சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள்; வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள் ;
வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில்

சிவ பெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், அடுத்தடுத்து தீ விபத்து நடைபெற்று வருவதற்கு, ஆகம விதி மீறல் காரணம் என, சிவ பக்தர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

சிவன் கோவில்களில் தொடரும் தீ விபத்துகள்; வெள்ளி சபையை தொடர்ந்து ரத்தின சபையில்


சிவ பெருமான் ஆடல் வல்லானாக, திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் -பொற்சபை, மதுரை- வெள்ளி சபை, திருநெல்வேலி -தாமிர சபை, திருக்குற்றாலம் -சித்திர சபையில் காட்சி தருகிறார்.

வெள்ளி சபையான, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, வீரவசந்தராயர் மண்டபத்தில், கடந்த, 2ம் தேதி, தீ விபத்து ஏற்பட்டது. இதில், வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள், மண்டப சுவர்கள் சேதம் அடைந்தன.


காரணம்


அந்த பாதிப்பின் சோகம் மறைவதற்குள், சிவபெருமான் முதல் திருநடனம் புரிந்த இடமாக கருதப்படும், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது.

கோவில் வளாகத்தில் உள்ள, 500 ஆண்டுகளுக்கு மேலான, ஸ்தல விருட்சமான ஆலமரம் எரிந்தது. மரத்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்ததால், மரம் பாதிஅளவு நாசமானது. எனினும், மரத்தின் மேல் பகுதியில் இன்னமும் பச்சை உள்ளது. இந்த விபத்திற்கு, கோவில் நிர்வாகத்தினர் ஆகம விதிகளை மீறியதே காரணம் என, பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு செய்தனர்


இந்த கோவிலில், கடந்த மாதம் நடந்த ஆருத்ரா அபிஷேகத்திற்காக, கோவில் வெளிப்பிரகாரத்தில்

Advertisement

இருந்து, ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு, பக்தர்கள் எளிதாக வரும் வகையில், கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது.

இது, ஆகம விதிகளுக்கு முரணானது என, பக்தர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் உத்தரவின் படி, பாதை அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு பரிகாரமாக, பூஜை எதுவும் நடத்தப்படவில்லை. அதனால் தான், விருட்சம் எரிந்துள்ளது என, சிவ பக்தர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவிலுக்கு நேற்று சென்று, எரிந்த ஆலமரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பரிகார பூஜை

கோவில் ஆலமரம் எரிந்ததை அடுத்து, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் குருக்கள் சபாரத்தினம் தலைமையில் அர்ச்சகர்கள், பரிகார பூஜைகள் நடத்தினர். பின், காலை, 6:00 மணிக்கு, வழக்கம் போல் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201801:17:39 IST Report Abuse

Mani . Vஒரு சில விஷமிகள் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் திட்டமிட்டு இது போன்று தீ விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு (ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது அரசின் ஆசியுடன் காவல்துறை பொது மக்களின் வாகனங்கள், மீனவர்கள் குடிசைகள் முதலியவற்றுக்கு தீ வைத்தது மாதிரி) "கடவுள் சோதனை, கடவுள் காட்டும் எச்சரிக்கை, கடவுளை தரக்குறைவாக பேசியதன் விளைவு" என்று புரளியை கிளப்புகிறார்கள்.

Rate this:
matheen - chennai,இந்தியா
09-பிப்-201823:48:27 IST Report Abuse

matheenGood news ...happy to hear

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201823:07:07 IST Report Abuse

Pugazh Vஇங்கே அறிமுகமான எல்லா வாசக நண்பர்களிடமும் ஒரே ஒரு கேள்வி :: //மூர்க்க தற்கிறியே, கிறுத்துவர்களை இந்துக் கடவுள் அழிக்கப் போகிறார்" என்று அவமரியாதை மற்றும் வன்முறை த்தனமாக எழுதும் அக்ளிசவா வின் சுபாவம் பற்றி யாருக்குமே உறுத்தவில்லையா? மதக்கலவரத்தை தமிழகத்தில் எப்படியாவது தூண்ட நினைக்கும் இந்த வாசகரை யாருமே கண்டிப்பதில்லையே..ஓஹோ இவரை ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்கிறீர்களா? நல்லது// வாசகர்கள் சிந்தனைக்கு

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X