'மக்களிடம் சொல்லுங்கள்': எம்.பி.,க்களுக்கு மோடி உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
'மக்களிடம் சொல்லுங்கள்'
எம்.பி.,க்களுக்கு மோடி உத்தரவு

புதுடில்லி : 'தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை, மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: மக்களின் நலனுக்காக, இந்த பட்ஜட்டில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு, விவசாயிகளின் வளர்ச்சிக்கான பல்வேறு அறிவிப்புகள் குறித்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி


எம்.பி.,க்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை, தங்களுடைய தொகுதிக்கு உட்பட்ட மக்களை சென்றடையும் பணியில்,

Advertisement

எம்.பி.,க்கள் ஈடுபட வேண்டும். அடுத்த லோக்சபா தேர்தலில் மட்டுமல்லாமல், சட்டசபை தேர்தல்களிலும், கட்சியின் வெற்றிக்கு அது உதவும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
10-பிப்-201822:15:18 IST Report Abuse

Viswanathan Meenakshisundaramகாங்கிரஸ் ஆட்சி சரியில்லை என்று தானே உங்களை தேர்ந்தெடுத்தோம் . நீங்களும் காங்கிரெஸ்ஸை குறை கூறிக்கொண்டே மக்களுக்கு பயன் தரும் எந்த திட்டத்தையும் நடைமுறை படுத்தவில்லையே 2016 நவம்பர் 8 கு பின் தினம் மக்களை ஏதேனும் அறிக்கை மூலம் பயமுறுத்தி அலைக்கழிப்பதை தவிர வேறென்ன செய்திர்கள்

Rate this:
bal - chennai,இந்தியா
10-பிப்-201816:27:07 IST Report Abuse

balஎன்னத்தை எடுத்து சொல்வார்கள். ஏதாவது சொல்வது மாதிரி இருந்தால்தானே. முதலில் உங்கள் நிதி அமைச்சரை மாற்றுங்கள். புத்தியுள்ளவரை நியமியுங்கள். ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் எப்படி நிதி அமைச்சராக இருக்கலாம். ஒரு திறமையும் கிடையாது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-பிப்-201813:55:37 IST Report Abuse

Pugazh Vத.நாட்டில் ஒரு இடைத்தேர்தலில் நோட்டாவை விட கம்மியா ஓட்டு வாங்கின சாதனை பல வடமாநில மக்களுக்கு தெரியவில்லை.. அதையும் சொல்லுங்கள். உடனே பணநாயகம் திமுக வுக்கு டெபாசிட் போச்சே ன்னு அறிவாளித்தனமாக எழுதி சந்தோஷப்பட்டுக்குவாங்க

Rate this:
vaishnavi - nainital,இந்தியா
10-பிப்-201813:27:08 IST Report Abuse

vaishnaviஉங்கள் பட்ஜெட்ஐ நாங்கள் எடுத்து சொன்னால் நீங்கள் ஜென்மத்திற்கும் ஆட்சியை பிடிக்கமுடியாது .

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
10-பிப்-201812:33:51 IST Report Abuse

Ramakrishnan Natesanஅரசு போக்குவரத்துக் கழக நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடைய எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் உட்பட 21 பேருக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையும் மக்களுக்கு சொல்லுகிறோம்

Rate this:
farmer - ,
10-பிப்-201823:17:21 IST Report Abuse

farmerno one political people doesnt want to think about farmers feeling and thout ...... they are only eating but dont have any sense.......

Rate this:
தேவி தாசன் - chennai,இந்தியா
10-பிப்-201812:24:39 IST Report Abuse

தேவி தாசன்உங்களுடைய பித்தலாட்டங்களை சொல்லித்தான் தெரியணுமா. எல்லோருக்கும் நல்லா தெரியும். இன்னும் ஒரு வருஷத்திலே உங்களுக்கும் தெரிய வரும்

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
10-பிப்-201811:52:37 IST Report Abuse

Rahimஎன்ன கொடும சார் பார்லிமென்ட் ல இவர் பேசும் போது பட்ஜெட்டை விட்டு விட்டு தேர்தல் உரை நிகழ்த்துகிறார் ,கட்சி மீட்டிங்கில் பட்ஜெட்டை பற்றி பேசுகிறார் எல்லாம் உல்டாவா இருக்கு, இத நாம சொன்னா பச்சை, சிகப்பு, ஊதா னு வர்ணம் பேசுவானுங்க.

Rate this:
thennavan - chennai,இந்தியா
10-பிப்-201811:50:39 IST Report Abuse

thennavanமக்களை பற்றி கவலைப்படாமல் சதாசர்வ நேரமும் தேர்தலே சதம் என்று இருக்கும் ஒரு சாதாரண மேடை பேச்சாளரை நம் இப்போது தான் பிரதமராக பெற்று இருக்கிறோம்.

Rate this:
ELAVARASI.R - George town,மலேஷியா
10-பிப்-201811:33:31 IST Report Abuse

ELAVARASI.R உங்கள் கட்சிக்கு தான் எனது குடும்பம் ஆதரவாக இருந்தது ஒரு மாற்றம் வரும் பார்க்கலாம் என்று,உங்களின் அனைத்து மேடைப்பேச்சுகள் கேட்டு அதாவது இன்று சீமான் என்பவர் எப்படி பேசுகிறார் அப்படி இப்படி என அதேபோல தான் இருந்தது எல்லாமே கனவுகள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் திட்டங்கள் என என்னை போல பலர்க்கு புரியாமல் போய் விட்டது,மோடி அலை தான் அணைத்து ஊடங்களிலும் பறைசாற்றின, விவாதங்கள் வாதங்கள் எல்லாமே வீண், நண்பர் ரிஸ்வான், சுகவனம்,பாலகிருஷ்ணன், சண்முகவேல் போல பிறர் இங்கே கருத்துக்களை கூறும்போது அவர்கள் சொல்வது சரியாகத்தான் தோணுகிறது வாயால் வடை சுடுபவர்,கனவுகளை கூவி விற்பவர் என்பது நிஜமோ?

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
10-பிப்-201813:25:26 IST Report Abuse

கைப்புள்ளஹலோ ஜி, நான் உங்களுக்கு மட்டும் மீண்டும் பதில் அளிக்கிறேன். மோடி நாலு வருடத்துக்கு முன்பு நம் முன் கனவுகளை விதைத்தார். திட்டங்களை விரித்தார். ஆனால் மக்களும் அதிகாரிகளும் அதை செயல் படுத்தும் இயந்திரங்களும் ஒன்று கூடி அந்த கனவுகளை முன்னெடுத்து செல்லாமல் நாம் என்ன பண்ணினோம்? சொல்லுங்கள்? மக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு அரசாங்கம் எப்படி முன்னேறும் நாடு எப்படி வளப்படும்? ஜப்பான், சிங்கப்பூர் எப்படி முன்னேறியது? அதிபர்கள் கேட்டு கொண்டார்கள், மக்கள் ஒன்று கூடி உழைத்தார்கள், ஒத்துழைப்பை வழங்கினார்கள், ஜெக ஜோதியாய் முன்னேறினார்கள். ஆனால் இங்கு? இதுவே ஒரு ஒபாமாவோ, வெளிநாட்டுக்காரனோ, வெள்ளைகாரனோ சொன்னால் அவன் காலை நக்கி ஏற்று கொள்ளும் இந்த சோம்பேறி கூட்டம் நம்ம ஆள் என்றவுடன் என்ன எல்லி நகையாட்டம், கேலி கிண்டல், பொறாமை வயித்தெரிச்சல். ஒன்றும் இல்ல. ஒரே ஒரு உதாரணம். ஒரு மிக பெரிய ஜனநாயகத்தின் பிரதமர் என்ன சொல்றார். தூய்மை இந்தியா. இந்தியாவை தூய்மையாய் வைத்து கொள்ள உதவுங்கள்ன்னு கேக்கிறாரு. அனைவரும் முன் வாருங்கள், உதவுங்கள் ன்னு சொல்றார். இங்க இவ்வளவு தூரம் கறிச்சு கொட்டுற ஒரு பயலாச்சும் ஒரு துரும்பை அள்ளி அந்த பக்கம் போட்டு இருப்பானா? ஒன்னும் இல்லை. அவங்க வீட்டு குப்பையை ரோட்டில் போடாமல் இருந்தாலே பாதி இந்தியா சுத்தமாக ஆகி விடும். சென்ஜோமா நாம? இல்லியே? இப்படி ஒவ்வொன்னுக்கும் நம்ம மேல தப்பை வெச்சிட்டு சும்மா மோடி மோசம் மோடி மோசம்னா கடைசி வரைக்கும் இப்புடி கருகிய சாக வேண்டியதுதான். அப்புறம் எவனச்சும் வந்து வெப்பான் ஆப்பு. அப்போ தெரியும் சேதி. இதெல்லாம் வந்து இருவது ரூவாய் டோக்கனுக்கு ஓட்டு போட்டு ஏமாந்துவிட்டு ஓசியில் சரக்கு கேக்கும் கூட்டம். தீருவது மிகவும் கடினம். நீங்கள் உங்களுடைய புரிதலை வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டும் நண்பா....

Rate this:
udanpirappu3 - chennai ,இந்தியா
10-பிப்-201818:00:11 IST Report Abuse

udanpirappu3நாம் என்ன திட்டங்களுக்கு ஒத்துழைக்க வில்லை. குப்பை போடாததால் மட்டுமா சிங்கப்பூர் , ஜப்பான் முன்னேறியது . பிரதமருக்குரிய இலக்கணமே இல்லாமல் பேசுவது,மக்களுக்கு எந்த நம்பிக்கையும் தராது . காங்கிரெஸ்ஸை ஒழிப்போம் என்பது தான் உங்கள் கொள்கை . மக்களை காப்பாற்றி வாழவைப்பது ????????? வேலைகளை உருவாக்காமல் எப்படி ஒரு நாடு முன்னேறும் ?????????...

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
10-பிப்-201810:50:49 IST Report Abuse

ஜெயந்தன்சொல்லவே வேணாம்..மக்களுக்கே தெரியும்.....2019 இல் அவர்களுக்கு என்ன தெரிந்தது என்பதை காட்டுவார்கள்.. அப்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement