கருகும் நெல் பயிர்களை காப்பாற்ற கடைசி முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருகும் நெல் பயிர்களை காப்பாற்ற கடைசி முயற்சி

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தண்ணீர் பற்றாக்குறையால் காய்ந்து வரும் நெல் பயிர்களை காப்பாற்ற, விவசாயிகளுடன் இணைந்து, வேளாண்துறையினர் கடைசி கட்ட முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.
12.50 லட்சம் ஏக்கர் : தமிழக டெல்டா மாவட்டங்களில், 12.50 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்துஉள்ளது. விவசாயிகள், காலம் தாழ்த்தி சாகுபடியை துவங்கியதால், இந்த மாவட்டங்களில், இன்னும் அறுவடை முடியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்கான நீர் திறப்பு, ஜன., 28ல் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், பாசனத்திற்கு நீர் இல்லாமல், பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதுவரை, 3.50 லட்சம் ஏக்கர் வரை மட்டுமே, அறுவடை நடந்துள்ளது. மீதம், 9 லட்சம் ஏக்கர் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இந்த பயிர்களை காப்பாற்ற, விவசாயிகளுடன் இணைந்து, வேளாண் துறையினர், கடைசி கட்ட முயற்சி மேற்கொண்டுஉள்ளனர்.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் பயிர்களை காப்பாற்ற, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, வேளாண் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதை, செயல்படுத்தும் பொறுப்பு, வேளாண் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழிமுறை : வேளாண் அலுவலர்கள், விவசாயிகளை சந்தித்து, தெளிப்பு நீர்ப்பாசனம், மண்ணின் ஈரத்தன்மையை காத்தல், உரம் பயன்படுத்தி பயிர்களை காக்கும் வழிமுறைகளை விளக்கி வருகின்றனர். இதை, விவசாயிகளும் ஆர்வமுடன் செயல்படுத்துகின்றனர். இருப்பினும், நெல் மணிகள் முற்றிய பயிர்களை மட்டுமே, இந்த முயற்சியால் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை