'ராகுல் எனக்கும் தலைவர் தான்' - சோனியா விளக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
'ராகுல் எனக்கும் தலைவர் தான்'
சோனியா விளக்கம்

புதுடில்லி : ''காங்., தலைவராக உள்ள ராகுல், எனக்கும் தலைவர் தான்; இதில், எந்த சந்தேகமும் இல்லை,'' என, காங்., பார்லிமென்ட் குழு தலைவர், சோனியா கூறினார்.

Congress,Rahul,Rahul Gandhi,Sonia Gandhi,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி,ராகுல்,ராகுல் காந்தி


காங்., தலைவராக, 19 ஆண்டுகள் இருந்த சோனியா, சமீபத்தில் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். அவரது மகன், ராகுல், காங்., தலைவராக பொறுப்பேற்றார்.அதன்பின், முதன்முறையாக நடந்த கட்சியின், பார்லி., குழு கூட்டத்தில், குழுவின் தலைவர், சோனியா, நேற்று பேசினார்.

பார்லிமென்டில் நேற்று முன்தினம், பிரதமர் நரேந்திர மோடி, காங்., குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில்,

இந்த கூட்டத்தில், சோனியா பேசியதாவது: காங்., தலைவர், ராகுல், எனக்கும் தலைவர் தான்; இதில், எந்த சந்தேகமும் இல்லை. காங்., தலைவர் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து, அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து விரட்டி அடிப்போம்.

இதற்காக, ஒருமித்த கருத்து, சிந்தனை உடைய கட்சிகளுடன் இணைந்துசெயல்படுவதற்கானநடவடிக்கைகளில் ஈடுபடுவேன். அடுத்த லோக்சபா தேர்தல், முன்கூட்டியே நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதால், கட்சியினர் அதற்கு தயாராக வேண்டும்.

கடந்த தேர்தலில், மக்கள் மாற்றத்தை விரும்பியதால், காங்., தோல்வியடைய நேர்ந்தது. ஆனால், நாட்டில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும், தற்போதைய அரசின் மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அந்த எதிர்ப்பை, நமக்கான ஆதரவாக மாற்ற வேண்டும். குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் ராஜஸ்தானில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்கள், மாற்றத்துக்கான மக்களின்

Advertisement

மனதை உணர்த்துகின்றன. கர்நாடகாவில், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல், காங்., எழுச்சியாக அமைய வேண்டும்.

மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்த பின், பார்லிமென்ட், நீதித் துறை, இந்த சமூகம் என, அனைத்து தரப்பும் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. புலனாய்வு அமைப்புகள், அரசியல் பழிவாங்க பயன்படுத்தப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளனர்.

சிறுபான்மையினர் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர்; தாக்கப்படுகின்றனர். இது போன்ற அச்ச உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதை தங்கள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது. இதை, உ.பி., குஜராத்தில் பார்த்தோம்.அடுத்து, கர்நாடகாவிலும் இந்த முயற்சியில், பா.ஜ., ஈடுபடும். ஜனநாயகத்தில், இது போல் மக்கள் மிரட்டப்படுவது குற்றம். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் அதையே விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மார்-201815:20:00 IST Report Abuse

SoniaGandhiisverycorruptwomanAvan yentha ... thalaivana iruntha engalluku enna?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201818:01:52 IST Report Abuse

Endrum Indianகாக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு அவ்வளுவு தான் இதன் உண்மை அர்த்தம்.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
09-பிப்-201823:08:14 IST Report Abuse

s t rajanஎன்ன தவம் செய்தனை ஹே சோனியா இப்படி ஒரு பிள்ளையைப் பெற...... ? நாங்க என்ன பாவம் செய்தோமோ.....எங்கேயோ யிருந்து எங்க நாட்டுக்கு வந்து, ஒரு நல்ல கட்சியை, நீ இப்படி நாசம் செய்ய ?

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
09-பிப்-201820:23:39 IST Report Abuse

Tamil Selvanவாழும் அவுரங்க சிப்பு என்று மணிசங்கர் அய்யரே சொல்லிவிட்டார்... வரலாறு என்று சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும்... அப்படியாவது இவர் வாழும் முகலாய வம்சத்தின் கடைசி மன்னராக இருந்து விட்டும் போகட்டுமே, கான் கிராஸ் கட்சியின் கடைசி தலைவராக...

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
09-பிப்-201817:58:31 IST Report Abuse

Kurshiyagandhiஅட என்னமா சும்மா கத்துக்கிட்டு ........நீங்க விளையாட இந்தியா தான் கிடைச்சதா? தயவு செய்து கொள்ளை அடிச்சத செலவு பண்ண பாருங்க.....

Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
09-பிப்-201816:38:55 IST Report Abuse

Tamilachiபார்றா....நீங்களாச்சும் ராகுல் தான் தலீவர்ன்னு அப்பப்ப சொல்லிட்க்கிட்டே இருங்க அப்பதான் எங்களுக்கும் நெனப்பு இருக்கும்...ராஹுல்க்கும் தான் காங்கிரஸ் தலைவர்னு ஞாபாகம் இருக்கும்...ரெண்டு பெரும் கொஞ்சம் ஓரமா போய் வெளயாடுங்க...

Rate this:
Bala rk - Madurai ,இந்தியா
09-பிப்-201816:15:33 IST Report Abuse

Bala rkஆட போங்க அம்மா அந்த பப்பு ஒன்னும் லாயக்கு இல்ல

Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201810:29:50 IST Report Abuse

Agni Kunjuஇந்த அம்மா பிள்ளை விளையாட மொத்த இந்தியாவையும் தர பாக்குறாங்க, தெய்வத்தாய்... உஷார் ஜனங்களே.. தங்கத்தட்டிலே சாப்பிட்ட பிள்ளைக்கு... இங்க இருக்கிறவன் கஷ்ட்ட நஷ்டம் ஏதும் தெரியாது... மறுத்தும் நம்பிடாதிங்க. மோடியின் பாதை கட்டாயம் பயன் தரும். என்ன சற்று நேரமாகும்.. 50 வருஷமாக நம்பி ஏமாந்த நாம் ஏன் இன்னும் 5 வருசத்த மோடியின் கைய நம்ப கூடாது? இழக்க ஒன்னும் இல்லாத போது நாம ஏன் பயப்படனும்? நல்லதே நடக்கும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201809:47:38 IST Report Abuse

Kasimani Baskaranஇந்தியாவில் மன்னராட்சி முறை இல்லையே....

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
09-பிப்-201809:34:07 IST Report Abuse

P. SIV GOWRIசரி

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement