பார்த்து பயப்படுவார். அவ்வளவு பெரிய வில்லன் இந்த பசியும் அவர் மகனும்....

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
09-பிப்-201810:44:43 IST Report Abuse

Ambika. KPongadaa neengalum Inga visaranayum ippadi konjal naal ottunga aavanangal thaanaa nadandhu vandhudhu nnu settiyaar solluvaaru illai enbadhai nirubingannu judge keppaaru ongalaala mudiyaadhu odane viduthalai Ellam 2g la paththttom

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-பிப்-201809:59:25 IST Report Abuse

Nallavan Nallavanஒரு வேட்டி கட்டிய தமிழன் சம்பாதித்தது ஆரியர்களுக்குப் பொறுக்காதா ?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201808:46:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேனை எடுத்தவர் கொஞ்சம் புறம் கையை நக்கி விட்டார்...

Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
09-பிப்-201812:33:07 IST Report Abuse

Krishnamoorthi A Nபுறங்கையை நக்கவில்லை. தேன் கூட்டையே லபக்கி விட்டார்....

Rate this:
09-பிப்-201813:13:04 IST Report Abuse

சிவமொத்த தேனையும் நக்கி விட்டது தானே இப்ப பிரச்னை...

Rate this:
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
09-பிப்-201818:04:59 IST Report Abuse

தலித் கறுப்பன் நல்லா சொன்னிங்க.என்னடா இவர் சமீபகாலமா பிஜேபி க்கு எதிரா ஓவரா பொங்குறாரேன்னு பார்த்தேன்.பிஜேபி 2019 ல திரும்ப வந்திற கூடாதே என்ற பயம்தான் போல....

Rate this:
Rags - dmr188330,இந்தியா
09-பிப்-201808:44:28 IST Report Abuse

Ragsகுற்றம் புரிந்தவர் வாழ்வில் நிம்மதி ஏது. மனம் தவிக்கின்றது. தினமும் ஒரு அறிக்கை விடுகிரார். மடியில் கனம் .....

Rate this:
Rajinikanth - Chennai,இந்தியா
09-பிப்-201808:36:45 IST Report Abuse

Rajinikanthசாதாரணமா கேட்டா சொல்லமாட்டான் ...இடுப்புல நாலு மிதி மிதிச்சு கேளுங்க சொல்லிடுவான் ...அன்பா கேட்டா சொல்ல மாட்டான் நாலு அப்பு அப்புங்க... சொல்லிடுவான் ...எதோ ஒரு படத்து டயலாக்கு இது ...எல்லா காலத்துக்கும் பொருந்தும்

Rate this:
Mani Srinivasan - Chennai,இந்தியா
09-பிப்-201808:10:00 IST Report Abuse

Mani Srinivasanஇவர் பேங்க் சார்மன் பதவிக்கு பணம் பெற்று பதவி கொடுத்தவர்

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement