தாயை அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவர்கள் - நோயாளிகளிடம் உதவி கேட்ட பரிதாபம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தாயை அடக்கம் செய்ய
வழியின்றி தவித்த சிறுவர்கள்
நோயாளிகளிடம் உதவி கேட்ட பரிதாபம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புற்றுநோயால் இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல், மருத்துவ மனையில், நள்ளிரவில், நோயாளிகளிடம் உதவி கேட்டு தவித்த சிறுவர்களின் நிலை, பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் நோயாளி விஜயா,Cancer Patient Vijaya, மார்பக புற்று நோய், Breast Cancer,திண்டுக்கல் அரசு மருத்துவமனை,Dindigul Government Hospital,  தாய் மரணம் , சிறுவர்கள் தவிப்பு ,தாய் அடக்கம், வேடசந்துார் ,   Mother Death,   Vedachandar,


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே, பூத்தாம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயா, 38. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

பரிதவிப்பு


இவரது கணவர் காளியப்பன், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், உடல்நல குறைவால் இறந்து விட்டார்.இவர்களது மகன், மோகன்ராஜ், 16, பேக்கரியில் வேலை பார்க்கிறார்.

இன்னொரு மகன், வேல்முருகன், 13, எட்டாம் வகுப்பும், மகள் காளீஸ்வரி, 9, நான்காம் வகுப்பும் படிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், விஜயா, மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

நோய் தீவிரமடைந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன், திண்டுக்கல், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் மதியம் இறந்தார்.தாயின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், அச்சிறுவர்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், உறவினர்களை அழைத்து வரும்படி, மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அந்த சிறுவர்கள், 'உறவினர்கள் யாரும் இல்லை. மேட்டுப்பட்டியில் அப்பாவின் தம்பி முருகன் இருக்கிறார்' எனக் கூறியுள்ளனர்.இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மூலம், முருகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரவு நீண்ட நேரமானதால் அவரால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை.


Advertisement

தாயின் உடல் நிலை சரியில்லாததால், மோகன்ராஜும் பேக்கரிக்கு சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் கையில் பணமில்லை. என்ன செய்வது எனத் தெரியாத சிறுவர்கள், தாயின் உடலை அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்களிடம் நிலைமையை கூறி, கெஞ்சி அழுதபடி உதவி கேட்டனர். சிறுவர்களின் பரிதாப நிலையை பார்த்த சிலர், பண உதவி செய்தனர்.

படிப்புக்கு உதவி


சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாலதி பிரகாஷ், இலவச அமரர் ஊர்தி மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். நேற்று காலை, விஜயாவின் உடல், திண்டுக்கல் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தகவலை அறிந்த அச்சிறுவர்களின் உறவினர்கள் சிலரும், ஊர் மக்கள சிலரும் விரைந்து வந்தனர். சிலர் அந்த சிறுவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதாகவும், சிலர் அச்சிறுவர்களின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran - Tiruchy,இந்தியா
11-மார்-201814:04:37 IST Report Abuse

GunasekaranMy hearty condolence to their family.

Rate this:
10-பிப்-201807:58:09 IST Report Abuse

MuthuPandi.pls send bank account those boys.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201801:08:35 IST Report Abuse

Mani . Vஅரசியல்வாதிகளிடம் பல லட்சம் கோடிகள். ஆனால் அவர்களை தேர்ந்தெடுத்த பொதுமக்களிடம் பிணத்தை அடக்கம் செய்யக் கூட பணமில்லை. பாரதி இன்று இருந்தால் "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த ஊழல் அரசியல்வாதிகளை நினைக்கையில்" என்று பாடியிருப்பார். ("யோவ், யாரு செத்தா நமக்கு என்னய்யா? நம்முடைய மணல் குவாரி நல்லா ஓடுதா? நாம் கொள்ளையடிக்க ஏதுவாக நமது பதவி பறிக்கப்படாமல் இருக்கிறதா? 'அந்தம்மா' வெளியில் வரமுடியாமல் சட்ட சிக்கல் இருக்கிறதா? அடுத்து யாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி கல்லா கட்டலாம்? என்று மட்டும் பாருய்யா?. பொதுமக்கள் பற்றி பேசுவதாய் இருந்தால் இனிமேல் இந்த பக்கம் வராதே").

Rate this:
மேலும் 74 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X