தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் அரசியல் மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின்
அரசியல் மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின்

''அ.தி.மு.க., வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும்,'' என, தி.மு.க.,செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார்.சென்னை, அறிவாலயத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


அதில் பங்கேற்ற, நிர்வாகிகள் பேசியதாவது:கட்சியில் மேல் மட்டம் முதல், கீழ்மட்டம் வரை, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு ஆதரவாகவே நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல்படுகின்றனர்.

கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு, கட்சி பதவிகள் வழங்கப்படுகின்றன.

அதனால் தான், தி.மு.க., தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. ஜாதி பிரச்னையை சரிசெய்யவில்லை என்றால், அதிருப்தி அடைகிற தி.மு.க.,வினர், தினகரன் அணிக்கு செல்லும் நிலை ஏற்படும்.அதை சரிசெய்யும் விதமாக, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் அணியினருக்கு, அனைத்து தேர்தல்களிலும், 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தால், தி.மு.க., ஓட்டு வங்கி அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின், ஸ்டாலின் பேசியதாவது:மாவட்ட அளவில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு, முடிவு கட்டப்படும். உங்கள் புகார் கடிதங்களை விசாரிக்க, மாவட்டத்திற்கு, ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

அக்குழு விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை தெரிவித்த பின், கட்சி நலனுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மகளிர் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-பிப்-201804:32:58 IST Report Abuse

meenakshisundaramஇவருக்கு தன்னிடம் உள்ள 89 MLA கள்மீது நம்பிக்கை இல்லை ,அங்கே உள்ள 18 பேர்களை நம்பியுள்ளார்.பாவம் அரசியலில் இன்னும் அரிச்சுவடி கற்றுக்கொண்டிருக்கிறார்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201800:14:30 IST Report Abuse

Mani . Vமறைமுகமாக "கட்டிங்கை" வாங்கிக் கொண்டு கடந்த ஒரு வருடமாகவே இதைத்தான் சொல்கிறார். திமுக தன்னுடைய இருபத்தி ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இப்பொழுது இவர்களின் ஆட்சியை கவிழ்த்து விட்டால் அதுதான் இவர்கள் தமிழகத்து செய்யும் முதல் நன்மையாக இருக்கும். திமுகவை சேர்ந்த 90 எம்.எல்.ஏ களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தாலே இவர்களின் ஆட்சி கவிழ்ந்து விடும். (சுயநலம் கருதும் இவர்களா ராஜினாமா செய்யப்போகிறார்கள்?).

Rate this:
rmr - chennai,இந்தியா
09-பிப்-201821:42:26 IST Report Abuse

rmrஎன்ன நடந்தாலும் நீங்க முதல்வராவதை யாரும் விரும்ப வில்லை டெபாசிட் இழந்ததுக்கு காரணமே நீங்கள் தான் . ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயார்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201821:33:28 IST Report Abuse

Kasimani Baskaran(ஏ)மாற்றம்தான் ஏற்படும்...

Rate this:
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
09-பிப்-201821:09:48 IST Report Abuse

Viswanathan Meenakshisundaramஉங்கள் சகாப்தம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது

Rate this:
JANANI - chennai,இந்தியா
09-பிப்-201818:24:24 IST Report Abuse

JANANIitha thaan pala naala sollittu irukka...

Rate this:
Prem - chennai,இந்தியா
09-பிப்-201818:09:57 IST Report Abuse

PremArasiyal maatram vandhaalum athu ungalala nadakka porathu kidaiyathu

Rate this:
ram - chennai,இந்தியா
09-பிப்-201817:58:30 IST Report Abuse

ramஅரசியல் மாற்றம் ஏற்படாது..நீங்கள் முதல்வர் ஆகவே முடியாது ஸ்டாலின்...

Rate this:
Bala rk - Madurai ,இந்தியா
09-பிப்-201816:17:19 IST Report Abuse

Bala rkசத்தியமா சொல்றேன் செயலு சார் கடைசி வரி நீங்க எலவு காத்த கிளி

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
09-பிப்-201815:56:16 IST Report Abuse

Baskarசொன்னதையே சொல்லி கொண்டு இருக்கும் பந்தா தலைவரே உனக்கும் வேலை இல்லை உனது நண்பன் தினகரனுக்கு வேலை இல்லை. பொழுது விடிந்து பொழுது போனால் உனது புலம்பல் அதிகம்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement