உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ஆய்வுக்குழு அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்:
ஆய்வுக்குழு அதிர்ச்சி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் இடிந்து விழுந்து உருக்குலைந்த, வீர வசந்தராய மண்டபத்தை பார்த்த உயர் மட்ட ஆய்வுக்குழு அதிர்ச்சியடைந்தது. புனரமைப்பு பணியை துவக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது.

உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ஆய்வுக்குழு அதிர்ச்சி


மீனாட்சி அம்மன் கோவிலில், ஏற்பட்ட தீ விபத்தில், பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் பெரும்பகுதி இடிந்தது. அங்கிருந்த,30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய, 12 பேர் அடங்கிய உயர் மட்ட ஆய்வுக்குழுவை அரசு நியமித்தது.நேற்று முன்தினம், பாலசுப்பிரமணியன் உட்பட சிலர், முதற்கட்ட ஆய்வு நடத்தினர். கோவிலுக்குள் உயர் மட்டக்குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

பின் தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபம், தீயில் கருகிய கடைகள், தீ விபத்தில் தப்பிய ஆயிரங்கால் மண்டபம்,

பழைய திருக்கல்யாண மண்டபம், சுவாமி சன்னதி - பழைய திருக்கல்யாண மண்டபம் இடைப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தலைக்கவசம்தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து வருவதால் பாதுகாப்பு கருதி, மேற்கூரைகள், துாண்கள் இரும்பு கர்டர்களால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக்குழுவினர் அறிவுரைப்படி குழுவினர் தலைக்கவசம் அணிந்து ஆய்வில்ஈடுபட்டனர்.
புதுப்பொலிவு பெறுமா?

கலையம்சம் மிக்க பழமையான மண்டபம் இடிந்து விழுந்த பகுதியை பார்த்து ஆய்வுக்குழு அதிர்ச்சியடைந்தது. புனரமைப்பு பணியை துவக்குவது குறித்து, மதியம், 1:00 முதல் மாலை, 3:30 மணி வரை ஆலோசனை கூட்டம் நடந்தது.மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க வீர வசந்தராய மண்டபம் இடிந்து விட்டது.

பல கோடி ரூபாயை கொட்டினாலும், மீண்டும் அதே கலைநயத்துடன் வீர வசந்தராய மண்டபத்தை புனரமைப்பது சந்தேகம் தான்.வீர வசந்தராயர் மண்டபம் கருங்கற்கள், சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது.

கட்டுமானத்தின் போது துருப்பிடிக்கும் இரும்புகள், மரக்கட்டைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

எனவே தான், பல நுாற்றாண்டுகளை கடந்தும் வீர வசந்தராய மண்டபம், அதே கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளித்தது. வருமானத்திற்காக கடைகளை நடத்த அனுமதித்ததால் தான் தீப்பிடித்து, வீர வசந்தராய மண்டபம் நொறுங்கி கீழே விழுந்துள்ளது.

புனரமைப்பு பணியில் சுண்ணாம்பிற்கு பதில் சிமென்ட் பயன்படுத்தப்படவுள்ளது. சிமென்ட் பூச்சு கட்டடங்களின் ஆயுள் காலம் அதிகபட்சம், 50 ஆண்டுகள் தான். பாதுகாப்பில் கோட்டை விட்டதால் வீர வசந்தராய மண்டபம் அழிந்தது பெரும் இழப்பாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.

உயிரிழந்த கற்துாண்கள்வீர வசந்தராய மண்டபத்தின் கற்துாண்கள், மேற்கூரையில் வேயப்பட்ட கற்பலகைகள் உயிரோட்டம் கொண்டிருந்தன. வெப்பத்தை தாங்கி மண்டபத்தை குளுமையாக வைத்திருந்தது. தீ விபத்தால் கற்துாண்கள், கற்பலகைகள் உடைந்து விழுந்தன.

இவற்றில் அதிகளவு வெப்பம் பாய்ந்ததால், உயிரோட்டத்தை இழந்து விட்டது. எனவே, அவற்றை மீண்டும் கட்டுமானத்தில் பயன்படுத்த இயலாது. புதிய கற்துாண்களை பயன்படுத்தியே புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. இப்பணியை பழைய கட்டுமானத்துடன் ஒப்பிட இயலாது.

எனினும் பழமை மாறாமல் கட்டுமானப்பணியை நிர்மாணிக்க தேவையான கற்துாண்கள், கற்பலகைகளை தரமானதாக கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201801:23:23 IST Report Abuse

Mani . Vஎல்லாம் பிராடுகள். சிசிடிவி காமெராவின் பதிவை ஆய்வு செய்து விடக் கூடாது என்று வேண்டுமென்றே சிசிடிவி பதிவு அறையை தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள் அயோக்கியர்கள். பக்தர்களை (பக்தால்ஸ் இல்லை. உண்மையான பக்தர்கள்) மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201801:31:23 IST Report Abuse

Manianஉண்மையான பக்தன் எப்படி இருப்பான் என்று கடவுள் கூட கண்டுபுடிக்க முடியாமத்தானே கல்லா நிக்காரு.126 கோடிலே 2 பேரு இருந்தா ஜாஸ்தி(அதில் நான் இல்லை)....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201815:33:18 IST Report Abuse

Pugazh V@venkat ரகுராமன் - சின்ன ஆனால் அழுத்தமான நிஜம் உங்கள் கருத்து. சூப்பர். யாரோ ஒரு கடைக்காரரின் அலட்சியத்தால் தீ பிடித்ததற்கு எங்கோ சென்னையில் இருக்கிற யாரோ சில அறநிலையத்துறை அதிகாரிகளோ காரணம்? சொல்லும்போதே அபத்தமாகப் படுகிறது. கோவிலுக்கு சேதம் ஏற்பட்டால் என்ன புண்ணாக்கு லாபம் அற நிலையத் துறைக்கு?

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
09-பிப்-201820:13:00 IST Report Abuse

Tamil SelvanPugazh V அவர்களே, ////அறநிலையத்துறை அமைச்சர் அதிகாரிகள் எல்லாருமே இந்துக்கள் தானேய்யா? அங்கே கடை போட்டிருப்பவர்களும் இந்துக்கள் தான். ஏன் தான் இந்த எச் ராஜா எப்ப பாத்தாலும் இந்து, கிறிஸ்டியன் முஸ்லீம் என்றே பேசி வருகிறாரோ? மத வாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது அய்யா./// (மீனாட்சி கோவில் மீது நடந்த தாக்குதல்: எச்.ராஜா ஆவேசம் - ://www.dinamalar.com/news_detail.asp?id=19529354030141) என்று எழுதி இருந்தீர்கள்... பிப்ரவரி 07 அன்று ///மீனாட்சி கோவில் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்/// என்ற தலைப்பில் (://www.dinamalar.com/news_detail.asp?id=19543104034332) வாசகர்கள் எழுதி இருக்கும் கருத்துக்களை எல்லாம் ஒரு முறை மட்டும் படியுங்கள்... பிறகு மீண்டும் நீங்கள் மேலே எழுதியதாக நான் குறிப்பிட்டு இருக்கும் கருத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்... அப்பொழுதாவது உண்மை என்ன என்று உங்கள் கண்களுக்கு புலப்படுகிறதா என்று பார்க்கலாம்?......

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-பிப்-201815:30:52 IST Report Abuse

Agni Shivaஇந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டமாட்டாயா இறைவா?. தமக்கு மரியாதை இல்லையென தமிழநாட்டை கைவிட்டுவிட்டாயா?. தமிழ்நாட்டில் இந்துமதத்தை எதிர்க்கும் சாத்தான்கள் பெருகி விட்டார்கள் என்று நீ ஓரம் கட்டி விட்டாயா? அருமையான அற்புதமான படைப்புகள் ஓவியங்கள் சிற்பங்கள் எதையும் காப்பாற்ற தெரியாத இந்த அற்பர் குணம் கண்டு தன் மரம் எரித்து தமிழகம் விட்டே போய்விட்டாயா சிவனே? . சத்தியத்தின் நேர்மையின் பக்தியின் கலைத்திறனில் சிறந்து விளங்கிய பழங்கால தமிழனுக்கு இப்படி பொறுப்பற்ற லஞ்சஊழலில் திளைக்கும் குடிபோதைக்கு வாக்குப்போடும் பிள்ளைகள் பிறக்க சபித்து விட்டாயா பெருமாளே? தேவ தாய் ஆண்டாள் நாட்சியாரையே தவறாக சித்தரிக்கும் போலி புலவர்களை கண்டு கொதித்து போனாயா மீனாட்சி அம்மா? நெற்றி நிறைய குங்குமம் வைத்து தாங்கள் நீண்டகாலம் வாழ பூஜைகள் நடத்தி ஊரான் பொண்டாட்டிக்கு பொட்டு ஏன் தாலி ஏன் கிண்டலடித்து பிழைப்பு நடத்தும் கயவர் கூட்டம் கண்டு கோபம் கொண்டாயோ முக்குறுணி விநாயகனே?. என்னையே பாட்டன் என்று சொல்லி அவதூறு சொல்கிறான் என்று உனது திருச்செந்தூர் மண்டபத்தையையே இடிந்து விழ செய்து கோபக்கனலை காட்டுகிறாயா எம் முருகா? கடவுள், சூர ஸம்ஹாரம் செய்த முருகா என்று நாங்கள் வணங்கினால் முருகனை பாட்டன் என்று தலப்பாக்கட்டி ஆளை முருகனாக சித்தரித்து அவமானப்படுத்துகிறானே என கோபமா பார்வதி தேவி? , காலையில் சூரிய நமஸ்காரம் செய்து தினம் பூஜை செய்து சுத்த பத்தமாக தொழிலுக்கு போகும் எங்களை கொடிபிடித்து வாருங்கள் அதோ அந்த ஜாதி இதோ இந்த ஜாதி நீ ஆரியன் நான் திராவிடன் என சண்டைபோட்டு மாய்ந்துவிட வழிகாட்டிய தமிழக துரோகிகள் கூட்டம் கண்டு அதிபயங்கர கோபம் கொண்டாயா புருஷோத்தமா? . மீண்டு தமிழகத்திற்கு வர வேண்டிக்கேட்கிறோம் மிஞ்சி இருக்கும் எங்களை காப்பற்று நாரயணா ஆர்ப்பரித்து வந்து, அரங்கனையும், ஆண்டாளையும், அழகன் முருகனையும், அன்னை மீனாக்ஷியையும் அவதூறு செய்யும் அரக்கர்களை அழித்தொழிக்க விரைந்து வா எங்கள் ஆருயிர் ஆண்டவா..

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201801:34:36 IST Report Abuse

Manianஅக்னி சிவா, உண்மையான பக்தன் தான் புலம்பலாம். நீ புலம்பாதே...

Rate this:
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
09-பிப்-201813:46:09 IST Report Abuse

chinnamanibalanகடவுள் நம்பிக்கையும் ,நேர்மையான எண்ணங்களும் உடையவர்கள் அறநிலையத்துறையில் பெரும்பாலும் இன்றில்லை என்றுதான் கூற வேண்டும். அறநிலையத்துறையில் பணி புரிபவர்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையற்ற, காசு பார்க்கும் நோக்கம் கொண்டவர்களே. இத்தகைய ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அறநிலையத்துறை பக்தர்களின் கோபத்திற்கு மட்டுமல்ல, தெய்வத்தின் கோபத்திற்கும் ஆளாகி நிற்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201801:38:34 IST Report Abuse

Manianஎந்த பக்தனை குறிப்பிடுகீறீர் ஐயா? தமிழ் நாட்டில் யோக்கியன் இருப்பதாக எந்த வரலாறு தற்போது சொல்லுகிறது? கமலா,கருணாவா,வைரமுத்தா, வீரமணியா?...

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
09-பிப்-201811:46:31 IST Report Abuse

Kurshiyagandhiஇவ்வளவு நடந்ததற்கு பிறகு என் மனம் ஒன்றை நினைக்கிறது...."தெய்வம் இருப்பது எங்கே.........?" இந்த விபத்திற்கு காரணம் பதவி வெறியில் பணத்திமிரில் இருக்கும் இத்துறை சம்மந்த பட்ட அதிகாரிகள் தான்........... அவர்கள் அலட்சியப்போக்கு தான் இந்த தீ விபத்திற்கு காரணம்...........

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:06:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"அவனின்றி அணுவும் அசையாது" ன்னு சொன்னது பொய்யா?...

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201801:40:48 IST Report Abuse

Manianஉண்மையே அவன் ஆண்பால். கடவுளுக்கு பாலேது(பால் லேது-)...

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
09-பிப்-201811:41:45 IST Report Abuse

Bhaskaranமதுரைமீனாக்ஷி Amman கோவிலில் வீரவசந்தராயர் மணடபத்தில் பிரித்தெடுத்த சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நல்ல விலைக்கு கிடைக்கும் அணுகவும் அறநிலையத்துறை மதுரை இந்த manthiri அறிவிப்பு கூட விரைவில் வெளிவரலாம் ஏனெனில் மண்டபம் அழிந்துவிட்டதால் புதுமண்டபம் கட்டப்போகிறார்கள்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:07:47 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"புது மண்டபம்" தான் ஏற்கனவே இருக்கே.. appO கட்டியாச்சுன்னு சொல்லி காசை அடிச்சிட்டா போச்சா? ஐயோ சொக்கா, இதென்ன சோதனை?...

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
09-பிப்-201811:30:40 IST Report Abuse

Ravichandranஇந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டமாட்டாயா இறைவா. தமக்கு மரியாதை இல்லையென தமிழநாட்டை கைவிட்டுவிட்டயா. அருமையான அற்புதமான படைப்புகள் ஓவியங்கள் சிற்பங்கள் எதையும் காப்பாற்ற தெரியாத இந்த அற்பர் குணம் கண்டு தமிழகம் விட்டே போய்விட்டாயா சிவனே. சத்தியத்தின் நேர்மையின் பக்தியின் கலைத்திறனில் சிறந்து விளங்கிய பழங்கால தமிழனுக்கு இப்படி பொறுப்பற்ற லஞ்சஊழலில் திளைக்கும் குடிபோதைக்கு வாக்குப்போடும் பிள்ளைகள் பிறக்க சபித்து விட்டாயா பெருமாளே தேவ தாய் ஆண்டாள் நாட்சியாரையே தவறாக சித்தரிக்கும் புலவர்களை கண்டு கொதித்து போனாயா மீனாட்சி அம்மா நெற்றி நிறைய குங்குமம் வைத்து தாங்கள் நீண்டகாலம் வாழ பூஜைகள் நடத்தி ஊரான் பொண்டாட்டிக்கு பொட்டு ஏன் தாலி ஏன் கிண்டலடித்து பிழைப்பு நடத்தும் கயவர் கூட்டம் கண்டு கோபம் கொண்டாயோ முக்குறுணி விநாயகனே. கடவுள், சூர ஸம்ஹாரம் செய்த முருகா என்று நாங்கள் வணங்கினால் முருகனை பாட்டன் என்று சுருக்கி விட்டார்களே என கோபமா பார்வதி தேவி, காலையில் சூரிய நமஸ்காரம் செய்து தினம் பூஜை செய்து சுத்த பத்தமாக தொழிலுக்கு போகும் எங்களை கொடிபிடித்து வாருங்கள் அதோ அந்த ஜாதி இதோ இந்த ஜாதி என சண்டைபோட்டு மாய்ந்துவிட வழிகாட்டிய தமிழக துரோகிகள் கூட்டம் கண்டு அதிபயங்கர கோபம் கொண்டாயா புருஷோத்தம. மீண்டு தமிழகத்திற்கு வர வேண்டிக்கேட்கிறோம் மிஞ்சி இருக்கும் எங்களை காப்பற்று நாரயணா.

Rate this:
christ - chennai,இந்தியா
09-பிப்-201810:12:02 IST Report Abuse

christபணத்துக்கு ஆசைப்பட்டு பாரம்பரியத்தை அழித்து விட்டார்கள்

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
09-பிப்-201810:05:19 IST Report Abuse

Sampath Kumarவிபத்து போல தெரிய வில்லை?/ அப்போ திருத்தணியில் நடந்ததும் விபத்து போல இல்லையா ஊசிமணி

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-பிப்-201815:08:48 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்திருச்செந்தூரில் தான் கூரை விழுந்து ஒரு பெண்ணின் உயிர் காவு வாங்கப்பட்டது....

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
09-பிப்-201809:32:47 IST Report Abuse

ரத்தினம்vns அவர்களே, புது புட்டு புட்டு வைத்துள்ளீர்கள். ஏதோ சாதுவான இந்துக்கள் தான் முஸ்லீம்களின் புராதன வழிபாடு தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதாக பொய் பிரச்சாரங்கள் நடக்கின்றன. பாகிஸ்தானில் அவர்கள் செய்த, அளவற்ற அட்டூழியங்கள் வெளி உலகிற்கு வருவதும் இல்லை, கோவில்களுக்குள் கடைகளே இருக்க கூடாது. அவைகள் வழிபாட்டு இடங்கள் மட்டுமே. இந்து அற நிலையத்துறை யையே சீர் திருத்த வேண்டும்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement