துணைவேந்தர் கணபதிக்கு போலீஸ் காவல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துணைவேந்தர் கணபதிக்கு போலீஸ் காவல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கணபதி, பாரதியார் பல்கலை, போலீஸ் காவல்

கோவை: உதவி பேராசிரியர் நியமனத்திற்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜான் வினோ விடுமுறை காரணமாக இந்த வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி குணசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை பிப்.,12க்கு ஒத்திவைத்தார். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதங்களை எடுத்து வைக்கலாம் எனக்கூறினார்.


கோரிக்கை

நீதிபதியிடம் கணபதி, தான் மூத்த குடிமகன். எனக்கு சுடுதண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, போலீசாருக்கு கணபதி கேட்டதை செய்து தர உத்தரவிட்டார்.

'கஸ்டடி' கோரிய வழக்கு ஒத்திவைப்பு

பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் கணபதி நிருபர்களிடம் அளித்த பேட்டி: மனசாட்சியோடு எழுதுங்கள். எதையாவது எழுத வேண்டும் என எழுத வேண்டாம். உங்களுக்கும் குழந்தைகள் உள்ளன. பொய் எழுதுகிறீர்கள். சதியை வென்று வருவேன் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-201817:29:12 IST Report Abuse
அப்பு சதியை வென்று வருவேன் - ஆஹா அரசியல்வாதி ரேஞ்சுக்குப் பேச ஆரம்பிச்சுட்டார். யார் சதி பண்ணினாங்க? எப்பிடிப் பாத்தாலும் இவருக்கு மேலிட ஆதரவு இருக்குதுன்னு தெரியாது. ஆனா தங்களைக் காப்பாத்திக்க மேலிடம் என்னென்ன செய்யுமோ
Rate this:
Share this comment
Cancel
R Elango - Coimbatore,இந்தியா
09-பிப்-201816:52:24 IST Report Abuse
R Elango காலக்கொடுமை யாரெல்லாம் மனசாட்சி பற்றி பேசறாங்க, இவருக்கு கிடைக்கிற தண்டனை, இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு பாடமா இருக்கணும். இல்லை என்றால் தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் இருக்காது. சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விடும். இதுக்கு முன்னாடி இருந்தவர்களையும் விசாரணை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SSV - chennai,இந்தியா
09-பிப்-201815:07:32 IST Report Abuse
SSV சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - COIMBATORE,இந்தியா
09-பிப்-201813:52:30 IST Report Abuse
Tamilan மனசாட்சி உங்களுக்கு இருக்க கணபதி அவர்களே பணம் இருந்தால் தான் வேலை என்று சொன்ன உங்கள் மனசாட்சி எங்கே ?....
Rate this:
Share this comment
Cancel
SSV - chennai,இந்தியா
09-பிப்-201812:59:30 IST Report Abuse
SSV பொய்யால் நிரப்பப்பட்ட, 67 வயது, 80 கிலோ உடம்பை இப்போதான் பார்க்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-பிப்-201812:31:19 IST Report Abuse
A.George Alphonse This man wants to maintain his health by using Hot water and comfor basic needs while in custody by using his senior citizen status and why he did not maintain the same senior citizen status while he received bribe from others.He was advising the waiting medias reporters to write the facts and remained them about their children and same why he did not think when he was accepted the bribe and committed the grave offence.Hereafter this man life will in tragedy in police custody and frequently appearing in court cases at his old age.
Rate this:
Share this comment
Cancel
Vivek Anandan - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201812:29:21 IST Report Abuse
Vivek Anandan SUCH HIGH PRIORITY CASES , JUDICIARY HAVE TO ACT FAST, INSTEAD OF DRAGGING THE CASE, IF THE ACCUSED GANAPTHY IS REMANDED UNDER POLICE CUSTODY TODAY, BY MONDAY ALL THE TRUTH WOULD HAVE COME OUT,.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை