தமிழகத்தில் எய்ம்ஸ்: தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எய்ம்ஸ்: தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (31)
Advertisement
எய்ம்ஸ் மருத்துவமனை,Aiims Hospital, பிரதமர் அலுவலகம் கடிதம், Prime Minister Office Letter, ஐகோர்ட் வழக்கு,high court, தமிழக சுகாதார துறை, Health Department of tamilnadu,மத்திய அரசு, Central Government, தமிழக அரசு, Tamil Nadu Government,

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக சுகாதார துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


வழக்கு:


TN அரசுக்கு PMO அறிவுரை

கடந்த 2015ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன.
தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில், மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிந்து பல மாதங்களாகியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவது குறித்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பரிந்துரை கடிதம்


இதற்கிடையில் பிரதமர் அலுவலகம், தமிழக சுகாதார துறைக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை துரிதபடுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த பரிந்துரை கடிதத்தின் நகல், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இடம் தேர்வாகவில்லை

இதனிடையே, லோக்சபாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த பதில்: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. எய்ம்ஸ் அமையும் பணிகள் 2022க்குள் முடியும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
10-பிப்-201805:44:20 IST Report Abuse
BoochiMarunthu AIIMS டாக்டர்ஸ் எல்லாம் வட நாட்டுக்காரனாக தான் இருப்பார்கள் அவர்கள் மேல குறிப்பிட்ட எந்த இடத்திலேயும் வந்து வேலைசெய்யமாட்டார்கள் . சென்னை தான் மறுபடியும் ஆனால் அப்போல்லோ மற்றும் fortis வியாபாரம் படுத்துவிடும் என்று அனுமதிக்கமாட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
dineshvellore - sunnyvale,யூ.எஸ்.ஏ
10-பிப்-201803:40:40 IST Report Abuse
dineshvellore We need to support/appreciate the person Ramesh who is following this up in High Court. State/Central Governments are still identifying location, this is going for around 2 years time and don't know still how long will it take further,
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
09-பிப்-201821:32:38 IST Report Abuse
rmr சாராய கடை திறக்கணும்னா உடனே எல்லாம் வேலையும் செய்யும் இந்த அரசு , மருத்துவமனை பள்ளி இது போன்ற மக்களின் முக்கிய தேவைகளை திறக்க வழி செய்யுமா இந்த அரசு ? நிதி மன்ற உத்தரவிற்கு பின் முடிய சாராய கடைகளை திறக்க இவர்கள் செய்த வேலைகள் வேகம் மற்றவற்றில் இல்லை அது ஏன் , அதனால் பயன் பெறுவது யாரோ ? தமிழக மக்களை இந்த திராவிட கட்சிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
09-பிப்-201823:26:52 IST Report Abuse
K.Sugavanamநீதிமன்றமே தன நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறதே இந்த விஷயத்தில்..இங்கல்ல,வடமாநிலங்களில்..உதாரணம் பஞ்சாபி..எனவே தமிழகத்தைமட்டும் குறை சொல்லாதீர்கள்.ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த குறைபாடு உள்ளது..எல்லாவற்றுக்கும் திராவிட கட்சிகளை குறை சொல்லாதீர்கள்..சுயம்புகள் ஆளும் மகாராஷ்டிரத்தில் விபச்சாரம் சட்டத்தில் கொண்டுவரப்பட்டு நடக்கிறது வெளிப்படையாக..ஏன் அதை பிஜேபி சிவசேனா அரசு தடை செய்யவில்லை?...
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
09-பிப்-201821:18:12 IST Report Abuse
Vijay D.Ratnam வேதாரண்யம் அருகில் கோடியக்கரை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால் நல்லது தமிழக கடற்கரை ஓரத்தின் மையப்பகுதி. தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடாத பகுதி. சாயப்பட்டறை, தோல்தொழிற்சாலைகள் என்று நிலத்தை வீணாக்காத பகுதி, போக்குவரத்து நெரிசல் சுத்தமாக இல்லாத பகுதி. மன்னார்குடி மாஃபியா, திருக்குவளை மாஃபியா, சிவகங்கை மாஃபியா எல்லாம் அருகில் இருந்தாலும் அரசியல்வியாதிகள் அதிகம் எட்டிப்பார்க்காத பகுதி, மாநாடு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், மறியல், மனித சங்கிலி அக்கப்போர் அதிகம் இல்லாத பகுதி.பார்ட்டர்ல வைக்காம இங்க வச்சா மலையாளத்தானும், தெலுங்கனும் கன்னடனும், கண்டவனும் வரணும்னா குறைந்தது 400 கிமீ குறையாமல் பயணம் பண்ணித்தான் வரணும். திருச்சி ஏர்போர்ட், காரைக்கால் ஹார்பர், சிலோன் எல்லாம் அருகில் இருக்கிறது. ஆன் தி வே யில் உள்ள ஊர் கிடையாது. கோடியக்கரைக்கு போறவன் மட்டும்தான் போவான். அமைதியான இடம். இந்த இடத்துல ஏன் எய்ம்ஸ் அமைக்க கூடாது. சிட்டில இருக்கறவன் மட்டும்தான் வசதிகளை அனுபவிக்கணுமா. எய்ம்ஸ் மருத்துவமனையை இங்க கொண்டுவாங்க. அப்புறம் கோடியக்கரையும் கோயம்பத்தூர் ஆகிடும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201800:10:13 IST Report Abuse
தமிழ்வேல் அங்கே எவ்வளவு நிலம் வச்சி இருக்கீங்க.....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-பிப்-201820:12:02 IST Report Abuse
Pasupathi Subbian தமிழகம் மேம்பட , மக்களின் அறிவுக்கண் திறக்க , இந்த சந்தர்ப்பம் ஒரு அரிய சந்தர்ப்பம். வீணே நமக்குள் பிரச்சனை செய்துகொள்ளாமல். பின் தங்கிய , மாவட்டத்தில் இந்த அதி நவீன மருத்துவமனை அமைய , தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். வாழை பழத்தை உரித்து , நசுக்கி கொடுத்தாகிவிட்டது, இனி அதை விழுங்க வேண்டியதுதான் பாக்கி, அதையும் கோட்டை விட்டால் , வரும் மாணவ சமுதாயம் இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. இடத்தை கூறவேண்டியதுதான் , நிலத்தை கையக படுத்தி , மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினால் போதும் , மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். என்ன இதில் கமிஷன் வாங்கமுடியாது என்பது மட்டுமே சிரமம் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
09-பிப்-201817:51:15 IST Report Abuse
இந்தியன் kumar மருத்துவ வசதி அதிகம் கிடைக்காமலிருக்கும் இடத்தில அமைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
09-பிப்-201815:50:59 IST Report Abuse
ரத்தினம் சரி, போனது போட்டும் . இனமேயாவது அது இதுன்னு காலத்தை கடத்தாம, மதுரைல எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொரங்கன்னு சட்டு புட்டுன்னு ஒரு லெட்டரு டில்லிக்கு அனுப்புங்க.
Rate this:
Share this comment
09-பிப்-201821:43:33 IST Report Abuse
SivaKumarTrichy-Thanjai saalaiyil AIIMS OK....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
09-பிப்-201815:27:32 IST Report Abuse
Ravichandran இடமெல்லாம் பார்த்து கொடுக்க நேரமில்லை ஜி, எங்களுக்கு முதல்ல ஆட்சியை காப்பாத்தணும் அப்புறம் கட்சியை காப்பாத்தணும் அப்புறம் கமிஷனை காப்பதனும். அதும்போக நீங்க எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கொண்டுவந்த எங்க அரசியல் வாதிகளோட ஆஸ்ப்பிட்டல் பிஸ்னஸ் படுத்துக்கலாம் அதையும் காப்பாத்தணும், முக்கியமா நீங்க ஹிந்தில எய்ம்ஸ் ஆஸ்பிடல் போர்ட் வைப்பீங்க அது நாங்க எதுக்கமாட்டோம் . இப்படி நிறைய விஷயம் இருக்கு, அதனால எங்களுக்கு கேந்த்ரா வித்தியாலய, எய்ம்ஸ் கிம்ஸ் லாம் வேண்டாமுங்கோ, மக்கள் நாசமா போனாலும் கவலை இல்லிங்கோ.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-பிப்-201814:38:51 IST Report Abuse
தமிழ்வேல் இடத்த, சீட்டு குலுக்கி தேர்தெடுக்கலாமா ? (எல்லாதாள் ளையும் மருத, மருதன்னு எழுதி ?)
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
09-பிப்-201814:29:30 IST Report Abuse
balakrishnan இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி கடிதம் எழுதிக்கிட்டே இருந்தால் எய்ம்ஸ் வராது, மக்களிடையே வெறுப்பு தான் வரும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை