ரவுடிகள் வேட்டைக்கு போலீஸ் படைகள் தயார்; சுட்டு பிடிக்கவும் தயங்க வேண்டாம் என உத்தரவு Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயார்!
ரவுடிகள் வேட்டைக்கு போலீஸ் படைகள் தயார்;
சுட்டு பிடிக்கவும் தயங்க வேண்டாம் என உத்தரவு

சென்னை அருகே, ஒரே நாள் இரவில், 74 ரவுடிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், தலைமறைவு ரவுடிகளை பிடிக்க, போலீஸ் தனிப்படைகள் களம் இறக்கப்பட்டு உள்ளன. அவர்களை பிடிக்கும் முயற்சியில், தப்பிக்க நினைத்தால், சுட்டுப்பிடிக்கவும் தயங்க வேண்டாம் என்று, தனிப்படை போலீசாருக்கு, உத்தரவு அளிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ரவுடிகள் வேட்டை,Rowdy hunt, போலீஸ் படை, தலைமறைவு ரவுடிகள், ரவுடி பினு, Rowdy binu, உளவுத்துறை தகவல், சிறை ரவுடிகள்,  ரவுடிகள் கைது , போலீஸ் விசாரணை,  police force, underground Rowdy,  intelligence information, prison Rowdy,  police investigation,

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில், பிரபல ரவுடி பினுவின், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, ஒரே இடத்தில் குவிந்த ரவுடிகளை, போலீசார் சுற்றிவளைத்தனர்.

இந்த ஆப்பரேஷனில், ஒரே நாள் இரவில், 74 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில், பிரபல ரவுடி பினு உட்பட பலர், தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.தப்பியோடியவர்களில் பலர், கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட, முக்கிய குற்றவாளிகள் என்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ரவுடிகளின் பின்னணியில், பிரபல அரசியல் கட்சி பிரமுகர்கள் இருப்பதும், அவர்களுக்கு அரசியல் சார்ந்து, இவர்கள் கூலிப்படையாக செயல்படுவதும் தெரியவந்துள்ளது.மேலும், சிறையில் உள்ள ரவுடிகள், வெளியில் உள்ள அவர்களது ரவுடி நண்பர்கள் வழியாக, பினுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரிந்தது.

இதன் மூலம், சிறையில் உள்ள ரவுடிகள், வெளி தொடர்பில் இருப்பது, போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளின் பட்டியலும், நேற்று ஒரே நாளில் திரட்டப்பட்டது.

இதில், பழைய கணக்கெடுப்பின் படி, சென்னையில், மொத்தம் 928 ரவுடிகள் இருப்பதும், அவர்களில், 250 ரவுடிகள் சிறையில் இருப்பதும் தெளிவானது. மீதமுள்ள, 678 ரவுடிகளில், ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர், தற்போதும், ரவுடித்தனத்தை தொழிலாக செய்து வருவதும், போலீசாரின் பிடியில் சிக்காமல், தலைமறைவாக இருப்பதும், அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ரவுடிகளை களையெடுக்கும் பணியில், தனிப்படை போலீசார் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். தலைறைவு ரவுடிகளை பிடிக்க, அந்தந்த காவல் நிலையங்களில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவு ரவுடிகள், அந்தந்த காவல் நிலையங்களில் சரணடைந்தால், அவர்கள் மீதுள்ள வழக்குகள், தற்போதைய நடவடிக்கைகள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பதுங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று பிடிக்கும் முயற்சியில், தப்பிக்க நினைத்தால், சுட்டுப்பிடிக்கவும் தயங்கக் கூடாது என, போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ள விபரமும் வெளியாகி உள்ளது.

இதனால், தலைமறைவு ரவுடிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரவுடி கூட்டமும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், ரவுடிகள் கூடிய இடத்திற்கு அருகே செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்தும், விசாரணை நடந்து வருகிறது.

கோட்டை விட்ட உளவுத்துறை!

சென்னை அருகே, ரவுடிகள் ஒன்று கூடி, ஆட்டம் போட்ட விவகாரம், உளவு மற்றும் நுண்ணறிவு போலீசாருக்கு தெரியாமல் நடந்துள்ளது. வாகன சோதனையில் பிடிபட்டவர் அளித்த தகவலால் தான், ரவுடிகள் ஒன்று கூடுவது தெரியவந்தது. அப்போதும், எந்த இடத்தில், ஒன்று கூட போகின்றனர் என்ற விபரம் தெரியவில்லை. அதுவும் உளவு போலீசாருக்கு தெரியவில்லை. ரவுடிகளின் அலைபேசி, 'சிக்னல்' மூலம், இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம், நுண்ணறிவு மற்றும் உளவுத்துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி உள்ளது.

Advertisement


சிக்கிய சொகுசு கார்கள்!

ரவுடிகள் வேட்டையின் போது, விலை உயர்ந்த சொகுசு கார்கள், நவீன மாடல் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களில் பல, போலி பதிவு எண்களில் இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. ரவுடிகள் மிக ஆடம்பரமாக இருப்பதற்கு, எந்தெந்த வழிகளில், அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என, முழுமையாக ஆராய, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரவுடிகள் பிடிபட்ட இடத்தில், மனித உரிமை ஆணையம், வழக்கறிஞர், பத்திரிகையாளர் என, போலி அடையாள அட்டைகளும் அதிகளவில் சிக்கின. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.


காலில் விழுந்த ரவுடிகள்!

போலீசாரை கண்டதும், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தனர். சிலர், தனக்கு தற்போது தான் திருமணம் நடந்தது; சிலர், தங்கைக்கு திருமணம்; அப்பா, அம்மா மட்டும் தனியாக உள்ளனர்; குழந்தை உள்ளது; நண்பர்கள் அழைத்ததால் தெரியாமல் வந்து விட்டேன்; போலீசில் காட்டிக்கொடுத்து விடாதீர் என, பொதுமக்களின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர். ஆனாலும், 30க்கும் மேற்பட்ட ரவுடிகளை பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள், பொதுமக்கள் உதவியோடு தப்பி உள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-201816:23:00 IST Report Abuse

SaravanaKumarour tamilnadu police is very very intelligent?

Rate this:
Vivek Anandan - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201813:53:30 IST Report Abuse

Vivek AnandanITS A FULL FLEDGED GIMMICKS BY TAMIL NADU POLICE

Rate this:
K.Ramachandran - Chennai,இந்தியா
09-பிப்-201811:25:44 IST Report Abuse

K.Ramachandranரவுடி பின்னு தப்பினான் என்பது காவல் துறைக்கே அவமானம் . அவன் தான் மெயின் ஆள் . தப்பினானா தப்ப விட்டார்களா ?

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X