'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் கூடாது' Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்
மொபைல் போன் கூடாது'

மதுரை : 'மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள், மொபைல் போனுடன் செல்ல அனுமதிக்கக்கூடாது. கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள, விதிமீறல் கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் கூடாது'


மதுரை வழக்கறிஞர் முத்துகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த, 2009ல் மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலை பராமரிக்க, புதுப்பிக்க மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள, தொல்லியல் துறையினருடன் இணைந்து மாநில அளவில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்., 2ல் தீ விபத்து ஏற்பட்டது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு முன் நடந்த விவாதங்கள் வருமாறு:

மனுதாரர் வழக்கறிஞர்: மீனாட்சி அம்மன் கோவில் கடைகளில், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களைத்தான் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விற்கின்றனர். கோவில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையிலும் தீப்பற்றியது. கோவிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.

நீதிபதிகள்: கோவிலில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

அரசு வழக்கறிஞர்: தேசிய பாதுகாப்புப் படையினர், 2009 லிருந்து அவ்வப்போது கோவிலில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்களின் வழிகாட்டுதல்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீ தடுப்பு கருவிகள் உள்ளன. கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்டது தீ விபத்து அல்ல. மின்கசிவால் உண்டான உராய்வு தான். உடனடியாக சரி செய்யப்பட்டது.

நீதிபதிகள்: பொறியியல் தொழில்நுட்ப அறிவுடன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. பாதுகாக்க வேண்டியது நம் கடமை. கோவில் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளன. கட்டடத்தின் உறுதித் தன்மை எந்த அளவிற்கு உள்ளது?

அரசு வழக்கறிஞர்: ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

நீதிபதிகள்: வீர வசந்தராயர் மண்டபத்தை மட்டுமல்ல, கோவில் வளாகம் முழுவதிலும் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இனி இதுபோல், பொறியியல் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமானத்தை கொண்டுவர முடியாது.

மனுதாரர் வழக்கறிஞர்: 'புராதனச் சின்னங்களான கோவில் மற்றும் அதன் சுற்றுச்சுவரிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் இருக்கக்கூடாது' என, 1997ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விதிகளை மீறி, கோவில் கோபுரங்களை மறைக்கும் வகையில் வணிக நோக்கிலான உயரமான கட்டடங்கள் முளைத்துள்ளன.

நீதிபதிகள்: எப்படி இக்கட்டுமானங்களை மேற்கொள்ள மாநகராட்சி அனுமதித்தது? 20 ஆண்டுகளாக தமிழக அரசும், மாநகராட்சியும் எப்படி நடவடிக்கை எடுக்காமல் உள்ளன? பணம் உள்ளவர்களுக்கு சட்டம் பொருந்தாது என்பதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

நீதிபதிகள் அதிரடி உத்தரவு :


விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மீனாட்சி அம்மன் கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைமிக்கது. இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன.

கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி, 2009ல் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, தமிழக அரசுத் தரப்பில் தவறிவிட்டனர்.

பிப்., 2ல் தீ விபத்தின்போது, கோவிலில் போதியளவு தண்ணீர் இருப்பு இல்லை. இதனால், தீ பெருமளவில் பரவியுள்ளது. கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பழுதடைந்துள்ள மின் ஒயர்களை மாற்றி, புதிதாக பொருத்த வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, வீரவசந்தராயர் மண்டபம் மட்டுமின்றி கோவில் வளாகம் முழுவதும் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். கோவில் சுற்றுச்சுவரிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல், கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலை திருப்பதி, மதுரா கிருஷ்ணன் கோவில் உட்பட முக்கிய வழிபாட்டுத் தலங்களில், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பார்வையாளர்கள், பக்தர்கள் மொபைல் போனுடன் செல்ல அனுமதிக்கக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

காசி விஸ்வநாதர் கோவில், மதுரா, தாஜ்மகாலில் உள்ளது போல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த, மத்திய அரசிடம், மாநில அரசு அணுக வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து, தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், மார்ச் 12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-201812:40:08 IST Report Abuse

kulandhaiKannanவிமானங்களில் செல்ஃபோன் கொண்டுசெல்ல தடையில்லை. எனவே கோவில்களில் ஃபோன் தடை தேவையில்லை

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
10-பிப்-201814:05:14 IST Report Abuse

Agni Shivaமூர்க்கத்தில் சாத்தானின் மீது கல்லெறியலாம் ..ஆகவே ரோட்டில் செல்லும் மூர்க்கத்தின் மீதும் யாரும் கல்லெறியலாம்....

Rate this:
vishwanath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201810:54:52 IST Report Abuse

vishwanathமுதல்ல ஸ்பெஷல் தர்ஷன் டிக்கெட் விலைய கம்மி பண்ணுங்க .. இருபது ரூபாய் இருந்து ஐம்பது ரூபாய் ரொம்ப கொள்ளை ,,, அதை முதல்ல சரி செய்ய வேண்டும் கோர்ட் ....

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
10-பிப்-201810:16:48 IST Report Abuse

P. SIV GOWRIநன்றி. தலைப்பு மாற்றி உள்ளதற்கு. . நலல்து. வாழ்க வளமுடன்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201807:25:55 IST Report Abuse

Kasimani Baskaranதீ விபத்து பற்றிய பதிவுகள் அழியும் வகையில் இரண்டாவது விபத்து ஏற்பாடு செய்தது என்று சொல்கிறார்கள்... கோவிலுக்குள் வியாபாரம் என்பது அக்கிரமம்... இந்து அறநிலையத்துறை என்பது இந்துக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பு... குறிப்பாக ஆன்மீகத்தின் மீதான தீவிரவாத தாக்குதல்...

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
10-பிப்-201810:13:29 IST Report Abuse

P. SIV GOWRIஅழிவு துறை இனிமேல் வேண்டாம்...

Rate this:
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201807:16:52 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இப்போதான் இந்த செல்போன் மொபைல்போனெல்லாம் அன்று நாமெல்லாம் என்னசெய்தொம் நியாபகம் இல்லியா எல்லாமே விபரீதமா தான் இருக்குங்க டிவி வந்தது இன்டர்நெட் வந்தது லப்டப் வந்தது தொலைபேசி அன்று செத்தாலும் பொறந்தாலும் தளத்திலே தான் செய்திவரும் இன்று இவ்ளோ முன்னேற்றம் வரவேற்போம் ஆனால் மனசாந்திக்கு பெயர் பண்ணவர்ரச்ச இந்த தொலைபேசி என்னாத்துக்கு வீட்டுலே கால் பண்ணி இன்னாங்க கொத்துமல்லி இஞ்சிக்கற்பாலே வாங்கிவாங்க ன்னு சொல்லுவாங்க தேவையா

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201806:22:56 IST Report Abuse

Bhaskaranபக்தால்ஸ் செல்போன் உபயோகிக்கப்படாது கொள்ளைக்கார அதிகாரிகள் உபயோகிக்கலாம் இது என்ன iya நீதி

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201805:46:32 IST Report Abuse

ramasamy naickenமுதலில் கோவில்களில் நிறைய கிரெடிட் கார்டு மெஷின்கள் வைத்து நுழைவு கட்டணம், அர்ச்சனை கட்டணம் முதற் கொண்டு எல்லாவற்றையும் வசூலித்தால் பண புழக்கம் குறைந்து, ஊழல் குறைந்து விடும். இப்பொது மிகவும் அட்டூழியம் நடக்கின்றது குறிப்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலில்

Rate this:
skv - Bangalore,இந்தியா
12-பிப்-201802:44:55 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நான் எப்போ காசுக்குத்தான் தரிசன் என்று வந்துச்சோ கோயில் போவதேஇல்லீங்க போனாலும் க்யுலே தான் நின்று போயி தரிசனம் செய்வேன் உண்டியல்லே என்னால் முடிஞ்சக்காணிக்கை போடுவேன்...

Rate this:
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
10-பிப்-201804:00:23 IST Report Abuse

.Dr.A.Josephபுராதன சின்னங்களும் ,சிலைகளும்,கட்டிடங்களும் நமது வரலாற்றின் ஆதாரங்கள் .பண்பாட்டின் அடையாளங்கள் . அவைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்.நிறைந்த அன்புடன்...............................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்,

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
10-பிப்-201810:09:38 IST Report Abuse

Agni Shivaநேர்மையான உங்கள் கருத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே. கோவில்கள் என்பது ஆன்மீக சின்னங்கள் மட்டும் இல்லை.. கோவில்கள் என்பது POWER HOUSE என்பது போல. நீங்கள் சரியான மனநிலையில் கோவிலுக்குள் சென்றால் அந்த சக்தியும் உங்கள் மனதும் சரியான வகையில் tune செய்யப்பட்டு உங்களின் கவலைகளும் பிரச்சினைகளும் தீரும். அதோடு கோவில்கள் என்பது சிலைகள் என்ற சக்தி நிறைந்திருக்கும் பேட்டரிகள் அடங்கிய ஒரு பெட்டகம். . அதன் நோக்கமும், அதன் பயன்பாட்டையும், அருமையையும் இறைவனை நம்பாத, "ஹிந்து மதஅறம் அழிக்கும் துறைக்கு" எங்கே தெரிய போகிறது?...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-பிப்-201803:58:13 IST Report Abuse

ramasamy naickenசட்டம் இயற்றும் அரசியல் வியாதிகளுக்கு சம்பாதிப்பதுதான் ஒரு வேலையா? காதுகுத்து விழாவில் கோடிக்கணக்கில் தேற்றிய செல்லுறான், வியாதிக்காரன் மாதிரி தோன்றும் உதயகுமார், தண்ணிவண்டி செல்லப்பா போன்றோர் என்றாவது மதுரைக்கு இரட்டை ரயில் பாதையை விரைவில் முடித்து நிறைய ரயில்களை விடவேண்டும், மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும், மதுரைக்கு கங்கை தண்ணீர் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்து இருக்கின்றார்களா? இருக்கும் வரை சம்பாதிப்போம் என்பதே எல்லா அரசியல்வியாதிகளின் எண்ணமாக இருக்கின்றது.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
10-பிப்-201810:13:14 IST Report Abuse

Agni Shivaநீங்கள் கூறும் இந்த உதயகுமார், தண்ணிவண்டி செல்லப்பா, கோமாளி சீமான், போன்றவர்கள் இதையே சாக்காக வைத்து நாளையே கொஞ்சம் சொல்லி வைப்பார்கள். பிறகு இந்த திட்டங்களுக்கு மோடி அரசு பணம் ஏற்கனவே ஒதுக்கியது கூட இந்த கோமாளிக்கூட்டம் சொல்லி தான் வந்தது என்று கூவிக்கொள்வார்கள். ஆகவே இந்த கோமாளி கூட்டம் வெளிநாட்டில் இருந்து வாங்கிய காசிற்கு மட்டும் கூவி கொள்ளட்டும்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement