எஸ்.ஐ.டி., விசாரணை தேவை: எதிர்க்கட்சிகள் கோரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
எஸ்.ஐ.டி., விசாரணை தேவை
எதிர்க்கட்சிகள் கோரிக்கை

புதுடில்லி : 'நீதிபதி லோயா மரணம் குறித்து, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்' என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம், காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபதி லோயா மரணம், எஸ்ஐடி விசாரணை, காங்கிரஸ் தலைவர் ராகுல், Congress leader Rahul, எதிர்க்கட்சிகள் கோரிக்கை, சிறப்பு புலனாய்வு குழு , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,president Ramnath Govind, உச்ச நீதிமன்றம்,Judge Loya death, Opposition,   Supreme Court, SIT inquiry, opposition parties demand, special intelligence Team,


குஜராத்தில் நடந்த சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்து வந்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா, 2014, நவ., ௧ல் இறந்தார்; மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், தன் நண்பர் மகளின் திருமணத்தில் பங்கேற்க, அவர் சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

வழக்கு:
லோயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள

எதிர்க்கட்சிகள், இது பற்றி, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கோரி வருகின்றன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதி, லோயா மரணம் பற்றி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சியினர், டில்லியில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து, மனு கொடுத்தனர்.

பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள், தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். சந்தேகமான முறையில், நீதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து, முறையாக விசாரணை நடத்துவது, அவருக்கும், அவரதுகுடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்.

நல்ல பதில்:


ஜனாதிபதியிடம் அளித்த மனுவில், 114 எம்.பி.,க்கள் மற்றும், 15 கட்சிகள் கையெழுத்து போட்டுள்ளனர்.

Advertisement

எங்கள் கோரிக்கை குறித்து, ஜனாதிபதி, நல்ல பதில் அளித்துள்ளார். இவ்வாறு ராகுல் கூறினார்.

காங்,, மூத்த தலைவர், கபில் சிபல் கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அது போல், நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எங்களுக்கு, சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புகள் மீது நம்பிக்கையில்லை. அதனால், சிறப்பு புலனாய்வு குழுவில், சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ.,வை சேர்ந்த யாரும் இடம் பெற கூடாது. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே, உண்மை தெரிய வரும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (14)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
bal - chennai,இந்தியா
10-பிப்-201816:31:02 IST Report Abuse

balஅதே மாதிரி காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்ரீலங்காவுக்கு தமிழர்களை கொலை செய்ய உதவியதற்கு. பின்னர் 1984 பல்லாயிரம் படுகொலை செய்ய துணை நின்றதுக்கு. பின்னர் மற்றவர்கள் பற்றி பேச காங்கிரஸ் முயற்சி செய்யலாம்.

Rate this:
bal - chennai,இந்தியா
11-பிப்-201811:01:35 IST Report Abuse

balஇந்த கருத்துக்கு காங்கிரஸ் அல்லக்கைகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. உண்மை நிலவரம் தெரியாமல் இன்னும் ஏன் காங்கிரஸ்க்கு அடிமையாக இருக்கிறீர்கள். நான் ஒன்னும் எந்த அரசியல் கட்சியை சேர்த்தவன் இல்லை....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201815:46:43 IST Report Abuse

Endrum Indianஅவரை கொன்றவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் சொல்படி என்று கொளுத்திப்போட்டா உடனே இந்த எஸ்.ஐ.டி. விசாரணை உடனே வாபஸ் பெறப்படும். ஏனென்றால் அவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு துணை செல்பவர்கள், ஆகவே சோராபுதீன் இந்திய நாட்டின் விடுதலைக்காக இடைவிடாது உழைத்த தியாகச்செம்மல் கொலை வழக்கு என்று பல வருட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆமா மத்தியில் ஆட்சி செய்தது யாரு? அந்த வழக்கு போட்டு அதன் தீர்ப்பு என்ன? பிறகு எதற்கு கூப்பாடு.

Rate this:
10-பிப்-201807:26:51 IST Report Abuse

JShanmugaSundaramகான் கிராஸுக்கு இந்தியநாட்டின் மீதும் இந்தியமக்கள்மீதும் நம்பிக்கைவராது ஏன்என்றால் எல்லோரும் பிஜேபிக்கே ஓட்டுபோட்டதால் இனிநடக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆலும் மாநிலங்கள் மேலும் இத்தாலியில் உள்ளவர்கள் ஓட்டுபோடுவரை போராடுவோம் இப்படிக்கு கான்கிராஸ் இடதுசாரிகள் எதிர்கக்ஷிகள் நல்லாவருவீங்க இங்கேதமிழ்நாடு குட்டி பாக்கிஸ்தன் ஆப்கானிஸ்தானாகமாற்றாமவிடமாட்டீங்க

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X