உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்; ஜீயருக்கு எச்.ராஜா வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்; ஜீயருக்கு எச்.ராஜா வேண்டுகோள்

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள், சடகோப ராமானுஜ ஜீயர், Sadagopa Ramanuja Jeeyar, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், எச்.ராஜா, ஜீயர் உண்ணாவிரதம், கவிஞர் வைரமுத்து,  ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ஆண்டாள் பக்தர்கள் , இண்டியானா பல்கலைக்கழகம், Srivilliputhur Andal, H. Raja, jeeyar fasting, Poet Vairamuthu, Srivilliputhur Zeyar, Andal devotees, Indiana University,

ஸ்ரீவில்லிபுத்தூர்: வைரமுத்துவை கண்டித்து 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரை பா.ஜ., தேசிய செயலர் ராஜா சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்.


உண்ணாவிரதம்

ராஜபாளையத்தில் நடந்த விழாவில், வைரமுத்து ஆண்டாளை அவதுாறாக பேசியதற்கு, பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்னையில், அவர் ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சடகோபராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 2வது நாளாக அவரின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.


சந்திப்பு

இந்நிலையில், ஜீயர், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டாள் குறித்து ஆராய்ச்சி நடத்தவில்லை என இண்டியானா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. கட்டுரை எழுதிய நாராயணனும், தனது கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என டிவி பேட்டியில் கூறியுள்ளார். வைரமுத்து தொடர்ந்து 14 கட்டுரைகள் எழுதினார். அதில் இந்து மதத்தை கொச்சைபடுத்துவதாகவும், இந்து மத சனாதன கொள்கைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பினார். பொய்யான சந்தேக விதைகளை அவர் தூவுகிறார். முதலில் பெருமைகளை சொல்லிவிட்டு கடைசியில் ஒருவரை இகழ்வது வைரமுத்து பாணி.

மோட்சம் பற்றி திருவள்ளுவர் பேசவில்லை என வைரமுத்து பேசியது பொய். தமிழ் தாத்தா உ.வே.ச குறித்தும் தனது கட்டுரையில் தவறான தகவல்களை வைரமுத்து கூறியுள்ளார். உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் கூறினேன். அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன். இவ்வாறு ராஜா கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
09-பிப்-201813:36:59 IST Report Abuse
PRAKASH கொலை கேசுல நீதிமன்றத்துக்கும் சிறைக்கும் போகும்போது மதத்துக்கு கொச்சை ஏற்படவில்லையா ?> ..
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-பிப்-201813:36:53 IST Report Abuse
Appan கிராமத்திலிருக்கும் சாதாரண மக்களுக்கு கடவுள் என்றால் மாரியம்மன், முனீஸ்வரன், முருகன், காத்தவராயன் தான்.....இப்படி இருக்கையில் ஆண்டாள் . நாயன்மார்கள். ஆழ்வார்கள் அதிகம் தெரிந்திருக்காது..படித்த நகரத்தில் வாழுபவர்களுக்குத் தான் இந்த கடவுள்கள்..அதனால் வைரமுத்து சொல்லை ஜீயர் பெரிது படுத்தாமல் , உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள வேண்டு கிறோம்..அந்த காலத்தில் அரசர்களுக்கு நிகராக பூஜாரிகள் ,, பிரமீன்களை வைத்து இருந்தார்கள்..பிரமின்களுக்கு செய்யும் குற்றம் ராஜா துரோகமாக பார்க்க பட்டது..இப்படி சமூக அந்தஸ்த்தில் இருக்கும் ஜீயர் , சாதாரண மக்கள் சொன்ன சொல்லை இவ்வளவு பெரிது படுத்த கூடாது..அதுவும் வைரமுத்து ஜீயர் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும் என்று சொன்ன பிறகும் இப்படி செய்யலாமா..?.சமூகத்திற்கு வழி கட்ட வேண்டியவர்களே இப்படி செய்யலாமா..?.
Rate this:
Share this comment
Cancel
KGSriraman -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201813:33:48 IST Report Abuse
KGSriraman வைரமுத்து,,,,ஆம் கவிப்பேரரசு வைரமுத்து,,,,ஏதோ சினிமாவுக்கு பாட்டு எழுதி,,,,,ஏதேதோ கட்டுரைகள் எழுதி,,,காசு பணம், துட்டு, பார்த்து வந்தார்,,,மேடைகளில் பேசும்போது,,,,,குரல் வளம். நன்றாகவுள்ளதால்,,,,,,,தமிழ் சொற்களை ஏற்ற இயக்கத்துடன் பேசி,,,,காசு பார்த்த ஆசாமி,,. சினிமா மேடைகளிலும். திராவிட கட்சி,,மற்றும் தி.மு.க, மேடைகளில் பேசி. தன்னை,, வளர்த்துக் கொண்டவர்,,,....இவரைபற்றி. இசைஞானி இளைய ராஜாவிடம் விசாரித்தால்,, இவரை பற்றிய முழு விபரம் தெரியும். தி. மு.க, கட்சியால்,,, அதன் ஆட்சி காலத்தில். மிக பயன் அடைந்தவர் வைரமுத்து,,, அவர் மகன் இவர் மூலம்,,,,தி .மு.க வால்,,பயன் அடைந்த வரலாறு தெரியும். அப்படிப்பட்ட வைரமுத்து,,,, நாணயமாணவராக நடந்து கொள்வார் என்று நாம் எதிர்பார்ப்பது,,,நம் தவறு... இவரை போன்றவர்கள்,, திருந்துவார்கள்,,,,திருத்திக்கொள்வார்கள் என்பது,,நடக்காத ஒரு நிகழ்வு.... எனவே. இவர் வந்து மன்னிப்பு கேட்ப்பார்,,,,கேக்க வேண்டும், என ஜீயர் போன்ற மடாதிபதிகள்,,,,,,எதிர்ப்பப்பது தவறு... தப்பு எது,,, தவறு எது என தெரிதே ஒரு காரியத்தை செய்த பின் இவர்கள்,,,,திருந்தமாட்டார்கள்,, எனவே,,,அவரர் செய்த,, தப்புக்கான தண்டனையை. நிச்சயம் அடைவார்கள், எனவே தாங்கள்,, கடவுள் மீது பாரத்தை போட்டு, உங்களின் உண்ணாவிரத த்தை. முடித்து கொள்ளவும்.. கடவுளின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201813:21:21 IST Report Abuse
தமிழ்வேல் மன்னிப்புக் கேட்டாலும் செத்தப் பாம்ப அடிக்காம விடமாட்டானுவோ. அதனால கேட்டு அவருக்கு (தொழிலுக்கு) பிரயோசனம் இல்ல.. அவர் வருவதால், இவர் உண்ணாவிரதத்தை விடுவார் என்றால், வர வாய்ப்புண்டு. ஆக, மன்னிப்புக் கேட்கறத்துக்காக வரப்போறதில்ல..
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
09-பிப்-201813:14:17 IST Report Abuse
venkatan புனித கயிலாய மலை எங்கே? படு பாதாள சாக்கடை எங்கே? ஆன்மிகத்தை இந்த 'டை'அடித்த 'மண்டு'க ளா ல் சிதைத்து விட முடியாது அற்ப கீழ் மக்களை உதா சீனம் செய்திடுக. கெட்டா லும் மேன் மக்கள் மேன் மக்களே.சங்கு சுட்டாலும் வெண்மை தரும். பதரான பேதைகளை நீக்கி தீவிர பக்தி கொள்க. இந்து எதிர்ப்பு இன்று புதிதல்ல. சோதனை வர வர மதம் விரியும், எல்லை தாண்டி,கடல் தாண்டியும் கூட.சிவசிவ
Rate this:
Share this comment
Cancel
Raghav - Chennai,இந்தியா
09-பிப்-201813:14:09 IST Report Abuse
Raghav சரியான கேள்வி, பதில் சொல்லுங்கப்பா அமைதி குரூப்ஸ்
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
09-பிப்-201812:52:09 IST Report Abuse
த.இராஜகுமார் ஹெச். ராஜா போகிற இடம் விளங்காது..
Rate this:
Share this comment
Cancel
wellington - thoothukudi,இந்தியா
09-பிப்-201811:39:38 IST Report Abuse
wellington நீங்கள் என்ன டிராமா போட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறப்போவதில்லை ,என்ன பேசினாலும் நடக்கமாட்டேங்குது என்பதற்காக சில தினங்களாக நெருப்போடு விளையாடி வருகிறார்கள் ,அதற்கும் மக்கள் அசைஞ்சி கொடுக்கவில்லை இன்னும் என்னவெல்லாம் செய்ய்யபோகிறார்களோ ......
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
09-பிப்-201811:36:08 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. கைகொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்...ஆகவே நீங்கள் யார் சொன்னாலும் நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிடாதீர்கள், அந்த ஆண்டாள் எங்களிடம் சொல்லி உங்களை நிறுத்த சொல்லும் வரை நிறுத்தாதீர்கள், ஐயா நிறுத்தாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201811:32:37 IST Report Abuse
Pasupathi Subbian நிச்சயமாக , எதிர்ப்பை காண்பிக்க வேண்டியதுதான் , அதற்காக தங்களின் உடலை வருத்திக் கொள்ள தேவையில்லை. அதற்கு தகுதியான ஆள் அவரும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை