தஞ்சை - திருச்சி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை - திருச்சி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தஞ்சை - திருச்சி இடையே அதிவேக ரயில் இன்ஜின் சோதனை

திருச்சி: தஞ்சை - திருச்சி இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை, அதிவேக ரயில் இன்ஜினை இயக்கி, அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். தஞ்சை - திருச்சி பொன்மலை வரை, 49 கி.மீ.,க்கு இரட்டை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, 2011 பட்ஜெட்டில், முதல் கட்டமாக, 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த பணியை, 'ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட்' நிறுவனம் செய்து வந்தது. வழித்தடத்தில், 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், மூன்று இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும், பூதலுார், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பொன்மலையில் இருந்து சோளகம்பட்டி வரை பணிகள் நிறைவு பெற்றதால், இந்த இரட்டை பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக, சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரையிலான பணிகள் தீவிரமாக நடந்தன. இந்த பணிகளும் நிறைவு பெற்றதால், நேற்று தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை, சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக திருச்சியில் இருந்து, நான்கு பேர் அடங்கிய குழுவினர், நேற்று தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். பின், சோளகம்பட்டி வரை, 35 கி.மீ.,க்கு, 140 கி.மீ., வேகத்தில் சோதனை ரயிலை இயக்கினர். இந்த சோதனையின் முடிவுகளை, இந்த குழுவினர், ரயில்வே பாதுகாப்பு கமிஷனரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.'ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொண்ட பின், தஞ்சை - திருச்சி இரட்டை பாதையில் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்படும்' என, ஆய்விற்கு வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை