கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் : அரசு பள்ளியில் அரங்கேறிய கொடூரம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் : அரசு பள்ளியில் அரங்கேறிய கொடூரம்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கழிப்பறை சுத்தம், Toilet cleaning,அரசு பள்ளி மாணவிகள்,government school students, ஆசிரியர்கள், teachers,  கல்வித்துறை அதிகாரி, Education officer, பெரம்பலுார் அரசு பள்ளி,Perambalur government school,

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, அரசு பள்ளி மாணவியரை, ஆசிரியர்கள் சிலர், கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமான பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலுார் மாவட்டம், ஆதனுார் கிராமத்தில் யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை, சுத்தம் செய்ய, பள்ளியில் பயிலும் மாணவியரை ஆசிரியர்கள் ஈடுபடுத்தி உள்ளனர். கழிப்பறையை, சுத்தம் செய்வதற்கான பிளீச்சிங் பவுடர், பினாயிலை பயன்படுத்தி, மாணவியர் இருவர் துடைப்பத்தால் நன்றாக தேய்த்து, தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துள்ளனர்.இதை நேரில் பார்த்த ஒருவர், மொபைல் போனில் படம் எடுத்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியதுடன், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் பெற்றோர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே, இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் செந்தில்குமார் என்பவர், நேற்று முன்தினம், 5ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவரை, அடித்து காயப்படுத்தியதாக எழுந்த புகாரில், அணைப்பாடி கிராம பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இச்சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள், மாணவியரை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம் நடந்தேறி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
09-பிப்-201818:30:24 IST Report Abuse
r.sundaram இந்த பள்ளியில் இந்த மாதிரி வேலைகளை செய்வதற்குரிய பணியாட்கள் உண்டா இல்லையா? இல்லை என்றால் ஏன்? ஒரு ஆசிரியரோ, அல்லது தலைமை ஆசிரியரோ இந்த வேலையை செய்ய முடியுமா/செய்வார்களா? பணியாளர்களை நியமிக்காது யார் தப்பு?
Rate this:
Share this comment
Cancel
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
09-பிப்-201813:21:43 IST Report Abuse
Hari Bojan என்னடா இந்த பெரம்பலூருக்கு வந்த சோதனை
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-பிப்-201809:18:40 IST Report Abuse
Amirthalingam Sinniah பணித்த ஆசிரியரை கழுவ நிர்பந்திக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X