ரூ.1,650 கோடி! ஆராய்ச்சி மாணவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு.. கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.1,650 கோடி!
ஆராய்ச்சி மாணவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு..
கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு

புதுடில்லி : ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பி.எம்.ஆர்.எப்., எனப்படும் பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, 1,650 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.

ரூ.1,650 கோடி,ஆராய்ச்சி மாணவர்கள்,மத்திய அரசு,ஒதுக்கீடு,கல்வி உதவி தொகை,80 ஆயிரம் ரூபாய்,உயர்வு


ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிக அளவு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுவதும் தடைபடுகிறது. இதை தடுக்கும் வகையில்,

'ஆராய்ச்சி மாணவர்களுக்கான, பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உயர்த்தப்படும்' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும், 2018 - 19 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்துக்கும், 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதைத் தவிர, வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, ஆராய்ச்சி நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


யார் விண்ணப்பிக்கலாம்!


* பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தில் சேருவதற்கு, பி.டெக்., ஒருங்கிணைந்த, எம்.டெக்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், எம்.எஸ்சி., படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
* ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
* சி.ஜி.பி.ஏ., எனப்படும் ஒட்டுமொத்த தர பள்ளி சராசரி, 8.5 சதவீதம் இருக்க வேண்டும்.

ஆராய்ச்சிகள் நடக்கும்!


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், நம் நாட்டின் மிகச் சிறந்த திறமையை, நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு புறத்தில் நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் நடக்கும். அதே நேரத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியுடைய ஆசிரியர்களும் கிடைப்பர்.
-பிரகாஷ் ஜாவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பா.ஜ.,


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
10-பிப்-201822:23:28 IST Report Abuse

Manianமஞ்ச துண்டார் செய்த வினை திராவிடர்களை சும்மா விடுமா? கோடி பணம் இருந்து, அறிவிருந்து, ஆள் படை பலம் இருந்து, மற்றதை விரும்பும் மக்கள் இருந்து, ... இப்படி எல்லாம் இருக்குற எவன் இந்தியாவில் இருக்கான் என்று சொல்ல முடியுமா? ஒரு கிருஷ்ணன் வந்த பிறகுதான் பாண்டவர்கள் வெல்ல முடிந்தது. அந்த கிருஷ்ணன் இப்போ எங்கிட்டு ஓடிப் போயிட்டாரோ? ,

Rate this:
Raman - Chennai,இந்தியா
10-பிப்-201822:22:36 IST Report Abuse

RamanWell said krishnan and agni Shiva.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201817:49:39 IST Report Abuse

Endrum Indian1976 ல் எனக்கு ஐ.ஐ.டி.மும்பையில் இதற்காக கிடைத்தது ரூ. 500 /- இப்போ 140 மடங்கா, பரவாயில்லை. நல்லது. அப்போ சம்பளம் ரூ. 725 +டி.ஏ. SAIL ல் = ரூ 1,125 . ஆனால் இப்போ SAIL ல் வெறும் 45,000 என்று நினைக்கிறேன், அதாவது 44 மடங்கு அதிகம் ??? ஆராய்ச்சி மாணவர்களை விட எப்படி கம்மியானது????. சுவிற்சர்லாந்தில் எனது மாப்பிள்ளைக்கு கிடைத்தது சுவிஸ் பிராங்க்ஸ் 4 ,000 ஆராய்ச்சி மாணவராக. அது ஒரு சாதாரண எஞ்சினீர் வாங்கும் சம்பளம். எங்கேயோ ஒதைக்குதே இந்த கூட்டல் கழித்தல் கணக்கில்???

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
10-பிப்-201815:42:42 IST Report Abuse

pattikkaattaan இப்போது பarணியாற்றும் கல்லூரி பேராசிரியைகளில் எத்தனை பேர் திறமைனின் அடிப்படியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்மையாக பணியாற்றுபவர்கள் என்றால் ஒவ்வொரு கல்லூரியிலும் மிக சிலரே... இவர்கள் மாணவர்களை உருவாக்கவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் வளர்ச்சியை நசுக்காமல் இருந்தாலே போதும்... நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்பதால் பதிவிடுகிறேன்... கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உயிரி தொழில்நுட்ப பிரிவில் என் மகள் BTech படிப்பை தேர்ந்தெடுத்து படித்துவந்தாள். அப்போது அணைத்து ஆசிரியர்களும் புதிதாக பணிக்கு சேர்ந்தார்கள்.. எந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார்கள் என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை ... கணவன், மனைவி என தம்பதிகளாகவே பணியில் சேர்ந்துள்ளார்.. வாழ்க அம்மா அரசு... கொடுமை என்னவென்றால் மூன்று முறை என் மகளை குறிப்பிட்ட சில பேராசிரியர்கள் குறைந்த மதிப்பெண் போட்டு பெயிலாக்கினார்.. பீஸ் கட்டி விடைத்தாளின் நகலை பெற்று பார்த்தால், வினாக்கள் சரியாக எழுதப்பட்டுள்ளது, ஆனால் மதிப்பெண் தரவில்லை ... பின் மறுபடியும் மறு மதிப்பீடு செய்ய பணம் கட்டி , மதிப்பிட்டதில் பாஸ் மார்க் போட்டார்கள்... ஆனாலும் உண்மையாக தரவேண்டிய மதிப்பெண்களை தரவில்லை ... மூன்று முறை இவ்வாறு நடந்தது ... ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் , நாங்கள் அரசு பணியில் இருக்கிறோம் , எங்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது ... நீங்கள் டிகிரியை வாங்க முடியாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டியதால் , என் மகள் பெற்றோர்களாகிய நாங்களும் வந்து கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து விட்டாள்... எப்படியாவது நான்கு வருடம் படிப்பை முடித்துவிடுகிறேன் என்று அணைத்து கொடுமைகளையும் சகித்துக்கொண்டாள் ... அப்போதே உறுதியாக சொல்லிவிட்டாள், நான் ஆராய்ச்சி படிப்பை இங்கு படிக்கமாட்டேன் , வெளிநாட்டில் மட்டுமே படிப்பேன் என்று ... நான்காம் வருட படிப்பின்போதே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு , இப்போது வெளிநாட்டில் உலகத்தரமான பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்துள்ளாள்.. வெளிநாட்டு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போதும் இடையூறு செய்தார்கள் ... இப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களை கொண்டு மாணவர்கள் எப்படி முன்னேற முடியும்?... அரசு கொடுத்தாலும் அதை நேர்மையானவர்களுக்கு செல்லாமல் தடுக்கும் புல்லுருவிகளை இனம் கண்டு நீக்க வேண்டும் ... இப்போது காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்றால் எதிர்காலம் எப்படி உருப்படும் ?

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
10-பிப்-201811:43:14 IST Report Abuse

Shanuஆராட்சி மாணவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகை முக்கியம் அல்ல. முதலில் நல்ல ஆராட்சி கூடம் வேண்டும். அதற்க்கு விலை உயர்ந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வேண்டும். அது இல்லாமல் ஆராட்சி செய்ய சொன்னால்?

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
10-பிப்-201810:45:56 IST Report Abuse

இடவை கண்ணன் கல்வித் துறையில் அதிலும் குறிப்பாக அடிப்படை விஞ்ஞான துறையில் ஆராய்ச்சி என்பது நம்ம ஊரில் கிட்ட தட்ட இல்லவே இல்லை...ஆராய்ச்சி கூடங்கள் இல்லாதது, இங்கு பலர் குறிப்பிட்டுள்ள கைட் எனப்படும் வழிகாட்டிகள் தொல்லைகள் என பல பிரச்சினைகள் உள்ளன... இந்த ஊக்க தொகை உயர்வு வரவேற்க தக்கது...அதே நேரம் ஆராய்ச்சி கூடங்களை லேட்டஸ்ட் வசதிகளோடு மேம்படுத்தவும் வழிவகைகள் செய்வது நலம்...

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
10-பிப்-201810:05:58 IST Report Abuse

VOICEஇந்தியாவில பணம் கொடுத்து பரிட்சையில் தில்லுமுல்லு பணம் கொடுத்து PHD வாங்கி . பணம் கொடுத்து ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் வேலை வாங்கிய 90 சதவிகித நபர்களால் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மாணவர்களை உருவாக்கமுடியுமா ? மார்க்கெட் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லாமல் இருக்கும் பலரும் தான் தனியார் மற்றும் அரசு ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். கல்வி விஷயத்தில் லஞ்சம் வாங்கும் எந்த நாடும் உருப்படாது உலகம் அழியும் வரை மேலை நாடுகளுக்கு அடிமையாக தான் வாழவேண்டும். தமிழ்நாட்டில் கடந்த கால தமிழ் பெருமை பேசி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் வடநாட்டில் கடந்த கால ராமர் கோவில் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர். மேலைநாட்டில் நிகழ்காலம் எதிர்கால ஆராய்ச்சிக் மட்டும் தான் நடக்கும். நம் நாட்டில் மட்டும் தான் கடந்த காலத்தை வைத்து காலத்தை ஓட்டும் அவலம் உள்ளது. பின்பு எங்கு ஆராச்சி செய்வது ? மறுபடி மனுஷனில் இருந்து குரங்காக மாறிக்கொண்டு இருப்பது போல தோணுகிறது.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201807:20:26 IST Report Abuse

ஆரூர் ரங்அடிப்படை அறிவியலில் ஆராய்ச்சி செய்யமுன்வருபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். இப்போது ஆசிரியர் வேலை பதவியுயர்வுக்காக மட்டுமே PhD பண்ணுகின்றனர் .ஆராய்ச்சியின் தரமும் தரைமட்டத்துக்கு வீழ்ந்துவிட்டது . நாட்டில் வேலை வாய்ப்பைமட்டுமே கருதி கல்வி இருப்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆராய்ச்சிப்படிப்பில் சேருபவர்களுக்கு ஊக்கம் அவசியம்.அரசுக்கு நன்றி (அப்படியே இந்த கைடுகளுக்குக் கடிவாளம் போடும் சட்டமும் தேவை )

Rate this:
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201807:11:53 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>KAANGKIRES KOLLAI ADA=இச்சால் தியாகி என்பானுக பிஜேபி நல்லதே செய்தாலும் ஐய்யாயோ போச்சே ன்னு கூவுவானுக

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201806:20:05 IST Report Abuse

Kasimani Baskaranஅருமை... 'பிரைன் ட்ரைன்' ஆவதை குறைக்க நல்ல ஒரு முயற்சி...

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-பிப்-201807:05:17 IST Report Abuse

Manianபிரெய்ன் (brain) இருந்தால்தானே டிரைன் (drain) ஆகமுடியும். ஜாதி-மத-ஒதுக்கிடில் பிரைன் ட்ரிரைன் ஏது...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement