மத்திய மின் திட்ட பணிகள் : 'பவர் பைனான்ஸ்' ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய மின் திட்ட பணிகள் : 'பவர் பைனான்ஸ்' ஆய்வு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நகரங்களில், 24 மணி நேரமும் தடையின்றி, சீராக மின்சாரம் சப்ளை செய்ய, ஒருங்கிணைந்த மின் மேம்பாடு என்ற திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள நகரங்களில், புதிய துணைமின் நிலையம் மற்றும் மின் வழித்தடம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, மத்திய அரசின், பவர் பைனான்ஸ் நிறுவனம், மின் வாரியத்திற்கு, 1,561 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.இந்நிலையில், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைந்த மின் மேம்பாடு திட்ட பணிகள் தொடர்பாக, பவர் பைனான்ஸ் உயரதிகாரிகள், நேற்று ஆய்வு நடத்தினர். அவர்களிடம், பணிகள் குறித்து, மின் வாரிய பொறியாளர்கள் விவரித்தனர்.இதைத்தொடர்ந்து, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், சீரான மின் சப்ளைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும், தீன்தயாள் உபாத்யாயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின் மேம்பாடு திட்டப் பணிகள் தொடர்பாக, பவர் பைனான்ஸ் அதிகாரிகள், மின் வாரியத்துடன் இணைந்து, வரும், 16, 17ல், கள ஆய்வும் மேற்கொள்ள உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X